Announcement

Collapse
No announcement yet.

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !



    இஞ்சி தேங்காய் சாதம்

    காலையில் வேலைக்கு செல்லும் போதும் சரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் சரி, வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு எளிமையாக இருக்கும். அத்தகைய கலவை சாதத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு கலவை சாதம் தான் இஞ்சி தேங்காய் சாதம். இந்த இஞ்சி தேங்காய் சாதம் செய்வது என்பது மிகவும் ஈஸியானது. மேலும் பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த இஞ்சி தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

    தேவையான பொருட்கள்: அரிசி - 2 கப் இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) தேங்காய் பால் - 1/2 கப் பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) மிளகு தூள் - தேவையான அளவு துளசி - 6 இலைகள் வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பேனில் வெண்ணெயை போட்டு, இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் அரிசி, தேங்காய் பால், 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தண்ணீர் முழுவதும் வற்றி, சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் ரெடியாக இருக்கும்.

    Source: Maha

    Read more at: http://tamil.boldsky.com/recipes/veg...ce-003786.html

    Comment


    • #17
      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

      மேற்கண்ட ரெஸிபியில் பூண்டு வெங்காயம் தவிர்த்து செய்தால் ந்ன்றாக இருக்குமா சார்?

      Comment


      • #18
        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

        தாரளமாக செய்யலாமே.நீர் செய்து பார்த்து ருசித்து எனக்கும் தெரிவிக்கவும்.

        Comment


        • #19
          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

          Veppampoo rasam


          By
          : Madhangi
          Category : Curry leaves, Tamilnadu, South Indian lunches
          Servings : 5-6
          Time Taken : 15-30 mins
          Method
          1. Crackle mustard; add the tur dal and red chillies and fry.
          2. Pour the tamarind extract and add asafoetida, salt and green chillies.
          3. Let it boil for some time until it reduces to half its quantity.
          4. Add some dal water or plain water and wait till a froth forms. Do not boil after adding water.
          5. Add the curry leaves.
          6. Now fry the veppampoo in some oil and add to the rasam while still hot.
          7. There will be sizzling when you drop them.
          8. Serve with hot rice and ghee.
          9. Traditionally, this dish is prepared on Tamil New Year`s Day



          ngredients:
          1 cup - tamarind extract
          2 - green chillies
          2 - red chillies
          Salt to taste
          1 tsp - mustard
          1 tsp - tur dal
          1 tsp - asafoetida
          3-4 tsp - veppampoo/dried neem leaves

          Comment


          • #20
            Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

            நாவுக்கினிய நவராத்திரி

            வீட்டுக்கு கொலு பார்க்க வருபவர்களுக்கு, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் மட்டும் தானா! கூடுதலா ஏதாச்சும் செய்து கொடுக்க நினைச்சிருப்பீங்க இல்லியா! இதோ! நவராத்திரி டிபன்! செஞ்சு பாருங்களேன்!

            தக்காளி பர்பி:
            தேவையானவை: தக்காளி - அரை கிலோ
            சர்க்கரை - அரை கிலோ
            தேங்காய் துருவியது - ஒரு மூடி
            ஏலக்காய் பவுடர் - ஒரு டீ ஸ்பூன்
            செய்முறை: தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோலுரித்து சற்று அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். தேங்காயை சிறிதளவு நெய்யில் வதக்கி எடுக்க வேண்டும். அது பொன்னிறமாக இருக்க வேண்டும். அடிப்புறம் அகலமான பாத்திரத்தில் தக்காளி விழுது, வதக்கிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். தீயை குறைவாக வைத்து விடாமல் கிளற வேண்டும். கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு வரும் பருவத்தில் இறக்கிவிட வேண்டும். அகலமான தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி சமமாக பரப்பி சிறிது ஆறியவுடன் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி எடுத்து விடவேண்டும். பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியான பலகாரம் இது.

            உருளைக்கிழங்கு அல்வா
            தேவையானவை:
            உருளைக்கிழங்கு - கால் கிலோ
            சர்க்கரை - கால் கிலோ
            பால் - அரை லிட்டர்
            கிரீம் - 2 டீ ஸ்பூன்
            நெய் - 2 டீ ஸ்பூன்
            ஏலக்காய் பவுடர் - ஒரு டீ ஸ்பூன்
            தேங்காய் துண்டு - சிறிதளவு
            பாதாம்பருப்பு - சிறிதளவு
            வெள்ளரி விதை - சிறிதளவு
            முந்திரி - சிறிதளவு
            காய்ந்த திராட்சை - சிறிதளவு
            செய்முறை: பாதாம், முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, தேங்காய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு நெய்யில் பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை அவித்து தொலி உரித்து மசித்துவிட வேண்டும். இந்த மசியலை வாணலியில் இட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்க வேண்டும். அதில் சர்க்கரை, பால் முதலியன சேர்த்து சிறிதளவு தீயில், விடாமல் கிளற வேண்டும். கலவை அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய், கிரீம் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். வறுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி கலவையை இதன்மேல் தூவி பரிமாறலாம்.



            Comment


            • #21
              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

              என்ன ஒரு தெளிவான விளக்கம். மிகவும் நன்றி. பயனுள்ள குறிப்பாகும்

              Comment


              • #22
                Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                ஆண்களுக்கான சமையல் குறிப்பு

                மனம் விரும்பி, இது என் வேலை என மனம் ஒப்பிச் சமைக்க வரும் ஆண்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னை/கேள்வி இன்றைக்கு என்ன குழம்பு வைப்பது, என்ன காய் சமைப்பது என்பதுதான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் பெண்கள் சந்தித்துவரும் கேள்விதான் இது. நூற்றுக்கணக்கான குழம்புகள் அறிந்த பாட்டிமார்கள் இப்போது நம்மோடு இல்லை. இங்குதான் சமையல் குறிப்புப் புத்தகங்கள் நமக்குக் கை கொடுக்கும்.
                என் சமையல் அனுபவத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நாமே செய்து பார்த்து புதிய குழம்பு வகைகளை உருவாக்கி இச்சமூகத்துக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது எல்லாக் குழம்புகளுக்குமான சில அடிப்படைகளைத்தான். உப்பு+புளிப்பு+உரைப்பு -இந்த மூன்றுதான் எல்லா வகைக் குழம்புக்கும் அடிப்படை. இவை மூன்றும்போக ஒவ்வொரு வகைக் குழம்புக்கும் என சில பலசரக்கு வகைகள் மட்டும் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான்.
                சாம்பாரை விட்டால் சைவத்தில் அடுத்த இடத்தில் நிற்பது புளிக்குழம்புதான்.ஓட்டல்களில் வைக்கும் வத்தக்குழம்பு என்பது வேறு.
                முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக்கொள்ள வேண்டும். கத்தரிக்காய் நாலு,முருங்கைக்காய் ஒன்று,தக்காளி இரண்டு இவற்றைக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய பிறகு கழுவாமல், கழுவிய பிறகு நறுக்குவதுதான் சரி. காய்களில் உள்ள நீர்ச்சத்து வீணாகாமல் இருக்கும்.
                புளிக்குழம்புக்கான மசாலாவுக்கு முதலில் மல்லி விதை, சீரகம், சிறிது கடலைப்பருப்பு, ஆறு அல்லது ஏழு மிளகாய் வத்தல், பூண்டு 4 பல் இவற்றைத் தனித்தனியாக வறுத்து (சிவக்க) எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் வறுபடும் தன்மை வேறானது என்பதால் தனித்தனியாக வறுக்கிறோம். நாலு சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அம்மியில் வைத்து நீர் சேர்த்து (அல்லது மிக்ஸியில் போட்டு) நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேங்காய்ச்சில்லு இப்போதே சேர்த்து அரைக்கலாம். அல்லது தனியாக அரைத்துக் கடைசியில் குழம்பில் சேர்க்கலாம்.

                இப்போது ஊறவைத்த புளியைக் கரைத்து குழம்புச்சட்டியில் ஊற்றி, நறுக்கிய காய்களையும் போட்டு அரைத்த மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மூடி அடுப்பில் வைத்து வேக விடவேண்டும்.காய்கள் வெந்து விட்டதை அவ்வப்போது திறந்து பார்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி குழைந்து விட்டதைப் பார்த்தாலே வெந்ததை அறியலாம். இது போகப்போகப் பழகிவிடும். வாசனையை வைத்தே வெந்ததை அறிய காலப்போக்கில் நம் மூக்கும் பழகிவிடும். உப்பு கம்மியாகப் போட்டதைக்கூட வாசனையால் அறிந்து கொள்ள மூக்கு பயிற்சி எடுத்துவிடும்.
                பிறகென்ன? சாம்பாருக்குச் சொன்னதுபோல தாளித்து, தாளிதத்தைக் குழம்பில் கொட்டி இறக்கிவிட வேண்டியதுதான். புளிகுழம்பு தயார்.
                மசாலாவை தண்ணீர் சேர்க்காமல் நல்லெண்ணெயில் வதக்கி அதோடு நறுக்கிய காய்களையும் போட்டு வதக்கி அப்புறம் புளிக்கரைசலை ஊற்றி உப்பும் தண்ணீரும் சேர்த்து இதே குழம்பை தயாரித்தால் வேறு ருசி வரும்.
                இந்த மசாலாவோடு பெருஞ்சீரகம் சேர்த்து அரைத்தால் அது ஒரு ருசி. கசகசா சேர்த்தால் அது ஒரு ருசி. இப்படி இன்னும் ஏதாவது சேர்த்தும் குறைத்தும் புதிய வகைகளை நாம் உருவாக்கலாம்.




                லைஃப்ஸ்டைல்|ஆண்கள்|

                Comment


                • #23
                  Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                  Dear NVS MAMA and Krishnamma Mami,

                  I have learnt a lot about how to post a new thread, how to type in Tamil etc through your mails and replies and also got the nice recipes.


                  Thanks A lot


                  With Best Regards


                  S. Sankara Narayanan
                  RADHE KRISHNA

                  Comment


                  • #24
                    Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                    Originally posted by gowriputran View Post
                    Dear NVS MAMA and Krishnamma Mami,

                    I have learnt a lot about how to post a new thread, how to type in Tamil etc through your mails and replies and also got the nice recipes.


                    Thanks A lot


                    With Best Regards


                    S. Sankara Narayanan
                    Good to see your reply Sir
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #25
                      Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                      சமையலறை சமாளிப்புகள்

                      இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
                      சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.
                      "சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.
                      கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
                      சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
                      வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
                      தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
                      தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்




                      Facebook

                      Comment


                      • #26
                        Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                        'சமையலறை சமாளிப்புகள்' super Mama Thanks for sharing
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #27
                          Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                          க்ருஷ்ணம்மா மாமி பரங்கிக்காய் பால்கூட்டு செய்யும் முறை பற்றிக் கூறுங்களேன் ப்ளீஸ்

                          Comment


                          • #28
                            பரங்கிக்காய் பால்கூட்டு

                            பரங்கிப்பிஞ்சு - ஒன்று
                            சர்க்கரை - 2 தேக்கரண்டி
                            பால் - 150 மில்லி
                            உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
                            கடலைப்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
                            மிளகாய் வற்றல் - ஒன்று
                            தேங்காய் துருவல் - கால் கப்
                            முந்திரி - 6
                            அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
                            கல் உப்பு - 2 சிட்டிகை
                            எண்ணெய் - 2 தேக்கரண்டி
                            செய்முறை :
                            பரங்கி பிஞ்சை தோல் சீவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
                            மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
                            ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பரங்கி பிஞ்சை போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் குழைய வேகவிடவும்.
                            மிக்ஸியில் அரிசி மாவு, முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
                            காய் நன்கு வெந்ததும் அதில் பாலை ஊற்றி அதனுடன் அரைத்த கலவையை போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.
                            பிறகு சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
                            வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, மிளகாயை இரண்டாக கிள்ளி போட்டு வறுத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்து கிளறி இறக்கவும்.
                            சுவையான பரங்கிப்பிஞ்சு பால் கூட்டு தயார்.
                            ​இது என் தோழி இன் ரெசிபி நான் செய்தது இல்லை .


                            Last edited by krishnaamma; 03-12-13, 14:35.
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #29
                              Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                              இதோ போடறேன் , என்னிடம் இருக்கு
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment


                              • #30
                                Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !

                                help

                                Help


                                ஶ்ரீ:
                                க்ருஷ்ணாம்மா அவர்களுக்கு ஒரு அவசர சந்தேகம்!
                                கார பூந்தி பண்ணும்போது, பூந்தி மாவில் உப்பு போடவேண்டுமா? வேண்டாமா?
                                அதாவது, சிப்ஸ் போல, பண்ணிய பிறகு உப்புக்காரம் போட்டு பிசறினால் போறுமா?
                                எது சரியான முறை?
                                அன்புடன்,
                                என்.வி.எஸ்





                                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                                Encourage your friends to become member of this forum.
                                Best Wishes and Best Regards,
                                Dr.NVS

                                Comment

                                Working...
                                X