266.நீ தான்
266திருவாரூர்
தானானத் தனதானா தானானத் தனதானா
நீதானெத் தனையாலும் நீடுழிக் க்ருபையாகி
மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா
ஆதாரத் தொளியானே ஆரூரிற் பெருமாளே.பதம் பிரித்து உரை

நீ தான் எத்தனையாலும் நீடுழி க்ருபையாகி
நீ தான் = (முருகா), நீ தான் எத்தனையாலும் =
எல்லா வகைகளிலும் நீடுழி = நீண்ட ஊழிக்
காலம் வரையில் க்ருபையாகி = அருள்
கூர்ந்தவனாகி.
மா தான தனமாக மா ஞான கழல் தாராய்
மா தான = சிறந்த தானப் பொருளாக மா ஞான =
மேலான ஞான பீடமாகிய கழல் தாராய் = உனது
திருவடியைத் தந்து அருள்வாய்.
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா
வேதா = பிரம்மாவின் மைத்துன வேளே =
மைத்துனனாகிய செவ்வேளே வீரா = வீரனே சற்
குண சீலா = சற்குணம் கொண்ட மேலோனே
ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே.
ஆதாரத்து = ஆறு ஆதாரங்களிலும் ஒளியானே =
ஒளியாய் விளங்குபவனே ஆரூரில் பெருமாளே =
திருவாரூரில் வீற்றிருக்கும் பெருமாளே.சுருக்க உரை


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
விளக்கக் குறிப்புகள்
1. ஆதாரத்து ஒளியானே....
ஷடாதாரம் = ஆறு ஆதாரங்கள்.
நீடார் சடாத ரத்தின் மீதே பராப ரத்தை
நீகாணெ ணாவ னைச்சொல் அருள்வாயே. ... நாவேறுபாம


2. வேதா = பிரமன் (திருமாலுக்கு மகன்). முருகவேள் = திருமாலுக்கு
மருமகன். ஆதலால் முருகன் பிரமனின் மைத்துனன்.


3. ஞானக் கழல் தாராய்...


தொண்டர்கண் டண்டி மொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானம் எனும் தண்டையம் புண்டரிகம் தருவாய்.... கந்தர் அலங்காரம்.