Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    271. படிபுனல்


    271திருவிடைக்கழி


    தனதனன தத்தனத் தனதனன தத்தனத்
    தனதனன தத்தனத் தனதான


    படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
    பவமுறைய வத்தைமுக் குணநீடு
    பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
    பசிபடுநி ணச்சடக் குடில்பேணும்
    உடலது பொறுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
    குணர்வுடைய சித்தமற் றடிநாயேன்
    உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
    துனதுதம ரொக்கவைத் தருள்வாயே
    கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
    கொடியபடர்பு யக்கரிக் கதிர்வேலா
    குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
    குமரமகிழ் முத்தமிழ்ப் புலவோனே
    தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
    தடலனுச வித்தகத் துறையோனே
    தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
    தருதிருவி டைக்கழிப் பெருமாளே



    பதம் பிரித்து உரை

    படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு
    பவம் உறை அவத்த முக்குண(ம்) நீடு


    படி = பூமி புனல் = நீர் நெருப்பு = தீ அடல் பவனம் = வலிமை கொண்ட வாயு வெளி = ஆகாயம் பொய் = பொய் கருப் பவம் உறை அவத்தை = கருவில் பிறப்பு கூடும் துன்பம் முக்குண(ம்) = சத்துவ, ராஜசம், தாமதம் ஆகிய முக்குணங்கள் நீடு = நெடியதாய்


    பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய்
    பசி படு நிண சட குடில் பேணும்


    பயில் பிணிகள் = கூடிவரும் நோய்கள் மச்சை = மூளை சுக்கிலம் = இந்திரியம் உதிரம் = இரத்தம் அத்தி = எலும்பு மெய்ப்பசி = உடலில் உண்டாகும் பசி நிண(ம்) = மாமிசம் சடக் குடில் = (இவை கூடிய) அறிவில்லாத பொருளாகிய சிறு வீடாகப் போற்றப்படும்


    உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு
    உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன்


    உடல் அது = இந்த உடலை பொறுத்து = தாங்கி அறக் கடை பெறு = மிகக் கீழானதாய்ப் பெறப்பட்ட பிறப்பினுக்கு = இப்பிறப்பில் உணர்வுடைய = ஞானத்தோடு கூடிய சித்தம் அற்று = உள்ளம் இல்லாமல் போய் அடி நாயேன் = அடி நாயேனாகிய நான்


    உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து
    உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே


    உழலும் அது = திரிகின்ற தன்மை கற்பு அல = நீதி அன்று கழல் இணை = (உனது) திருவடியிணையை எனக்கு அளித்து = எனக்குக் கொடுத்து உனது தமர் ஒக்க = உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்துடன் வைத்து = (என்னையும்) ஒரு சேர வைத்து அருள்வாயே = அருள் புரியவாயாக


    கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன
    கொடி படர் புய கிரி கதிர் வேலா


    கொடிய ஒரு குக்குடக் கொடியவ = கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான கோழியைக் கொடியாக உடையவனே வடிவில் = அழகுள்ள புனக் கொடி படர் = தினைப் புனத்தில் (வள்ளியாகிய) கொடி படரும் புயக் கிரி = மலை போன்ற தோள்களை உடைய கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே


    குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய்
    குமர மகிழ் முத்தமிழ் புலவோனே


    குமர = இளையோனே சமர சினக்கும் அரவு = போரில் மிகக் கோபிக்கும் பாம்பை அணி = தரித்த அத்தன் = ஐயன் சிவபெருமானுடைய மெய்க் குமர = மெய்ப் புதல்வனே மகிழ் = (யாவரும்) மகிழும் முத்தமிழ்ப் புலவோனே = முத்தமிழிலும் வல்ல புலவனே


    தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த
    அடல் அனுச வித்தக துறையோனே


    தட விகட = விசேடமான அழகிய மத்தகத்து = மத்தகத்தோடு தட = பெரிய வரையர் = மலையை ஒத்தவரான கணபதியின் அத்தர் = தந்தைக்கு அத்த = குருவே அடல் அனுச = (கணபதியின்) வலிமை வாய்ந்த தம்பியே வித்தகத்து உறைவோனே = ஞான நிலையில் உறைபவனே


    தரு மருவும் எத்தலத்தரும் மருவ முத்தியை
    தரு திருவிடைக்கழி பெருமாளே


    தரு மருவு = (பல) மரங்கள் பொருந்தி விளங்கும் திருவிடைக்கழிப் பெருமாளே = திருவிடைக்கழி என்னும் பதியில் வீற்றிருப்பவனே எத்தலத்தரும் = எந்தப் பூமியில் உள்ளவர்களும் மருவ = தன்னிடம் அடைந்தால் முத்தியைத தரு = முத்தியைத் தருகின்ற (பெருமாளே)



    சுருக்க உரை






    விளக்கக் குறிப்புகள்


    அனுசன் ~ அனுஜன் - தம்பி, இளையவன்


    1 முத்தமிழ்ப் புலவோனே


    மதித்த முத்தமிழ்ப் பெரியோனே நினைத்ததெத்தனை
    தமிழ்தனைக் கரை காட்டிய திறலோனே சமயபத்தி
    மாலை மார்ப நூலறி புலவ நக்கீரர், திருமுறுகாற்றுப்படை
    பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவனும கல்லாடம்


    2 கொடிய ஒரு குக்குடக் கொடி
    கொடிய கொடிய, குமர குமர, தடவி தடவ, தருமருவு தருமருவ என வழி எதுகையும் சிலேடையும் விரவி வருகின்றன
    வசுசெங்கல்வராய பிள்ளை




    திருவிடைக்கழி ஸ்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் ஸ்தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது. குரா மரம் ஸ்தல்விருக்ஷ்சம் திருவிடைகழி. தேவயானை மட்டும் இருகிறார் தனிசன்னதில்.
Working...
X