Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 10 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 திவ்ய தம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 10 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 திவ்ய தம

    ��


    श्री स्तुति : 10 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��




    திவ்ய தம்பதிகளின் ஒற்றுமை !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    आपन्न - आर्ति , प्रशमन , विधौ ; बद्ध , दीक्षस्य , विष्णो: ;

    आचख्यु: ! त्वाम् , प्रिय , सहचरीम् , ऐकमत्य - उपपन्नाम् ; |

    प्रादुर्भावै: , अपि ; सम , तनु: , प्राध्वम् , अन्वीयसे ! त्वम् ;

    दूर , उत्क्षिप्तै : , इव , मधुरता ; दुग्ध , राशे : , तरङ्गै: ||


    ��


    ஆபன்ன - ஆர்த்தி , ப்ரசமந , விதௌ ; பத்த , தீக்ஷஸ்ய , விஷ்ணோ: ;

    ஆசக்யு : ! த்வாம் , ப்ரிய , ஸஹசரீம் , ஐகமத்ய - உபபன்னாம் ;

    பிராதுர்பாவை: , அபி ; ஸம , தநு : , ப்ராத்வம் , அன்வீயஸே ! த்வம் ;

    தூர , உத்க்ஷிப்தை : , இவ , மதுரதா ; துக்த , ராசே : , தரங்கை:


    ��


    आपन्न ......... ஆபத்தை , அடைந்தவர்களின் ,


    आर्ति ........... துன்பத்தை ,

    प्रशमन ......... ஒழிக்கும் ,

    विधौ ............ செயலில் ,

    बद्ध दीक्षस्य .... விரதம் , கொண்ட ,

    विष्णो: .......... எம்பெருமானுக்கு ;

    त्वाम् ............. உன்னை ,

    ऐकमत्य .......... மன ஒற்றுமையோடு ,

    उपपन्नाम् ......... கூடிய ,

    प्रिय ............... பிரியமான ,

    सहचरीम् ......... துணையாக ,

    आचख्यु: ......... வேதங்கள் கூறின.

    दूर ................. தூரத்தில் ,

    उत्क्षिप्तै : ......... வீசிய ,

    दुग्ध राशे : ........ திருப்பாற்கடலின் ,

    तरङ्गै: ............ அலைகளுடன் ,

    मधुरता इव ........ இனிமை போல

    त्वम् ............... நீ

    प्रादुर्भावै: अपि ..... அவதாரங்களிலும் , கூட ,

    सम तनु: ............ ஒத்த , திருமேனியோடு ,

    प्राध्वम् ............. ஒற்றுமையாகத்

    अन्वीयसे ........... தொடர்கிறாய் !

    ��



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��

    * பெரிய பிராட்டியே !

    * உன் நாயகனான எம்பெருமான் , எவன் துன்பம் அடைந்தாலும் , அவன் துன்பத்தை , ஒழிப்பதை , ஒரு வேள்வியாகக் கருதி , இதற்காக , தீக்ஷை (விரதம்) கொண்டுள்ளான். இந்த வேள்வியில் , அவனோடு , ஒ ஸங்கல்பம் பூண்டவளாய் , அவன் உள்ளத்துக்கு , உகந்த துணைவியாய் , நின்று , இந்த வேள்வியை செவ்வனே , நடத்தச் செய்கிறாய் . இந்தக் கருத்தை , வேதங்கள் , கூறுகின்றன.

    * அடியார்களைக் காப்பதற்கு , அவன் , ராமன் , கிருஷ்ணன் முதலிய , பல் வேறு திருமேனிகளைக் கொண்டு , பல அவதாரங்களைச் செய்கிறான் . அப்பொழுதெல்லாம் , நீயும் , அவற்றுற்கு , ஏற்றவாறு , ஸீதை , ருக்மிணி என்று , திருமேனிகளை எடுத்துக் கொண்டு , காத்தல் தொழிலை , நன்கு நடை பெறுமாறு செய்கிறாய்.

    * ஒரு கணமும் , நீ ,அவனை விட்டுப் பிரிவதில்லை. திருப்பாற்கடலின் அலைகள் , வெகு தூரம் சென்று , வீசினாலும் , அதன் இனிமை , கூடவே இருப்பது போல் , உன் நாயகன் , ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு , வேறு உலகம் வந்து , அவதாரம் செய்தாலும் , நீயும் அவனுடன் வந்து , அவ்னக்குத் துணை புரிகிறாய் . பாற்கடலை விட்டு , இனிமை பிரியாது அல்லவா ?

    ��










Working...
X