Announcement

Collapse
No announcement yet.

Lemon used for billi, soonyam - Grandma - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lemon used for billi, soonyam - Grandma - Periyavaa

    "பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும்
    .பண்ண முடியாதுங்கறது"


    (சுவாமிக்கு சமமா போற்றப்படற நம் ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து, நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் -பில்லி சூனிய பாட்டியும் அனுகிரஹமும்)


    சொன்னவர்-- பி. ராமகிருஷ்ணன்


    நன்றி-குமுதம் பக்தி ஸ்பெஷல்-2015
    (ஓரு பகுதி-மறுபதிவு)


    சுவாமிக்கு சமமா போற்றப்படற ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் ஒண்ணைதான் நான் இப்போ சொல்லப்போறேன்.


    ஒரு சமயம் காஞ்சி மடத்துல பெரியவா, பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். எத்தனை எத்தனையோபேர் எங்கெங்கே இருந்தெல்லாமோ வந்திருந்தா. வரிசை ரொம்ப பெரிசா இருந்தது.


    வந்திருந்தவாள்ல அடிக்கடி வர்றவா, எப்போதாவது வர்றவா, புதுசா வர்றவான்னு எல்லா தரப்பும் இருந்தா. அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயசு உள்ள ஒரு பாட்டியும் இருந்தா. நெத்தி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுண்டு , தழையத் தழைய பட்டுக் கட்டிண்டு இருந்தா அந்தப் பாட்டி, பத்தாக்குறைக்க கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளையும் போட்டுண்டு இருந்தா.


    பார்க்கறவா எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே மதிக்கத்தோணும். அப்படி ஒரு தோற்றம் அந்தப் பாட்டிக்கு ரொம்ப பக்தி நிறைஞ்சவா, அவாகூட நாமளும் வர்றதே பாக்யம்னு நினைச்சு சந்தோஷமா வரிசைல வந்தா எல்லாரும்.


    ஆச்சு, ஒருவழியா பாட்டியோட முறை வந்துது, மகாபெரியவாளை ரெண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினா அந்த மூதாட்டி.ஆசார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறா, பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா.


    "மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!' உத்தரவிட்டார்.


    அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவாளுக்கோ ஆச்சரியம். "பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!' ஆளாளுக்கு பேசிக்க ஆரம்பிச்சா.


    ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா.


    "இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்'


    பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, "பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்' கேட்டா.


    "அதான் காசுவாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே... அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!'


    மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னன்னு தெரிஞ்சுது. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் விலகி நின்னா.சட்டுன்னு பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி


    -
    , "என்னை மன்னிச்சுடுங்கோ... காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ'ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா.


    கொஞ்ச நேரம் கழிச்சு, "உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!'ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார்.


    இப்போ, சொல்லங்கோ மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு எல்லாரும் சொல்றது சத்தியமான வார்த்தைகள்தானே!
Working...
X