268 பாலோ தேனோ
268திருவாரூர்
தானா தானா தானா தானா
தானா தானத் தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத் துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத் தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.பதம் பிரித்து உரைபாலோ தேனோ பாகோ வானோர்
பாராவாரத்து அமுதேயோ
பாலோ தேனோ பாகோ = (நீ) பாலோ, தேனோ, வெல்லக்கட்டி தானோ வானோர் = தேவர்கள் பாராவாரத்து = கடலினின்றும் கடைந்தெடுத்த அமுதேயோ = அமுதமோ நீ .
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
பானோ வான் முத்து என நீள
பாரோர் சீரோ = உலகோரின் சிறப்புப் பொருளோ வேளே ஏர் வாழ்வோ = மன்மதன் போன்ற அழகிய வாழ்வோ பானோ = சூரியனோ வான் = சிறந்த முத்து என = முத்தோ நீ (என்று) நீள = விரிவாகத் (தாய்மார்).
தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்து உ(ன்)னு சாரம்
தாலோ தாலேலோ = தாலாட்டுப் பாடல்களை பாடாதே = (அருமையுடன்) பாடாமலும் தாய்மார் = தாய்மார்கள் நேசத்து = அன்புடன் உ(ன்)னு = நினைத்து சாரம் = தன சாரமாகிய முலைப் பாலை
தாராதே பேர் ஈயாதே
பேசாதே ஏச தகுமோ தான்
தாராதே = தராமலும் பேர் ஈயாதே = புகழ்ச்சிக்கு உரிய பேர் ஒன்றும் கொடாமலும். பேசாதே = (என்னிடம்) குலவாமலும் ஏசத் தகுமோ தான் = இகழ்ச்சிக்கு இடமாய் நான் வளர்வது நீதியோ தான்?
ஆலோல் கேளா மேலோர் நாள் மால்
ஆனாது ஏனல் புனமே போய்
ஆலோல் = ஆயால் ஓட்டும் ஒலியை கேளா = கேட்டு மேலோர் நாள் = முன்பு ஒரு நாள் மால் ஆனாது = ஆசை குறையா வகையில் ஏனல் புனமே போய் = தினைப்புனத்துக்குச் சென்று.
ஆயாள் தாள் மேல் வீழா வாழா
ஆளா வேளை புகுவேனோ
ஆயாள் = தாய் வள்ளியின். தாள் மேல் வீழா = கால் மேல் விழுந்தும் வாழா = அதனால் வாழ்வு பயன் பட்டதென்று வாழ்ந்தும் ஆளா = (வள்ளிக்கு) ஆளாக வேளைப் புகுவேனை = வேளைக் காரனாகப் புகுந்து விளையாடியவனே.
சேலோடு சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரில் பெரு வாழ்வே
சேலோடு சேர் = சேல் மீனோடு சேர்ந்து ஆரால் = ஆரால் மீன்கள் சாலார் = மிகுந்து நிறைந்துள்ள சீர் = அழகிய ஆரூரில் பெருவாழ்வே = திருவாரூரில் வாழும் பெருஞ் செல்வமே.
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ பெருமாளே.
சேயே = குழந்தையே வேளே = அரசே பூவே = பொலிவு உள்ளவனே கோவே = தலைவனே தேவ தேவப்பெருமாளே = தேவனே, தேவர்கள் பெருமாளே.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்
வேளைப் புகுவேனோ...
விறன் மறவர் சிறுமிதிரு வேளைக்காரப் பெருமாளே ........திருப்புகழ்,ஒருபொழுது.
வள்ளி வேளைக்கார மனோகர
.......... திருப்புகழ், கொள்ளையாசை.
விந்தை குற மாது வேளைக்கார ...திருப்புகழ், முந்துதமிழ்மாலை