Announcement

Collapse
No announcement yet.

vata savithri vratham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • vata savithri vratham.

    28-6-2018.வியாழன்வட சாவித்ரி வ்ருதம்.

    puja details are there in www.drik panchang.com

    வடவ்ருக்ஷம் என்பது ஆல மரம்..இந்தஆல மரம் நல்ல குழந்தைகளையும்,நல்லஞானத்தையும் வழங்கும் சக்திவாய்ந்தது.
    ஶ்ரீதக்ஷிணாமூர்த்தி ஆல மரத்துஅடியில் அமர்ந்து

    ஸநகாதிமுனிவர்களுக்கு ஞானோபதேசம்செய்கிறார்.ஆலமரம் போல் தழைத்து வாழ வேண்டும்என்பது பழமொழி.

    ஜ்யேஷ்டேமாஸி ஸிதே பக்ஷே பூர்ணிமாயாம்இதம் வ்ருதம்
    என்கின்றபடி ஜ்யேஷ்ட மாத பெளர்ணமியானஇன்று இந்த வட ஸாவித்ரீவ்ருதத்தை செய்யலாம்.

    இதை26,27, 28 ஆகியமூன்று நாட்களிலோ அல்லது28ஆம்தேதியான இன்றோ (பெளர்ணமியன்று மட்டுமோ)செய்யலாம்.

    பெண்கள்தங்களது ஸெளபாக்கியம்நிலைக்கவும் ,அன்பானகணவன்,நீண்டஆயுள் முதலியவற்றை அடையவும்இந்த ஆல மர பூஜை செய்யலாம்.பவிஷ்யோத்தரபுராணம் இதை செய்வதால்பெண்களுக்கு ஒரு போதும்வைதவ்யம் ஏற்படாது என்கிறது.

    ஸாவித்ரிதேவி இந்த வ்ருதம் செய்துதான் ஸத்யவானுக்கு அல்பாயுஸ்என்று தெரிந்தும் திருமணம்செய்து கொண்டு யமனிடமிருந்துதன் கணவனை மீட்டாள்.;

    ஆதலால்இதற்கு வட ஸாவித்ரீ வ்ருதம்என்று பெயர்.

    ஸுவாசினிபெண்கள் இன்று காலையில்ஸ்நானம் செய்து பூஜை அறையில்அமர்ந்து கொண்டு சுக்லாம்பரதரம்+சாந்தயே.மமோபாத்த+
    ஶ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்“”மம ஜன்ம ஜன்மநி அ வைதவ்ய

    ப்ராப்தயேபர்து:சிராயுராரோக்ய ஸம்பதாதி ப்ராப்திகாமநயா ஸாவித்ரீ வ்ருதம்கரிஷ்யே” என்று ஸங்கல்பம்செய்து கொண்டு அருகே இருக்கும்ஆல மரத்திற்கு சென்று குடத்தில்நிறைய ஜலம் எடுத்துக்கொண்டு

    வடமூலே ஸ்திதோ ப்ருஹ்மா வட மத்யேஜனார்த்தன:
    வடாக்ரேது சிவம் வித்யாத் ஸாவித்ரீவ்ருத ஸம்யுதா வட
    ஸிஞ்சாமிதே மூலம் ஸலிலைரம்ருதோபமை:

    என்றஸ்லோகம் சொல்லி ஆல மரத்திற்குநிறைய ஜலம் விட
    வேண்டும்.பிறகுபக்தியோடு ஐந்து அல்லது ஏழுதடவை ஆல
    மரத்தைப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்துவீட்டிற்கு வந்து விடவேண்டும்.

    வீட்டில்ஹால் சுவற்றில் கிழக்கு முகமாகமஞ்சள் அல்லது காவியால் ஆலமரம் படம் வரைந்தோ,அல்லதுஒரு சுத்தமான துணி விரித்து

    அதில்ஒரு பாத்ரம் நிறைய பச்சரிசிவைத்து அதில் சில தங்கம்அல்லது வெள்ளி காசுக்களைவைத்து அதில் ஸாவித்ரியைபூஜை செய்யலாம்.

    அஸ்மின்சித்ர படே அல்லது அஸ்மின்கலசே வட வ்ருக்ஷம்,ப்ருஹ்மாணம்,ஸாவித்ரீம்,ஸத்யவந்தம்,தர்மராஜம்,நாரதம்ச ஆவாஹயாமி.
    ஸ்தாபயாமி-பூஜயாமிஎன்று பூக்களை போட்டு ஆஸனம்முதலிய 16உபசாரபூஜை செய்து தேங்காய்,பழம்,அச்சுவெல்லம் நிவேதனம் செய்யவேண்டும்.

    ஓங்காரபூர்விகே தேவி ஸர்வ துக்கநிவாரணி வேத மாதர் நமஸ்துப்யம்ஸெளபாக்கியஞ்ச ப்ரயஸ்சமேஎன்று ப்ரார்தித்துக் கொள்ளவும்.கையில்புஷ்பம் அக்ஷதை வைத்துக்கொண்டு

    கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி சுத்தஜலத்தால் அர்க்யம் தர
    வேன்டும்.

    ஓங்காரபூர்விகே தேவி ஸர்வ துக்கநிவாரணீ வேத மாதர் நமஸ்
    துப்யம்அ வைதவ்யம் ப்ரயஸ்சமே.வேதமாத்ரே நம:இதமர்கியம்.

    பதிவ்ரதேமஹா பாகே வஹ்ணி யாநே சுசிஸ்மிதே த்ருடவ்ருதே
    த்ருடமதேபர்துஸ்ச ப்ரியவாதினி ஸாவித்ரியைநம;இதமர்கியம்.

    அவைதவ்யம்ஸ்ச ஸெளபாக்கியம்தேஹி த்வம் மம ஸுவ்ரதே.
    புத்ரான்பெளத்ராம்ஸ்ச ஸெளக்யஞ்சக்ருஹாணார்க்யம் நமோஸ்துதேஸாவித்ரியை நம:இதமர்க்கியம்.

    த்வயாஸ்ருஷ்டம் ஜகத் ஸர்வம் ஸதேவாஸுர மாநவம் ஸத்ய
    வ்ரததரோ தேவ ப்ருஹ்ம ரூப நமோஸ்துதேப்ருஹ்மணே நம;
    இதமர்க்கியம்.

    த்வம்கர்ம ஸாக்ஷி லோகானாம் சுபாசுப விவேசக:
    க்ருஹாணார்க்கியம்தர்மராஜ வைவஸ்வத நமோஸ்துதே.
    யமாயநம:இதமர்க்கியம்.

    பிறகுகீழ் கண்ட ஸ்லோகம் சொல்லிப்ரார்த்தனை செய்துகொள்ளவும்.
    அவியோகோயதா தேவ ஸாவித்ர்யா ஸஹிதஸ்யதே
    அவியோகஸ் ததா ஸ்மாகம் பூயாஜ் ஜன்மநிஜன்மநி.

    பிறகுஒரு மூங்கில் தட்டில் மஞ்சள்,குங்குமம்,வளையல்சீப்பு,கண்ணாடிமாலை (புடவை)ரவிக்கைதுண்டு முதலிய ஸெளபாக்கியத்ரவ்யங்கள் தக்ஷிணை வைத்து

    ஸெளபாக்கியத்ரவ்யம் ஸுபகே வ்ரத ஸம்பூர்த்திஹேதவே
    ப்ருஹ்மண:ப்ரீணநார்த்தாய ஸாவித்ரீ ப்ரதிக்ருஹ்யதாம்இதம்
    ஸெளபாக்கியத்ரவ்யம் ஸாவித்ர்யாதிப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே.

    என்றுசொல்லி அம்மன் சன்னதியில்வைத்து விட்டு ,பிறகுஅதை வயதான சுமங்கலி பெண்களுக்குதந்து விட வேண்டும்.அன்றுஇரவு
    ஸாவித்ரீஸத்யவானீன் சரித்ரத்தைபடிக்கவோ,கேட்கவோவேண்டும்.

    இவ்வாறுபூஜை செய்ய முடியாதவர்கள்ஆல மரத்திற்கு ஜலம் விட்டு
    விட்டுநமஸ்கரித்து,அர்க்யம்தந்து சரித்ரம் படிக்கலாம்.

    இதனால்எப்படி பட்ட ஆபத்துகளிலிருந்தும்தனது கணவனை மீட்டு விடலாம்..கருத்துவேறுபாடுகள் நீங்கி கணவன்மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும்..
Working...
X