மண், நீர், தீ, வலிமையான காற்று, ஆகாயம் இவைகளைக் கூடியதாய், கருவில் பிறப்பைக் கூடும் துன்பமும், முக்குணங்களும் நெடிதாய்க்கூடி வரும் நோய்கள், மூளை, எலும்பு, இரத்தம், மாமிசம் இவைகள் கூடிய குடிலாகிய உடலைத் தாங்கி, மிகக் கீழானதான பிறப்பை அடைந்து, ஞானத்தோடு கூடிய அறிவில்லாமல் நான் திரிவது நீதி
அன்று என்னை உன் அடியாருடன் சேர்த்து அருள்
புரிய வேண்டுகிறேன்
ஒப்பற்ற கோழிக் கொடியை உடையவனே அழகிய தினைப் புனத்து வள்ளியாகிய கொடி படரும் புய மலைகளை உடையவனே பெரிய மத்தகத்தை உடைய கணபதியின் தந்தையாகிய சிவ பெருமானின் குருவே கணபதியின் தம்பியே ஞான நிலையில் உறைபவனே மரங்கள் நிறைந்த திருவிடைக் கழியில் வீற்றிருக்கும் பெருமாளே எந்தப் பூமியில் இருப்போரும் தன்னிடம் அடைக்கலம் புகுந்தால்
முத்தி அளிப்பவனே உன் அடியார்களுடன் என்னைச் சேர்ப்பாயாக
2 கொடிய ஒரு குக்குடக் கொடி
கொடிய கொடிய, குமர குமர, தடவி தடவ, தருமருவு தருமருவ என வழி எதுகையும் சிலேடையும் விரவி வருகின்றன
வசுசெங்கல்வராய பிள்ளை
திருவிடைக்கழி ஸ்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் ஸ்தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது. குரா மரம் ஸ்தல்விருக்ஷ்சம் திருவிடைகழி. தேவயானை மட்டும் இருகிறார் தனிசன்னதில்.
Bookmarks