அன்புள்ள சுமதி அக்கா,
Click image for larger version. 

Name:	potato-chips.jpg 
Views:	296 
Size:	16.7 KB 
ID:	250
உருளக்கிழங்கு வருவல் ஆத்துல பண்ணினா,
கடைல பண்றமாதிரி மெலிசா, மொருமொருன்னு வெளிர் மஞ்சளா வரமாட்டேங்கறது.
டேஸ்டும் அந்தளவுக்கு நன்னால்லை. ரொம்பச் சிவந்துபோய் தீசல் வாசனை வந்துடறது.
சரி கொஞ்சம் முன்னாலேயே எடுப்போம்னா சரியா வேகமாட்டேங்கறது?
என்ன பண்ணறது கொஞ்சம் விவரம் போடுங்கோக்கா.
ரொம்ப சிரமப்படுத்தறேன்னு நினைக்கிறேன்.

இந்த படத்தை போஸ்டிங்கில் எப்படிச் சேர்ப்பது என்பதை அட்மின் அங்கிள்தான்
சொல்லிக்கொடுத்தார்.
நன்றி

-----

ரொம்ப சுலபம் தான். கவலைப்படாதிங்க .உருளை கிழங்கை தோல் சீவவும். மோர் கொஞ்சம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணிரில் விட்டு அதில் சீவின உருளைக்கிழங்கை சீவிப்போடவும். பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஒரு துணி இல் உலர்த்தவும். பிறகு பொரிக்கவும். அல்லது தோல் சீவின உருளைக்கிழங்கை எண்ணெய் மேலேயே பிடித்து சீவவும். இப்படி செய்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்லா மொரு மொறுப்பாக வெள்ளையாக இருக்கும். முயன்று பார்க்கவும். பதில் போடவும்.

---

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

---
Lakshmi, can I join this thread in the 'sticky' thread? Please dont mistake me :-)

---
உங்க ரெகுலர் போஸ்டிங்க்ல குறுக்க நுழைய வேண்டாம்ங்கறத்துக்காகத்தான்
தனியா சந்தேகம் கேட்டு ஒரு பதிவை ஆரம்பிச்சேன் சுமதி அக்கா.
நீங்க என்னடான்னா என்ன கேக்கிறீங்க,
நீங்க சைட் லீடர்ங்கறத மறந்துடறேள் போல இருக்கு.
எங்களைப்போல சாதாரண மெம்பர்கள்தான் உங்ககிட்ட பர்மிஷண் கேக்கணும்.

தனியாக ஒரு சந்தேஹ நிவாரணி தொடங்கி அசத்திட்டேள்.
எனக்குத்தான் நிறைய சந்தேஹம் இருக்கு.
ஆனா ஒரு நாளைக்கு சாயந்திர வேளையில் கொஞ்ச நேரம் மட்டும்தான்
என்னால சைட்டுக்கு வரமுடியும், அந்த நேரத்துல கரண்ட் இருக்கணும்
கரண்ட், இன்டர்நெட் கட்டாறத்துக்குள்ள நான் தமிழைத் தடவித் தடவி அடிக்கணும்.
சரிக்கா, நான் ஆலு சன்னாவுக்கு எல்லாம் ரெடி பண்ணி வைச்சுட்டு வந்திருக்கேன்
போய் பண்ணிப் பாத்துட்டு நாளைக்கு உங்களுக்கு பதில் போடறேன்.
ரொம்ப நன்றி.
லக்ஷ்மி.

---
லக்ஷ்மி, தேங்க்ஸ். இங்கு உங்க சந்தேகங்கள் எல்லாம் கேளுங்கோ, எனக்கு ததெரிந்த வரை பதில் சொல்கிறேன். உங்களுக்கு முடியும் போது வாங்கோ , நான் எனக்கு முடிந்த போது பதில் போடுகிறேன்
---

ஶ்ரீ:
சுமதி மாமி,
அடியேனுக்கு ஒரு சந்தேஹம்.
கடப்பா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது என்ன, அதை எப்படிச் சுவையாகச் செய்வது?
மேலும் லக்ஷ்மி மேடம் சொன்னது போல, கொஞ்சம் தளர கூட்டு மாதிரி
தொட்டுக்கச் சொல்லுங்கோ.
இன்னொரு விஷயம்,
இந்த டிபன் சாம்பார் வெங்காயம் போடாம எப்படி ஹோட்டல் டேஸ்ட்
கொண்டுவரது?
நன்றி!
என்.வி.எஸ்

---
ஶ்ரீ:
சுமதி மாமி,
அடியேனுக்கு ஒரு சந்தேஹம்.
கடப்பா என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது என்ன, அதை எப்படிச் சுவையாகச் செய்வது?
மேலும் லக்ஷ்மி மேடம் சொன்னது போல, கொஞ்சம் தளர கூட்டு மாதிரி
தொட்டுக்கச் சொல்லுங்கோ.
இன்னொரு விஷயம்,
இந்த டிபன் சாம்பார் வெங்காயம் போடாம எப்படி ஹோட்டல் டேஸ்ட்
கொண்டுவரது?
நன்றி!
என்.வி.எஸ்
உங்களுக்கான பதில்கள் இங்கே மாமா

1 . கடப்பா என்பது தோசை இட்லி க்கு தொட்டுக்கொள்ள செய்வது. நம் தென் தமிழ்நாட்டின் ஒரு டிஷ். ஆனால் பூண்டு, வெங்காயம் சோம்பு இல்லாமல் செய்ய முடியாது ;(

2 . கண்டிப்பாக தளர தொட்டுக்கொள்ளும் 'டால்' போன்ற வகைகளை போடுகிறேன்

3 . ஹோட்டல் சாம்பார் என்றாலே சின்ன வெங்காய ம சேர்ப்பாளே ! அதே சாம்பார் மைனஸ் வெங்காயம் போடுகிறேன் அது taste தேவலாமா என்று நீங்க தான் சொல்லணும். சரியா?

ஒரு சின்ன request மாமா ........ request தான், சுமதி என்று சொல்லி கூப்பிடுவதை விட என்னை க்ருஷ்ணாம்மா என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என் பையன் பேர் கிருஷ்ணா, அவன் friends அம்மாக்கள் க்ருஷ்ணாம்மா,க்ருஷ்ணாம்மா ...என்று கூப்பிட்டு கூப்பிட்டு பழக்கமாகி விட்டது, காதுக்கு அந்த பரமாத்மா பேரை கேட்டு கேட்டு சந்தோஷமாகி விட்டது. என் சொந்த பேரே மறந்து விட்டது. நிஜம் மாமா நான் என்னை Mrs Sundar என்று அல்லது க்ருஷ்ணாம்மா என்றோ தான் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வது வழக்கமாகி விட்டது அதனால் தவறாக நினைக்கவேண்டாம்

---

wonderful thread; surely I expect many members will participate and provide us rich knowledge about cooking, particularly iyengar cooking.
Thank you Krishnamma Mami, by calling you we invoke Lord Krishna and invite him to our house. As many times as we address you, sure we will have so much blessings from Lord.
Bye

---
Originally Posted by Priya Radhi
wonderful thread; surely I expect many members will participate and provide us rich knowledge about cooking, particularly iyengar cooking.
Thank you Krishnamma Mami, by calling you we invoke Lord Krishna and invite him to our house. As many times as we address you, sure we will have so much blessings from Lord.
Bye
So nice of you Radhi, you also having a very nice name

ya, I am also waiting for some question

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends---