ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர்
வாழ்க்கை குறிப்புகள்


பட்டத்தில் இருந்த காலம்
1480 ~1600
பிருந்தாவனமான இடம்
ஸோதே
(கர்நாடகா)
குருவின் பெயர்
ஸ்ரீ வாகீச தீர்த்தர்


சிறப்பு
ஸ்ரீ வாதிராஜர் 120,ஆண்டுகள் வாழ்ந்தா மகான்


ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்யும்
வழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ மண்டி என்று
அழைக்கப்படுகிரது.
ஸ்வாமிக்காகத் தயாரிக்கப் பட்ட நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்துத் தன் இரு
கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுவார்
ஸ்ரீவாதிராஜர்.
அவருக்குப் பின்புறமாய் அந்த வெள்ளைக் குதிரை வடிவில்
ஸ்ரீஹயக்ரீவர் வந்து , தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களில்
வைத்துக் கொண்டு, நைவேத்தியத்தை உண்ணுவார்.


ஸ்ரீவாதிராஜருக்கும் அதில் கொஞ்சம்
மீதி வைப்பார். இறைவனின் உண்மையான பிரசாதம் ஆன அதை ஸ்ரீவாதிராஜரும் தினமும்
உண்டு வந்தார். இது அன்றாடம் நடக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் ஒரு சிலருக்கு
ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போகுமல்லவா?? உலக நியதிக்கு ஏற்ப இப்போது
ஸ்ரீமடத்திலும் சிலருக்கு வாதிராஜரின் அருகே வெள்ளைக் குதிரை வடிவில்
ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து உண்ணுவதை நம்ப முடியாததோடு அல்லாமல், அதனால்
வாதிராஜரின் கீர்த்தி அதிகரிப்பதைக் கண்டு பொறாமையும் உண்டானது. ஆகவே வாதிராஜர்
தினமும் நைவேத்தியக் கடலைப் பிரசாதத்தை உண்ணுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அந்த நைவேத்தியத்தில் விஷம் கலந்தால், வழக்கப் படி மீதியை உண்ணும்போது விஷம்
கலந்த கடலையை உண்ணும் வாதிராஜர் இறந்து போய் விடுவார் என்று எண்ணிக் கொண்டு,
ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷத்தைக் கலந்து வைக்கின்றார்கள்.


ஆனால் தன் பக்தன் ஒருவன் அநியாயமாய் இறப்பதைக் கண்டு கொண்டு இறைவன் சும்மாவா
இருப்பான்?? பக்தனை எப்பாடு பட்டாவது காக்க மாட்டானா?? ஆகவே விஷயத்தைப்
புரிந்து கொண்ட குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் அன்றைய பிரசாதத்தை முழுதும்
உண்டுவிட்டு, மயங்கிக் கீழே விழுந்தார். ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப்
பிரசாதம் மிச்சமில்லாதபோதே புரிந்து கொண்ட வாதிராஜர் குதிரை மயங்கிக் கீழே
விழவும், இறைவனைத் தியானித்துக் கொண்டு, "வாதிராஜ குள்ளா" என்னும் ஒருவகைக்
கத்தரிக்காயை வேகவைத்துக் குதிரைக்குக் கொடுக்க விஷம் நீங்கிய குதிரை துள்ளிக்
குதித்தது. ஒவ்வொரு வருஷமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வரும்
ஹயக்ரீவரின் ஜெயந்தி நாள் அன்று இந்த நைவேத்தியத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு அனனவருமே
செய்து வழிபடலாம்.


ஸ்ரீவாதிராஜர் அதன் பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனுக்கும், ஹயக்ரீவருக்கும் தொண்டுகள் பல புரிந்து, கி.பி. 1600-ம்
ஆண்டு "ஸோதே" மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்