Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    269. குசமாகி
    269திருவான்மியூர்
    தனதான தானதன தனதான தானதன
    தனதான தானதன தனதான
    குசமாகி யாருமுலை மரைமாநு ணூலினிடை
    குடிலான ஆல்வயிறு குழையூடே
    குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
    குழல்கார தானகுண மிலிமாதர்
    புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
    புலையேனு லாவிமிகு புணர்வாகிப்
    புகழான பூமிமிசை மடிவா யிறாதவகை
    பொலிவான பாதமல ரருள்வாயே
    நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
    நிகழ்போத மானபர முருகோனே
    நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
    நிபுணாநி சாசரர்கள் குலகாலா
    திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
    சிவநாத ராலமயில் அமுதேசர்
    திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
    திருவான்மி யூர்மருவு பெருமாளே



    பதம் பிரித்து உரை

    நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு
    நிகழ் போதமான பர முருகோனே


    நிச = மெய்யான நாரணாதி = நாராயண மூர்த்தி என்னும் தலைவனதுதிரு = அழகிய மருகா = மருகனே (சத்ய நாராயணா) உலாசம் மிகு = உள்ளக் களிப்பு மிகுந்து நிகழ் = உண்டாகும் போதமான = அறிவு ரூபமான பர முருகோனே = மேலான முருகனே


    நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு
    நிபுணா நிசாசரர்கள் குலகாலா


    நிதி = செல்வம் போன்ற ஞான போதம் = சிறந்த ஞானோபதேசத்தை அரன் = சிவபெருமானுடைய இரு காதிலே உதவும் = இரண்டு காதுகளிலேயும் உபதேசித்து அருளிய நிபுண = சாமர்த்திய சாலியே நிசா சரர்கள் = இருளில் சஞ்சரிப்பவர்களாகிய அசுரர்குலகாலா = குலத்துக்கு யமன் போன்றவனே


    திசை மா முக ஆழி அரி மகவான் முனோர்கள் பணி
    சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர்


    திசை மா முகன் = நான்கு திசைகளை நோக்கும் நான்முகன் ஆழி அரி = சக்கரத்தை உடைய ( ஆழியை ஏந்தி தேரார்களை அடக்கும்) திருமால் மகவான் = இந்திரன் முனோர்கள் = முதலியவர்கள் பணி = வணங்கும் சிவ நாதர் = சிவ மூர்த்தி ஆலம் = விடத்தை அயில் = உண்ட அமுதேசர் = அமுதத்தை ஒத்த பெருமானுடைய


    திகழ் பால மாகம் உற மணி மாளி(கை) மாடம் உயர்
    திருவான்மியூர் மருவு பெருமாளே


    திகழ் பால = விளக்கமுற்ற குழந்தையே மாகம் உற = ஆகாயத்தை அளாவும்படி மணி = அழகிய மாளி(கை) = மாளிகைகள் மாடம் = மாடங்கள் உயர் = உயர்ந்துள்ள திருவான்மியூர் மருவு = திருவான்மியூர் என்ற ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே = பெருமாளே


    குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை
    குடிலான ஆல் வயிறு குழை ஊடே


    குசமாகி ஆரும் மலை = மலை போல் பருத்த மா பெரும் தனங்களும் மரை மா நுண் நூலின் இடை = தாமரையின் அழகிய நுண்மை நூல் போல் நுணுகிய இடையும் குடிலான ஆல் வயிறு = ஜீவன் தங்கும் அல்ப இருப்பிடமான ஆலிலைப் போன்ற வயிறும்,


    குறி போகு மீன விழி மதி மா முக ஆரு மலர்
    குழல் கார் அதான குணம் இலி மாதர்


    குழை ஊடே குறி போகு மீன விழி = செவி அணியான குழையின் இடுவிடம் குறித்து செல்லும் கயல் மீன் போன்ற கண்களும் மதி மா முக = நிறை மயி போன்ற முகமும் ஆரும் மலர் = நிறைந்த மலர் கார் அதான = மேகம் போன்ற குழல் = கூந்தல் (இவைகளைக் கொண்ட)குணம் இலி மாதர் = நற்குணம் இல்லாத விலை மாதர்களின்


    புச ஆசையால் மனது உனை நாடிடாத படி
    புலையேன் உலாவி மிகு புணர்வாகி


    புச ஆசையால் = தோள் மீது உள்ள ஆசையினால் மனது = என்னுடைய மனம் உனை நாடிடாதபடி = உன்னை நாடாதபடி புலையேன் = இழிந்தவனாகிய நான் உலாவி = அங்கும் இங்கும் உலாவித் திரிந்து மிகு புணர்வாகி = (அத்தகைய வழிகளில் ) சேர்க்கை உடையவனாகி


    புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை
    பொலிவான பாத மலர் அருள்வாயே


    புகழான பூமி மிசை = புகழ் பெற்ற இந்த பூவுலகிலே மடிவாய் = அழிவு உற்றவனாக இறாத வகை = முடிந்து போகாத வண்ணம் பொலிவான = ஒளி பொருந்திய பாத மலர் அருள்வாயே = உனது திருவடித் தாமரைகளைத் தந்து அருள்வாயாக





    நடராஜன் அளிக்கும் விரிவுரை


    நாரம் = நீர் அதன் நிறம் உற்றார் அதனால் திருமால் நாரணர் என்னும் பெயர் பெற்றார் மூல காரண முதல்வரில் ஒருவராய் ஆதி நாரணர் என ஆனார் அசத்தியத்தை அழித்து நீடித்த சத்தியம் நிலை நிற்க அடிக்கடி அவதரிப்பவர் ஆதலின நிச நாரண ஆதி என நின்றார் பெருமித நிலையினரான இவர் பெற்ற மகளிர் இருவர் இவர்கள் வாழ்விக்கும் அன்பின் வடிவினர் தவம் நிறைந்து பிரம்மம் வளர்த்த தாய் மாமன் தந்த மகளிர் இருவரை மணந்தவனே என்பார் மருகா என்றார் திருமருக என்பதால் நாரணர் திருமகள் இருவரின் நலம் சிறந்த மருகனே எனவும் கூற இடமுண்டு


    உள்ளத்தில் நிறையும் இன்பக் கிளர்ச்சியை உல்லாசம் என்பர் - உல்லாச நிராகுல யோக இத சல்லாப விநோதனும் நீ அலையோ - எனும் கந்தர் அனுபூதியும் எண்ணிக் கொள்வது நலம் தரும் இதன் படி அமைதியுடன் ஆய்ந்து சிந்திக்கும் அறிவு ஞானம் எனப் பெறும் ஐயம், மயக்கம் அறியாமை இன்றி தேர்ந்த அதனை தெளிந்து நிற்றல் போதம் எனப்பெறும் எனவே ஞான போதம் என்பது தேர்ந்து தெளிதல் எனும் நியதியான பொருளில் நின்றது


    நீடித்த ஞான போதத்தில் கிடைப்பது நிதி அந்நிதியே பிரணவப் பெரும் செல்வம் மும்மல கண்டன முதல்வர் அரர் எனும் பேர் பெறுவர் அப்பெருமான் இரு செவியில் ஞான போத நிதி எனும் பிரணவப் பொருளை ஓதிய நிபுணன் அந்த ஓம் வடிவினன் நிதி ஞான போதம் அரன் இருகாதிலே உதவு நிபுணா என்பதை ஊன்றி உணர்ந்தால் உள்ளம் உருகும்


    அசுர காலன் - பகலை மறந்தனர் இரவை நினைந்தனர் இருண்ட மேனியர் , இருண்ட மனத்தர் இருளில் நடமாடினார் பிறர் உறங்கும் நேரத்தில் கொள்ளை அடித்தனர் கோதையர் பலரை நோதல் செய்தனர் அமரரை அடர்த்தனர் நல் தவ முனிவரை நைய வைத்தனர் ஐயோ முருகா, ஐயோ குமரா என்று அலறியது உலகம்
    எம்மான் எழுந்தான் வேலை ஏவினான் ஞான சக்தி அகில உலகமும் அளாவி விரைந்தது அதன் மூலம் அசுர உணர்வு அழிந்தது இது ஒரு காலம்


    அமைதி, உணர்வு எனும் இதய உணர்வு எவரிடமும் இருக்கிறது பாவ சிந்தனையை படபடத்து எழுப்பி அந்த அருமை ஒளியை அணைத்து விடுவர் அதன் பின் ஆகாமிய வினையை அளவிறந்து எழுப்புவர் இதனால் பீடு அழியும் நோதல் பிறக்கும் இடர் மிகுந்த நிலையில் குமர குமரா, முருக முருகா என்று குமுறுவர் பக்த கோடிகள் அந்நிலையிலும் அம்மான் சன்னதி ஞான சக்தி அளவளாவி வரும் இடர்பாடு ஒழியும் இன்பம் உதிக்கும் இப்படி அதிகரிக்கும் அசுர உணர்வை அழிப்பவனை நிசாசரர் குல காலா என்னும் அருமையே அருமை


    வழிபட்டோர் - திசைமாமுக ஆழிஅரி மகவான் முனோர்கள் பணி சிவநாதர் எனும் வரியில் பிரமன் திருமால், இந்திரன் முதலானோர் வழிபட்ட வரலாறுகள் இருக்கின்றன முனோர்கள் = முதலினோர் இம்மிகைச் சொல்லால் ஒரு ரட்சசு, சந்திரன், சூரியன், காமதேனு, எமன் , பிருங்கி, வான்மீகர் முதலானோர் இத்தலத்தில் வழிபட்டதும் எண்ணப்படும்


    பேறு தரும் பெருமான் - காலன் போல் எழுந்த ஆலம் அயின்ற அமுதேசர் திரு முன், அந்த விட ஆற்றல் முடங்கி அடங்கியது பால குமாரனைப் பார்ப்பார் அமுதேசரை அரிய அத்திருவுருவில் அறிந்து மகிழ்வார் திருமருகா, உல்லாச, முருகோனே, நிபுணா, நிசாசரர் குலகாலா, திகழ் பாலா, திருவான்மியூர் பெருமாளே,


    தையலர் தம் தனம் கண்டேன், இடை கண்டேன், வயிறு கண்டேன், கண்கள் கண்டேன் , முகம் கண்டேன் கூந்தல் கண்டேன், அவர்களைத் தழுவும் ஆசை கொண்டேன் இதனால் தெய்வமே, மா பெரும் உனை மறந்தேன் அல்ப அறிவு உடையவனாய் உலகில் அலைந்து திரிந்தேன் புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே என்று எண்ணிய விண்ணவர் வந்து வழிபடும் புண்ணியம் நண்ணிய புனித பூமி இந்த நில உலகம் புகழ் நிறைந்த இவ்வுலகில் பிறந்த அடியேன் அறிவிலாமல் இச்சையால் மடங்கி முடங்கி மடியாத படி அருள் ஞான திருவடி தரிசனம் அருள்க என்று வினயம் மிகுந்து வேண்டியபடி



    விளக்கக் குறிப்புகள்


    1 நிதி ஞான போதம்


    சிவஞான போதம் என்பதைக் குறிக்கும் சைவ நெறி நூல்கள் பதினான்கு
    அவையாவன - திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா விருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்


    2 அரன் இரு காதிலே உதவு நிபுண


    சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
    செவிமீதி லும் பகர்செய் குருநாதா ---- திருப்புகழ், சிவனார்மனங்
Working...
X