Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 14 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 அமரர் ,அன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 14 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 அமரர் ,அன&

    ��


    श्री स्तुति : 14 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��




    அமரர் ,அன்னை தாள் பற்றி , அனைத்தும் , அடைந்தனர் !


    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��



    आलोक्य , त्वाम् ; अमृत , सह्जे ! विष्णु , वक्ष , स्थल - स्थाम् ;

    शाप - आक्रान्ता: , शरणम् , अगमन् ! सावरोधा: , सुर - इन्द्रा: ; |

    लब्ध्वा , भूय: , त्रिभुवनम् , इदम् , लक्षितम् ; त्वत् , कटाक्षै: ;

    सर्व - आकार , स्थिर , समुदयाम् , सम्पदम् ; निर्विशन्ति ! ||

    ��

    ஆலோக்ய , த்வாம் ; அம்ருத , ஸஹஜே ! விஷ்ணு , வக்ஷ , ஸ்தல - ஸ்த்தாம் ;

    சாப - ஆக்ராந்தா: , சரணம் , அகமன் ! ஸாவரோதா: , ஸுர - இந்த்ரா: ; |

    லப்த்வா , பூய: , த்ரிபுவனம் , இதம் , லக்ஷிதம் ; த்வத் , கடாக்*ஷை: ;

    ஸர்வ - ஆகார , ஸ்த்திர , ஸமுதயாம் , ஸம்பதம் ; நிரவிசந்தி ! ||

    ��


    अमृत ........... அமுதத்திற்கு ,

    सह्जे ........... உடன் தோன்றியவளே !

    शाप ............ (துர்வாஸ முனிவரின் ) சாபத்தினால் ,

    आक्रान्ता: ..... வருந்தி ;

    सावरोधा: ..... மனைவியர்களுடன் ;

    सुर इन्द्रा: ..... சிறந்த தேவர்கள் ,

    विष्णु ........... எம்பெருமானது ,

    वक्ष स्थल ...... திருமார்பில் ,

    स्थाम् ........... அமர்ந்த ;

    त्वाम् ............ உன்னை ,

    आलोक्य ....... ஸேவித்து ;

    शरणम् ......... சரணமாக ,

    अगमन् .......... அடைந்தனர் !

    त्वत् ............. உனது ,

    कटाक्षै: ......... திருக்கண், பார்வைகளால் ,

    लक्षितम् ........ செழிப்பான ,

    इदम् ............ இந்த ,

    त्रिभुवनम् ....... மூன்று உலகங்களையும் ,

    भूय: ............. மறுபடியும் ,

    लब्ध्वा .......... அடைந்து ;

    सर्व .............. எல்லா ,

    आकार .......... வகைகளிலும் ,

    स्थिर ............ நிலையான ,

    समुदयाम् ....... வளர்ச்சியை உடைய ,

    सम्पदम् ......... ஐச்வர்யத்தை ,

    निर्विशन्ति ...... அனுபவிக்கின்றனர் !

    ��

    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��

    * அமுதத்தோடு சேர்ந்து , திருப்பாற்கடலில் தோன்றிய பெரிய பிராட்டியே !

    * முன் ஒரு காலத்தில் , துர்வாசர் ஒரு மாலையை , இந்திரனுக்கு , அளித்தார். இந்திரன் , அதை ஐராவதத்தின் தலையில் போட்டான். அந்த ஆணை , அதைத் , தரையில் வீசி , எறிந்தது. முனிவர் அதனால் , கோபம் கொண்டு , " லக்ஷ்மியின் இருப்பிடமான் பூமாலையை , நீ , அவமதித்ததால் , மூவுலகையும் ாலும் லக்ஷ்மி , உன்னை விட்டு விலகுவாள் " இரு சபித்தார்.

    * அவ்வாறே ஆகியதால் , உலகம் மிகவும் , துன்பம் அடைந்தது. வருந்திய தேவர்கள் , தமது , மனைவியர்களோடு , உன் நாயகனான எம்பெருமானைச் சரணம் அடைந்தனர்.

    * எம்பெருமான் , தானே , துணை நின்று , திருப்பாற்கடலைக் கடையச் செய்தான் . அதனின்று அமுதம் தோன்றியது. நீயும் , தாமரையில் அமர்ந்தபடியே , அவதரித்தாய். இல்லாத தேவர்களும் காண , நீ , எம்பெருமான் , திருமார்பில் , ஏறி , அமர்ந்தாய்.

    * தேவர்கள் , தத்தம் மனைவியருடன் , அமுதத்தைப் பருகி , உன்னைச் , சரணம் அடைந்தனர். மூவுலகையும் , நீ , உன் திருக்கண்களால் , கடாக்ஷித்து , அருளினாய். மூவுலகங்களும் , தளிர்த்தன.

    * தேவர்கள் , தமது உலக்கைத் , திரும்பப் பெற்றனர். உலகம் , இல்லாத துறைகளிலும் , இன்னும் செழுமையான நிலையைப் , பெற்றன.

    * இத்தகைய ஐஸ்வர்யத்தைத் , தேவர்கள் , உன் கடாக்ஷத்தால் அனுபவித்து , வருகின்றனர்.

    [ இந்திரன் செய்த பிழைக்கு , எல்லா தேவர்களும் , அல்லல் பட்டு , உன்னை , சரண் அடைந்து , நன்மை பெற்றனர். ஐராவதம் செய்த தவற்றுக்கு , எல்லா யானைகளும் , சேர்ந்து , பிராட்டிக்கு , அபிஷேகம் செய்து , பிராயச்சித்தம் , செய்து கொண்டன ]



    ��


Working...
X