Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    264. இபமாந்தர்
    264திருவாஞ்சியம்
    இத்தலத்தில் மயிலின் முகம் பெருமானின் இடப்பகம் உள்ளதால்
    அசுரமயில் எனப்படுகிறது
    தனதாந்த தத்த தனதன
    தனதாந்த தத்த தனதன
    தனதாந்த தத்த தனதன தனதான
    இபமாந்தர் சக்ர பதிசெறி
    படையாண்டு சக்ர வரிசைக
    ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி
    இறுமாந்து வட்ட வணைமிசை
    விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
    யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந்
    தபனாங்க ரத்த வணிகல
    னிவைசேர்ந்த விச்சு வடிவது
    தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது
    தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
    பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
    தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே
    உபசாந்த சித்த குருகுல
    பவபாண்ட வர்க்கு வரதன்மை
    யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்
    உலகீன்ற பச்சை யுமையணன்
    வடவேங்க டத்தி லுறைபவ
    னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே
    த்ரிபுராந்த கற்கு வரசுத
    ரதிகாந்தன் மைத்து னமுருக
    திறல்பூண்ட சுப்ர மணியஷண் முகவேலா
    திரைபாய்ந்த பத்ம தடவய
    லியில்வேந்த முத்தி யருள்தரு
    திருவாஞ்சி யத்தி லமரர்கள் பெருமாளே.


    பதம் பிரித்தல்


    இப மாந்தர் சக்ரபதி செறி
    படை ஆண்டு சக்ர வரிசைகள்
    இட வாழ்ந்து திக்கு விசய மண் அரசாகி


    இபம் = யானைப்படை மாந்தர் = காலாட்படை செறி படையாண்டு = முதலியவை நிறைந்துள்ள நால் வகைப் படைகளை உடைய சக்ரபதி = பேரரசனாக அரசு புரிந்து. சக்ர வரிசைகள் இட = தனது ஆணைப்படி வேலை முறைகளை நடத்த வாழ்ந்து = அங்ஙனம் வாழ்ந்து திக்கு விசயம் மண் அரசாகி = திக்கு விசயம் செய்து உலகுக்கு அரசனாகி.


    இறுமாந்து வட்ட அணை மிசை
    விரி சார்ந்து வெற்றி மலர் தொடை
    எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம்


    இறுமாந்து = பெருமை மிக அடைந்து வட்ட அணை மிசை = வட்ட வடிவமான சாய்வு மெத்தை அணையின் மேல் உள்ள விரி சார்ந்து = விரிப்பில் சாய்ந்து அமர்ந்து வெற்றி மலர் தொடை = வெற்றியைக் குறிக்கும் வாகை மலர் என்ன எழில் ஆர்ந்த = அழகு நிரம்பிய பட்டி வகை = பட்டு ஆடை வகைகள் என்ன பரிமள = நறு மண லேபம் = கலவைப் பூச்சு என்ன.


    தபனம் அங்க ரத்ந அணிகலன்
    இவை சேர்ந்த விச்சு வடிவு அது
    தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவிய போது




    தபனம் அங்க = சூரிய ஒளியைத் தன்னகத்தே கொண்ட ரத்ந அணிகலன் = ரத்ன மணியாலாகிய நகைகள் என்ன இவை சேர்ந்த விச்சு வடிவு அது = இவை எல்லாம் சேர்ந்த ஒரு மனித வித்தின் உருவம் அது மிக்க உயிர் நழுவிய போது = அத்தகைய உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் தமர் சூழ்ந்து = சுற்றத்தார் சூழ்ந்திருக்க.




    தழல் தாம் கொளுத்தி இட ஒரு
    பிடி சாம்பல பட்டது அறிகிலர்
    தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே


    தழல் தாம் கொளுத்தியிட = அந்த நெருப்பு கொளுத்திவிட. ஒரு பிடி சாம்பல் பட்டது = (அவ்வுடல்) ஒரு பிடி சாம்பலான ஒரு பிடி சாம்பலான நிலையை அடைவதை அறிகிலர் = உணர்வதில்லை தன வாஞ்சை மிக்கு = பொருளாசை மிகுந்து உன் அடி தொழ நினையாரே = உனது திருவடியைத் தொழ நினைப்பதில்லையே


    உபசாந்த சித்த குரு குல
    பவ பாண்டவர்க்கு வரதன் மை
    உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்


    உபசாந்த = மன அமைதி கொண்டசித்தம் = உள்ளம் உடைய குருகுல பவ = குருகுலத்தில் தோன்றிய பாண்டவர்க்கு = தருமன் முதலாய பாண்டவர்களுக்கு வரதன் = வேண்டிய வரங்களைத் தருபவன் மை உருவோன் = கரு மேக நிறத்தவன் ப்ரசித்த நெடியவன் = புகழ் பெற்ற விசுவரூபம் கொண்டவன் ரிஷிகேசன் = ரிஷிகேசன்


    உலகு ஈன்ற பச்சை உமை அ(ண்)ணன்
    வட வேங்கடத்தில் உறைபவன்
    உயர் சாரங்கம் சக்ர கரதலன் மருகோனே


    உலகு ஈன்ற = உலகங்களைத் தந்த பச்சை உமை அணன் = பச்சை நிறத்தவளான் உமா தேவியின் அண்ணனும் வட வேங்கடத்தில் உறைபவ = திருப்பதியில் வீற்றிருப்பவனும் உயர் சாரங்க = மேலான சாரங்கம் என்ற வில் சக்ர = சுதரிசனம் ஆகிய சக்கரம் கரதலன் = (இவற்றைக்) கையில் ஏந்தியவனுமாகிய திருமாலின் மருகோனே = மருமகனே.


    த்ரிபுர அந்தகற்கு வர சுத
    ரதி காந்தன் மைத்துன முருக
    திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா


    த்ரி புர அந்தகற்கு = முப்புரங்களை யமனாக இருந்து அழித்த சிவபொருமானுக்கு வர சுத = மேலான பிள்ளையே ரதி காந்தன் = ரதியின் கணவனான மன்மதனின் மைத்துன = மைத்துனர் முறையாக உள்ளவனே முருக = முருகனே திறல் பூண்ட சுப்ரமணிய = பராக்ரமம் வாய்ந்த சுப்ரமணியனே!. ஷண்முக வேலா = ஷண்முகனே!, வேலனே!.


    திரை பாய்ந்த பத்ம தட
    வயலியில் வேந்த முத்தி அருள் தரு
    திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே.


    திரை பாய்ந்த = அலைகள் பாயும் பத்ம தட = தாமரைத் தடாகங்கள் உள்ள வயலியில் வேந்த = வயலூர் அரசே முத்தி அருள் தரு = முத்தியைத் தருவதான திருவாஞ்சியத்தில் = திருவாஞ்சியம் என்னும் தலத்தில். அமரர்கள் பெருமாளே = (உறையும்) தேவர்கள் பெருமாளே.

    சுருக்க உரை

    விளக்கக் குறிப்புகள்
    1. அரசாகி இறுமாந்து.....
    முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோருமுடிவிலொரு
    பிடி சாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
    படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னி னம்பலவர்
    அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே
    – பட்டினத்தார்
    இறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே
    - கந்தர் அலங்காரம்.
    2. திருவாஞ்சியத்தில்....
    நன்னிலம் அருகே உள்ள தலம். முத்தி அளிக்கும் தலங்களில் ஒன்று.
    தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம்
    முல்லைவனங் கூடல் முதுகுன்றம் - நெல்லைகளர்
    காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணைக் காளத்தி
    வாஞ்சியமென் முத்தி வரும்.
    கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும்
    நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து
    அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே
    ---சம்பந்தர் தேவாரம்
    திருப்பதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. அங்கு ‘சுப்பிரமணிசுவாமிவாரு’ சன்னதி உள்ளது. அருணகிரியார் அவரைத்தான் ‘‘வடவேங்கடத்துள் உறைபவன் மருகன்’ என்று சொல்லுகிறாறோ?
Working...
X