Announcement

Collapse
No announcement yet.

Kanchipuram - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kanchipuram - Periyavaa

    காஞ்சிபுரத்தில், எண்ணியது நிறைவேறும்!
    ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா, ஒருநாள் பெரியவாளிடம் கேட்டார்.....
    "காஞ்சிபுரத்தை ரொம்ப விஸேஷமான ஸ்தலம்-ன்னு சொல்றாளே? ஏன் பெரியவா?..."
    "பரமேஶ்வரன், அம்பாள், மஹாவிஷ்ணு, பிள்ளையார், முருகன்-ன்னு எல்லா தெய்வங்களும் இங்க...காஞ்சிபுரத்ல இருக்காடா! இதவிட, காஸிதான் விஸேஷம்-ன்னாலும் காஞ்சிபுரமும், அதுக்கு ஸமமான ஸ்தலம்! ஒனக்குத் தெரியுமோ?........
    .......இங்க, காஞ்சிபுரத்ல ஏழு கொளம் இருக்கு! இதுல..... தெனோமும் ஒரு கொளத்ல ஸ்நானம் பண்ணிட்டு, எல்லாக் கோவிலுக்கும் போயி ஸ்வாமி தர்ஶனம் பண்ணிட்டு, மனஸ்ல வேண்டிண்டா..... நெனச்ச கார்யம் கட்டாயமா நடக்கும்!...."
    ஸீரியஸ்ஸாக பேசிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு நமுட்டு சிரிப்போடு, தன் "குழந்தை" ஶிஷ்யனைப் பார்த்து......
    "காஸி-ங்கறதை பிரிச்சு சொல்லு பாக்கலாம்!..."
    "கா........ஸி.....!.."
    "பேஷ்! காஞ்சி..... பிரிச்சு சொல்லு பாக்கலாம்"
    "கா......ஞ்.......சி......"
    "பாத்தியா? பாத்தியா? காஸிக்கும் காஞ்சிக்கும், ஒரு 'ஞ்' [inch] தாண்டா வித்யாஸம்!...."
    அதிஸயித்தார் ஶிஷ்யர்! என்ன அழகான 'தங்க்லீஷ்' ஸ்லேடை!
    காஸியில் கபாலீஶ்வரனாய், காஞ்சியில் காமாக்ஷியாய் அருள்பாலிக்கும் நம் காஞ்சிநாதன், அத்வைதாச்சார்யனாகவும் இருப்பதால், நமக்கும் அவருக்கும் அணுவளவு inch கூட ஜீவ-ப்ரஹ்ம பேதம் இல்லாமல் அழித்து, தன்னுருவோடு சேர்த்துக் கொள்ள ப்ரார்த்தனை செய்வோம்.
    பெரியவா சொன்ன "காஞ்சிபுரத்தில் உள்ள ஏழு குளங்கள்-வார தீர்த்தங்கள்"
    ஞாயிற்றுக்கிழமை: கச்சபேஶ்வரர் கோவில். ஸ்ரீமடத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில் உள்ளது. இந்தக் குளத்துக்கு எதிரில் ஸூர்ய பகவான் கோவில் உள்ளது.
    திங்கட்கிழமை: ஏகாம்பரேஶ்வரர் கோவில்.
    செவ்வாய்க்கிழமை: மங்களேஶ்வர் கோவில். ஸ்ரீமடத்துக்கு எதிரில் உள்ளது.
    புதன்கிழமை: திருகாளீஶ்வரர் கோவில்
    வியாழக்கிழமை: காயாரோகணீஶ்வரர் கோவில்
    வெள்ளிக்கிழமை : ஶ்ரீ காமாக்ஷி கோவில்.
    ஸனிக்கிழமை: ஸர்வதீர்த்தம். மஹா பெரியவா, 69-வது பீடாதிபதியாக ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவாளுக்கு இந்தக் குளக்கரையில்தான் ஸன்யாஸாஶ்ரமம் அருளினார்.
    பெரியவா திருவாக்கில் வந்த இந்த தீர்த்தாடனம் கூட எத்தனை எளிமையானதாக, அதே ஸமயம் அபரிமிதமான பலன்களைத் தருவதாக இருக்கிறது! ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. காஞ்சி சங்கர காமகோடி சங்கர. நமஸ்காரம்.
Working...
X