279. சொரூபப் பிரகாச
279 திருவொற்றியூர்


தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவக்ரம மாதர்வயி றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு பெருமாளேபதம் பிரித்து பொருள்

சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச
சுக விப்பிரதேச ரச சுப மாயா
சொருபப் பிரகாச - பிரகாச சொரூபனே[பேரொளிப் பிழம்பே] விசுவ ரூப - உலகம் அனைத்தையும் கொண்ட பிரமாக - முழு முதற் பொருளாய் நின்று நிச சுக - உண்மையான சுகத்தைத் தருபவனே [பிரமம் என்னும் பெரிய பொருளாக உள்ள மெய்மைப் பேருண்மை மேலோனே,] விப்பிரதேச - அழகனே ரசு சுப - இன்ப சுபப்பொருளே [மாபெரும் சுவையான மங்களமே] மாயா - அழியாத


துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித
தொகை விக்ரம மாதர் வயிறு இடை ஊறு


துலியப் பிரகாச - சுத்த ஒளியே [தூய அதி நுட்ப ஒளியே] மத - மதங்களின் சோலி அற்ற - தொந்தரவைக் கடந்த ரசா சவித தொகை - இன்பம் கூடிய வகையதான
[மத சொல் இயற்று அரசா- சமய நூட்கள் சால இயற்றிய கலை அரசே
சவித தொகை விக்ரம- தொகைப்படுத்திக் கூறும் பருதியர் (சூரியன்கள்) என வளர் ஒளி மயமாக வரும் வலியோனே,] விக்ரம - வலிமையை உடையவனே மாதர் வயிறு இடை ஊறு - மாதர்களின் வயிற்றில் ஊறுகின்ற
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை
ஏத்திடு இராக வகை அதின் மீறி


கருவில் பிறவாதபடி - கருவில் பிறக்கா வண்ணம் உருவில் - (உனது) திருவுருவத்தில் பிரமோத - விரும்பத் தக்க அடிகளை - திருவடிகளை ஏத்திட - போற்றுகின்ற ராக வகை - கீத வகைகளில் அதின் மீறி - மேம்பட்டவனாய் (விளங்கும்)


கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ
கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ
கருணைப் பிரகாச - கருணை ஒளியனே உனது அருள் உற்றிட - உனது திருவருள் கூடுவதால் ஆசு இல் - குற்றமில்லாத சிவ கதி பெற்று - சிவ கதியை அடைந்து இடர் ஆனவையை - துன்பங்கள் யாவற்றையும் ஒழிவேனோ - கடக்க மாட்டேனோ?
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில்
பிடி கைத்தல ஆதி அரி மருகோனே


குரு - நிறமுள்ள வார குக்குட கொடி - கோழிக் கொடியையும் செரு - போரில் உக்கிர - உக்கிரமான ஆதப அயில் பிடி - வெயில் ஒளி கொண்ட வேலையும் பிடித்துள்ள கைத்தல - திருக்கரங்களை உடையவனே ஆதி - ஆதியே அரி மருகோனே - திருமாலின் மருகனே


குமர பிரதாப குக சிவ சுப்பிர மா மணிய
குணம் முட்டர் அவா அசுரர் குலகாலா


குமர - குமரனே பிரதாப - கீர்த்தி விளங்கும் குக - குகனே மா - அழகிய சிவ சுப்பிர மணிய - சிவ சுப்பிரமணியனே குண முட்டர் - குணம் குறைவு உடையவரும் அவா அசுரர் - ஆசை மிக்கவருமான குலகாலா - அசுரர் குலத்துக்கு யமனே
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை
அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா


திரு - இலக்குமி ஒற்றி - சேர்ந்து உறா மருவு - பொருந்தியிருக்கும் நகர் ஒற்றியூர் - நகரமான திருவொற்றியூரில் [எண் வகைத் திருவும் தங்கி தழுவும் பதியான திருவொற்றியூரில்], வாரி திரை - கடல் அலைக்கு


திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள்
இதயத்திடமே மருவிய பெருமாளே


அருகு உற்றிடும் - அருகில் இருக்கும் ஆதி சிவன் - ஆதிசிவன் அருள் பாலா - அருளிய குழந்தையே திகழ் உற்றிடு - விளக்கம் கொண்ட யோக தவ - யோகத்திலும் தவத்திலும் மிகு முக்கிய - மிக்க சிறப்பான மா தவர்கள் - மகா வசிகளின் இதயத்திடமே - மனத்திலேயே [இதய தகராலயத்திலேயே] மருவு - பொருந்தி விளங்கும் பெருமாளே - பெருமாளே

[ ] அடைப்பு குறிக்குள் இருப்பவை திரு நடராஜன் தந்த பொருள்


சுருக்க உரைரசபதி விரிவுரை

உதய ஒளி முன் இருள் ஒதுங்கும் அது போல் பேரொளிப் பிழம்பை உள்ளம் ஊன்றி உணரும் சமயம், ஆணவ இருள் வலி அடங்கும் இதோ சிறக்க வருகிறது சிவ ஒளி என்று குரு மொழி போல் அந்நிலையில் அருள் நாதம் அறிவிக்கும் உடனே வெல் வெல் வெல் வெல் என்று உடன் தொடர்ந்து எழுகிறது வேல் அப்படித் தான் இருக்கிறது அதன் செயல்


சொரூபத்தில்நாதம் தடத்த உருவில் குலவுகிறது சேவல் கொடி சொரூபத்தில் ஞானம் , தடத்தத்தில் வேல் பேரொளி மயமான அவ் வேலையும் சேவலையும் பிடித்த கரத்தனை, குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல என அன்போடு கூவி அழைத்தார்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அநியாயம் செய்வாரை அழிப்பார் ஆதலின் திருமால் அரி எனும் பெயர் பெறுவர் அமரரில் முதல்வர், தொண்டரில் தலைவர் என்பதை எண்ணி அவரை ஆதி அரி என்றார் ஆறுமுகப் பரன் ஆடலை அறிந்தார் சிறந்த கண் மழை சிந்தினார் அந்தத் துளிகள் இரு பெண் உருவாகிப் பிரகாசித்தன அவ்விருவர்க்கும் அமுத வல்லி , சுந்தரி என பெயர் இட்டார் அமுத வல்லியை அமரர்க்கு மகளாக அளித்தார் சுந்தரியை குறவர்க்கு மகளாகக் கொடுத்தார் இருவரையும் முருகனுக்கு மணத்தில் அளித்தார் முருகன், அமரர் மருகன், குமரன், சவரர் மருகன் ( வேடுவர் மருமகன் ), என்று எவரும் சொல்ல வைத்தார் மற்றவர்க்கு இப்படி மதிப்புண்டாக, மாபெரும் பணியை தான் மறைந்து செய்தாரானாலும், மால் மருகன் முருகன் என்று அவரைப் போற்றி உலகம் புகழ்ந்தது அதனை அறிந்து ஆதி அரி மருகோனே என்று அன்பு மிகுத்து அழைத்தார்
கு - மலம், மரன் - அழித்தவன், குமர நாமத்திற்கு இப்படியும் ஒரு பொருள் உண்டு பிரதாபம் - மகிமை, பெருமை, பிரசித்தி எனினுமாம் குகன் - உயிர்களின் இதய குகையில் இருப்பவன் - வசை இல் உயிர் உள்ளமுமே குகைகளும் வதியும் இயல்பால் குகன் - என்று இதனை விரித்து உரைக்கிறது விநாயக புராணம்
தண்முகத் துய்ய மணி உண்முகச்சைவமணி சண்முகத் தெய்வ மணியை சிவசுப்பிரமாமணிய என்று கூவி அழைக்கும் அருமை கோடி பெறும்


சிவ என்பதை ஒருதலை மாணிக்கம் என்பர் அதனிலிருந்து எழுகிறது சிவசுப்ரமணியம் சு - இன்பம், பிரம - பெரிய பொருள், நியம் - விளங்கும் ஒளி எனவே இன்பப் பிரம்ம ஜோதியை சுப்பிரமணியம் என்று உரு ஏற்றினார் உள்ளம் உவகை பெறும்


ஒரு மொழியில், நகரத்தின் முன்ணகரம் வருமேல் , நகரம் ணகரமாகத் திரியும் என்பது வட மொழி விதி அதன் படி நியம் என்பது ணியம் என்று ஆயது


நலம் சிறந்த அந்தணரும் சுருதியும், வாழும் நம்மை வழிபடுவதால், நாம் சுப்பிரமணியம் ஆவோம். சுரர் , அசுரர் முதலிய எவராலும் எண்ணப்படுதலின் நம் முருகன் சுப்பிரமணியன் ஆயினன் என்று உமா தேவிக்கு சிவம் உரைத்ததாக குதுகலித்து ஒரு குறிப்பை ஸ்காந்தம் கூறுகின்றது


ராஜச தாமச குணத்தர் அசுரர் சத்ய குண சார்பு இலாதவர் ஆதலின் , குணமுட்டர் ஆயினர் மூடப்பட்ட குணிகள் அந்த மூடர்கள் பேராசை பேய் நலிய வானவர் வாழ்வை வலிந்து கவர்ந்தனர் மா துக்கம் தீர்த்து சாதுக்கள் வாழ தானவர் குலத்தை தடித்தானை, குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணமுட்டர் அவா அசுரர் குலகாலா என்று அழைக்கும் அருமையே அருமை திருவொற்றியூர் என்ற பெயரே திருமகள் நிகேதனம் அது எனலை தெரிவிக்கின்றது


ஆதி அரி மருகா, ஆதி சிவன் அருள் பாலா என்று பல தரம் சொல்லிப் பாருங்கள் ஓதும் நாவில் சுரப்பு ஊறுகின்றதே
யோகமும் தவமும் உடைய மா தவர்களே இவ்வுலகிற்கு என்றும் தேவை இடையறாது அவர்கள் தன்னை எண்ணுகின்றார் ஆதலின், அவர் இதயத்தில் நீங்காது இருப்பவனே என்ற பொருளில் திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவு பெருமாளே என்றார்


சொரூபம் - அனுபூதியில் புலனாகும் அறிவு நிலை அது தத்துவம் கடந்தது எம்மதங்கட்கும் எட்டாதது குணமும் குறியும் இல்லாதது ஆன்ம அறிவிற்கு அறிவாய் இருப்பது இறப்பும் பிறப்பும் நினைப்பும் மறப்பும் சேராதது அருள் வழியால் ஐந்தொழில் நிகழ ஒட்டாதது எதனினும் ஒன்றுவது அச்சொரூபம் இயல்பில் ஒளிர்வது ஆதலின் சொரூபப் பிரகாச என்றார்


விசுவ ரூபம் - உலக உருவம் உலகானான், உலகிற்கு உயிரானான், உலகைக் கடந்தும் உளன் எனும் பொருளில் விசுவ ரூபன் விஸ்வாந்தர்யாமி, விஸ்வாதிகன் என, ஏதமில்லாத வேதம் இறைவனை என்றும் அறிவிக்கின்றது சொரூபப் பிரகாசம் விஸ்சவரூபமாக விளங்குவதால் தான் அதை ஓதவும் உணரவும் இயல்கிறது பிரம்மாக என்பது பிரமாக என நின்றது பெரிய பொருளை பிரமம் என்பர் பெரியோர்.
சதானந்த பரத்தை நிச சுகம் என்பது நினைக்கத் தக்கது பிணைந்து கலந்த பின் பிரிவு தருவன உள எனில் அதன் வழி வருவது சிற்றின்பம் அணைந்து கலந்த பின் அத்வைதமாவது பேரின்பம் அதை ஏட்டில் விவரிக்க இடமில்லை.


ஊன்றி உணர்ந்தால் உய்தி பிறக்கும் சொரூபம் - முளை, விஸ்வ ரூபம் - விதை பிரம்மமாக இருந்த நிச சுகம் உயிர்கட்கு தன்னை உணர்த்த விப்ர தேஜஸாக விளங்குகின்றது இது குரு முகுமான கோலம் அதன் உபதேசம் ரச சுப அனுபவம் மற்ற உபதேசங்கள் எல்லாம் விரசமான அமங்கலமே


உபதேசத்தின் பின், மாயா துல்ய பிரகாசம் மலரும் இது, ஏற்றி வைத்த பின் அணையாத இதய தீப இருப்பு - பொதிய முனி அகத்து பொங்கும் இருள் விலக்க விதியும் அறியா விளக்கேற்றும் தேசிகனே- என்று அருமை போரூர் அடிகளும், - ஆபத்தை நீக்கி, வளர்த்தே சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே தீபத்தை வைத்தது பாரீர் திருச்சிற்றம்பலத்தே திகழ் நட ஜோதி என வடலூர் முனிவரும் சமிக்ஞை காட்டுவது ஊன்றி இங்கு உணரத் தகும் இந்நிலையை எவரும் ஓதலாம் உணரலாம் இங்கு சமயவாதிகளின் மோதல் இராது


எல்லார்க்கும் பரிபாகம் (மனப் பக்குவம்) ஒரே மாதிரியாக இருப்பது இல்லை தடத்த நிலையில் அவர்கள் தம் மதிக்குத் தக்கவாறு மதிக்கலாயினர் மதிநிலைக்குத் தக்க படி பேசும் மதங்கள் பிறந்தன சமய நூல்களும் எழுந்தன நூல் செய்தார் பெயர் நூல் முகப்பில் நிற்கும் அவர்களா அதை ஆக்கினார்கள்? ஒருநாளும் இல்லை அவர்கள் இதயத்தில் இருந்து இந்தந்த நூட்களை ஆக்கியது சொரூப தடத்த ஜோதி உரைத்த அந்நூலின் படி ஒழுகினால், படிகிரமுமாகி, உணர்வை அருளி அறிவே அவர்களை உயர்த்தி விடும் அந்நிலையை எண்ணி, மத சொல் இயற்று அரசா என்று விமல அந்த ஒளியை விளிக்கலாம் அல்லவா? சொல் - ஆகு பெயரால் நூலை உணர்த்திற்று
மற்றும், சமய ஒரு மொழி உதவிய சிவ லோக சம்ராஜ்ய சக்ரவர்த்தியே என்று பொருள் கோருவதும் ஒரு வகை
- உததி மிசை கடவு மரகத அருண குல துரக உப லலித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயமென யுக முடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும் - ஆன அத்தெய்வ இயல்பை சவித தொகை விக்ரம என்று அன்பொடு கூவி
- அழைக்கலாம் சவித - சூரியன், தொகை - அளவிலாமை குறித்தது, விக்ரம் - பேராற்றல்
என் கதை என்ன ?
ஊறுகாய் அந்த ஊறுகாய்ப் பாண்டத்தில் ஊறுவது போல் எத்தனையோ பேதையர் கருவில் ஊறி பிறந்தேன், இருந்தேன், படாத துன்பம் பல பட்டேன் இறுதியில் வீணே இறந்தேன் பட முடியாது இனி துயரம் பட்டதெல்லாம் போதும் என்று வாய்ப்பாட்டு முறையில் ஓயாது ஓதுவதால் பயனில்லை
ஆர்வம் கருக்குழியை அணுக வைக்கும் துதித்து மகிழ்ந்து தோகையைரையே தொழச் செய்யும் பயனாய் விளைவது பவ கதி தான்
காணத்தக்க உன் திருவடிகளில் காதல் வேண்டும் பாராயணம் எனும் பெயரால் ஏத்தி துதித்தல் என்றும் நலம் தரும் அதன் பின் கருணை நிறைந்த உன் திருவருள் கரை ஏறும் படி கை கொடுக்கும் கவலை மாயும் சிவ கதி விளையும் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று ஆன்றோர் இனிது அறிவிக்கின்றார்
பிரபோ, அந்த இனிய அருளை அருள் என்று வினயமோடு நின்று விண்ணப்பித்த படிவிளக்கக் குறிப்புகள்
1விப்பிரதேச
(புகலிக்கரசாகிய திருவளர் விப்பிரசிகாமணி) சம்பந்தர் ஆளுடை கலம்பகம் 6 (11 ஆம் திருமுறை) (வசுசெங்கல்வயராய பிள்ளை)


2 பிரமோத அடிகளை - விரும்பத் தக்க திருவடிகள்


3ஆதபயில் - ஆதப அயில் - வெயில் ஒளி கொண்ட வேல்