Announcement

Collapse
No announcement yet.

श्री स्तुति : 11 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்டிய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री स्तुति : 11 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்டிய&

    ��


    श्री स्तुति : 11 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��




    பிராட்டியின் திருமேனி அழகு !


    ��





    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम: I


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    धत्ते ! शोभाम् ; हरि , मरकते ; तावकी , मूर्ति: , आद्या ;

    तन्वी ; तुङ्ग , स्तन , भर , नता ; तप्त , जाम्बून , दाभा ; |

    यस्याम् , गच्छन्ति - उदय , विलयै: ; नित्यम् ; आनन्द , सिन्धौ ;

    इच्छा , वेग - उल्लसित , लहरी ; विभ्रमम् , व्यक्ताय: , ते ||

    ��


    தத்தே ! சோபாம் ; ஹரி , மரகதே ; தாவகீ , மூர்த்தி: ஆத்யா ;

    தன்வீ ; துங்க , ஸ்தன , பர , நதா ; தப்த , ஜாமபூன , தாபா ; |

    யஸ்யாம் , கச்சந்தி - உதய , விலயை: ; நித்யம் ; ஆனந்த , ஸிந்தௌ ;

    இச்சா , வேக - உல்லஸித , லஹரீ ; விப்ரமம் , வ்யக்தய: , தே ||


    ��

    आनन्द ......ஆனந்தக் ,

    सिन्धौ ...... கடலாக உள்ள ;


    यस्याम् ..... எந்தத் திருமேனியில் ,

    ते ........... உன்னுடைய ,

    व्यक्तय: ... அவதாரங்கள் ,

    उदय ....... தோன்றுவதாலும் ,

    विलयै: ..... மறைவதாலும் ;

    इच्छा ....... ஸங்கல்பத்தின் ,


    वेग ......... வேகத்தால் ;

    उल्लसित .. எழும்புகின்ற ,

    लहरी ...... அலைகளின் ,

    विभ्रमम् .....லீலையை ,

    गच्छन्ति ... அடைகின்றனதும் ;

    तप्त ........ உருக்கிவிட்ட ,



    जाम्बून .... பொன் போன்ற ,

    दाभा ....... ஒளியை உடையதும் ;

    तुङ्ग ....... பருத்த ,

    स्तन ........ கொங்கைகளின் ,

    भर ......... சுமையால் ,

    नता ........ வளைந்திருப்பதும் ;

    तन्वी ....... மெல்லியதும் ;

    आद्या ...... முதன்மையானதுமான ;

    तावकी .... உன்னுடைய ,

    मूर्ति: ...... திருமேனி ,

    मरकते .... மரகதம் போன்ற

    हरि ....... எம்பெருமான் திருமேனியில் ,

    नित्यम् .... எப்பொழுதும் ,

    शोभाम् ... அழகைத் ,

    धत्ते ....... தருகிறது !

    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:


    * பெரிய பிராட்டியே !

    * ஸ்ரீவைகுண்டத்தில் , எம்பெருமானின் திருமேனி , பர ரூபம் எனப்படுகிறது. இந்த ரூபத்திலிருந்து , மற்ற , அவதாரத் திருமேனிகள் தோன்றுகின்றன . இது முதல் காரணமான திருமேனி. இது மரகத மணி போன்ற நிறம் கொண்டது.


    * அவ்வாறே , உனக்கும் பர ரூபம் எனும் திருமேனி உள்ளது. இது , உருக்கிவிட்ட பொன்னின் நிறம் கொண்டது. கொடி போல் மெல்லியது. பருத்த, திரு முலைத்தடங்களின் கனத்தால் , திருமேனியை , சற்று வளைந்து , இருக்கும். இந்த ரூபத்திலிருந்து தான் , அவதாரத் திருமேனிகள் , தோன்றுகின்றன . ஆதலால் , இதுவும் , முதல் திருமேனி , ஆகிறது.

    * எம்பெருமானின் , மரகத மணித் திருமேனியில் , பொன் நிறம் கொண்ட நீ எழுந்தருளி இருப்பதால்,இரண்டு திருமேனி நிறமும் கலந்து, அவனுடைய திருமேனி , மேலும் அழகாகிறது.

    * உன் திருமேனியும் , ஆனந்த ரூபமானது. ஆனந்தக் கடல் என்றும் கூறலாம். இந்தத் திருமேனியிலிருந்து, உன் ஸங்கல்பத்தின் , வேகத்தால் , , பற்பல அவதாரத் திருமேனிகள் தோன்றுகின்றன.அவை , அவதாரக் காரியம் முடிந்ததும் , மீண்டும் , உன் ,பரரூபத்தில் , வந்து , மறைகின்றன .இவை கடலில் , காற்று வேகத்தில் , அலைகள் தோன்றுவது போல் உள்ளது.

    [ பரரூபம் கடல் ; ஸங்கல்பம் காற்று ; அவதாரத் திருமேனிகள் அலைகள் ]





Working...
X