263. மருமல்லியார்
263திருவலிதாயம்
(கொறட்டூர் அருகே உள்ளது பாடி என்று தற்சம்யம் அழைக்கப்படுகிறது)
பரத்வாஜர் முனிவர் வலியன் என்ற குருவியாக வந்து சிவனை வழிப்படதால் திருவலியதாயம் என்ற ஸ்தல பெயர் என்கிறது ஸ்தல் புராணம்.
முருகனின் வாகனம் மயிலின் முகம் வலப்பக்கமாக உள்ளது இத்தலத்தில்
தனதய்ய தானதன தனதானா
மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடிய னலையாமல்
இருநல்ல வாகுமுன தடிபேண
இனவல்ல மானமன தருளாயோ
கருநெல்லி மேனியரி மருகோனே
கனவள்ளி யார்கணவ முருகேசா
திருவல்லி தாயமதி லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பதம் பிரித்தல்

மரு மல்லி ஆர் குழலின் மட மாதர்
மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல்
மரு = வாசனை பொருந்திய. மல்லி ஆர் = மல்லிகை மலர் நிறைந்த குழலின் = கூந்தலை உடைய மட மாதர் = அழகிய விலை மாதர்கள் (மீதுள்ள) மருள் உள்ளி = காம மயக்க நினைவு கொண்டு நாய் அடியேன் = நாய் போன்ற அடியேன் அலையாமல் = அலைச்சல் உறாமல்
இரு நல்லவாகும் உனது அடி பேண
இன வல்லமான மனது அருளாயோ
இரு நல்ல ஆகும் = இரண்டு நல்லவைகளான உனது அடி பேண = உனது திருவடிகளைப் போற்றித் துதிக்க இன வல்லமான = தக்கதான மனது அருளாயோ = அருள் புரிய மாட்டாயோ?
கரு நெலி மேனியர் அரி மருகோனே
கன வள்ளியார் கணவ முருகேசா
கரு நெல்லி மேனியர் = கரு நெல்லி போன்ற நிறமுள்ள திருமேனியை உடைய அரி = திருமாலின் மருகோனே = மருகனே கன = பெருமை பொருந்திய வள்ளியார் கணவ = வள்ளி நாயகியின் கணவனே முருகேசா = முருகேசனே.
திருவல்லிதாயம் அதில் உறைவோனே
திகழ் வல்ல மா தவர்கள் பெருமாளே.
திருவல்லிதாயம் அதில் = திருவல்லிதாயம் என்னும் ஊரில் உறைவோனே = வீற்றிருப்பவனே திகழ் வல்ல = விளக்கம் வாய்ந்த மா = சிறந்த தவர்கள்= தவசிகளின் பெருமாளே = பெருமாளே.

சுருக்க உரை

விளக்கக் குறிப்புகள்
மா தவர்கள் பெருமாளே....
இத்தலத்தில் பிருகு, வசிட்டர், துருவாஜர் பரத்வாஜர்ஆகியோர் பூசித்துக் காமதேனுவைப் பெற்றனர் என்பது புராணம்.