255.அமரும் அமரரினில்
255திருமயிலை
தனன தனனதன தனன தனனதன
தனன தனனதன தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுள
நிமிர சமிரமய நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரத அயில் விடுவேனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ பெருமாளே.


பதம் பிரித்து உரை

அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி
அவரும் வெருவ வரும் அதிகாளம்
அமரும் = சிறந்த அமரரில் அதிகன் = தேவர்களில் அதிக மேம்பட்டவன் (இந்திரன்) அயனும் அரி அவரும் = பிரமன், திருமால் ஆகியவர்கள் வெருவ வரும் = அச்சம் கொள்ளும் படி வருகின்றது அதி காளம் = பெருத்த விஷம்.
அதனை அதகரண விதன அத பரிபுரணம்
அமை அனவர் கரண அகில ஈச
அதனை = அந்த ஆலகால விஷத்தை (உண்டு) கரண விதன அத = மனத் துக்கத்தை ஹதம் செய்தவனே பரிபூரணம் அமைஅ(ன்)னவர் = சாந்தம் அமைந்தவர்கள் கரண = மனத்தில் இருப்பவனே அகில ஈச = அகில உலகத்துக்கும் ஈசனே.
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன
நிமிர சமீரன் மய நியமாய
நிமிர = இத்தாழ்வு நீங்கி நாங்கள் உயர்ச்சி பெற சரணம் அருள் = உனது திருவடியைத் துணை செய்ய வேண்டும் நிபிடம் அது என = நெருங்கி வருகின்றது என்று உனநிமிர = உன்னை நினைக்கின்ற அளவில் சமீரன் மய = வாயு வேகத்தில் நியமாய = (சரணம் அடைந்தவர்களைக் காப்பதே) கடமையாக.
நிமிடம் அதனில் உ(ண்)ண வல சிவ சுத வர
நினது பதவி தர வருவாயே
நிமிடம் அதனில் = க்ஷண நேரத்தில் உ(ண்)ண வல சிவ = (அந்த விஷத்தை) உண்ண வல்ல சிவனுடைய சுத வர = உத்தமமான புதல்வனே நினது பதவி தர வருவாயே = உனது குக சாயுஜ்ய பதவியை நிலையைத் தர வந்தருள வேண்டும்.
சமரச அமர சுர இதர பர அசுர
சரத விரத அயில் விடுவோனே
சமரச அமர சுர = ஒற்றுமையான பெருந்தன்மை உடைய தேவர்களுக்கு அசுர விதர பர = பகைவர்களாகிய அசுரர் மேல் சரத விரத அயில் விடுவோனே = உண்மையான சத்தியாகிய வேலைச் செலுத்தியவனே.
தகுர்த ...............................................திகு
தரர ரரர....................................தகுர் தாத
தகுர்ததிகு தரர ரரரதகுர் தாத என்று
எமர நடன வித மயிலின் முதுகில் வரும்
இமைய மகள் குமர எமது ஈச
எமர = முருகன் அடியராகிய எம்மவர்க்கு வேண்டியதும் நடன வித = நடன வகைகள் கொண்டுள்ளதுமான மயிலின் முதுகில்வரும் = மயிலின் முதுகின் மேல் வருகின்ற இமைய மகள் குமர = இமய அரசனின் மகளாகிய பார்வதியின் மகனே எமது ஈச= எங்களுடைய ஈசனே.
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும்
எமது பர குரவ பெருமாளே.
இயலின் இயல் = இயற்றமிழ் விளங்கும் மயிலை நகரில் = மயிலை என்னும் நகரில் இனிது உரை = இன்பமுடன் வீற்றிருக்கும் எமது பர குரவ = எங்களுடைய மேலான குருமூர்த்தியே பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விளக்கக் குறிப்புகள்
சமர சமரசுர அசுர விதரபர....
சமரச அமர சுர - ஒற்றுமையான பெருந்தன்மையுடைய தேவர்களுக்கு. அசுர இதர பர - பகைவர்களாகிய கீழான அசுரர்மேல்
பழய காலத்தில் தமிழர்கள் கையாண்ட கால அளவுகள்
2 கண்ணிமை =1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரைகள் = 1 குரு
2 குருக்கள் = 1 உயிர்
2 உயிர்கள் = 1 சணிகம்
12 சணிகங்கள் =1 விநாடி
60 தற்பரைகள் = 1 விநாடி
60 விநாடிகள் =1 நிமிடம்