Announcement

Collapse
No announcement yet.

Muruga bhakti - Surandaiyur Adhavan - Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Muruga bhakti - Surandaiyur Adhavan - Spiritual story

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி
    🍁 *உண்மையான பக்திக்கு முருகன் கருணை உண்டு!*🍁
    முருகப் பெருமானின் பரிபூரண அருள் பெற்ற அடியார்களில் ஆதவர் என்பவரும் ஒருவராவார்.
    இராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து *'திருமலை முருகன் மணங்கமழ் மாலை'* எனும் நூறு பாடல்களைப் பாடியவர்.
    இவரை வணங்கி வாழ்த்துப் பெற வருவோர், பொன்னையும் பொருளையும் இவர் காலடியில் கொட்டி விட்டுப் போவார்கள்.
    ஆனால், இவற்றின் மீது ஆசைகளை செலுத்தாமல், ஏழைகளுக்குப் பகுதி பகுதியாகப் பிரித்து கொடுத்து விடுவார் ஆதவர்.


    ஆதவரின் உறவினர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. என்ன அக்கிரமம்! உதவாக்கரை! என்று ஆதவனை ஒதுக்கி வைத்திருந்தனர்.


    அவன் ஒரு துறவி ஆனதுடன், தம்மிடம் சேரும் செல்வத்தை யார் யாருக்கெல்லாமோ வாரிக் கொடுக்கிறானே…


    நாமலும் விடக்கூடாது. அவனிடம் உள்ள பொருட்களை அள்ளிக் கொள்ள வேண்டும்!' என்று தீர்மானித்து, ஆதவரிடம் பாசம் வைப்பது போல வந்து ஒட்டிக்கொண்டார்கள்.


    இவர்களது தொல்லைகளை தாங்காத ஆதவர் மனம் அதிர்ந்தார். 'இனி, நாம் இங்கு இவர்களோடு இருக்கக் கூடாது! என்று முடிவெடுத்தவர்.


    ஒரு நாள் இரவு ஊரை விட்டே வெளியேறினார்.


    நல்லவர்களுக்கு என்றும், எங்கும் வரவேற்பு இருக்கும். அதுபோல, ஆதவர் சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.


    இவர் சொல்வது பலிக்கிறது. இவரிடம் ஆசி பெற்றால், காசும் பணமும் கொட்டும்! என்ற எண்ணத்தில் மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்தது.


    ஆதவர் யோசித்தார். இனி, ஒரு நாள் தங்கிய ஊரில் மறு நாள் தங்கக் கூடாது. எவர் கூப்பிட்டாலும் அவர்களது வீட்டுக்குச் சாப்பிடப் போகக் கூடாது! என்று முடிவெடுத்தார்.


    அப்போது சுரண்டையில் (தென்காசிக்கு அருகில் இருக்கிறது) பாடல் சுவையறிந்த பக்திமான்கள் பலர் இருப்பதை தெரிந்து கொண்டார்.


    எனவே, அந்த ஊருக்கு மட்டும் அடிக்கடி போய் வந்தார் ஆதவர். அங்கும் ஒரு நாளுக்கு மேல் தங்க மாட்டார்.


    அவ்வூரில், மந்திர வித்தைகளில் கைதேர்ந்த மந்திரவாதி ஒருவன் இருந்தான்.


    அவனது கொடுஞ்செயல் களைக் கண்டு அஞ்சி, இவ்வூரில் எவரும் அவனது வீட்டுப் பக்கம் மறந்தும்கூட போவது கிடையாது.


    ஒரு நாள் மந்திரவாதி, கடுமையான மந்திர சோதனையில் ஈடுபட்டிருந்தான்.


    உச்சி வேளை. சுரண்டையின் வீதியில் நடந்து கொண்டிருந்தார் ஆதவர்.


    வெயிலின் கொடுமை தாளாது எதிரில் தெரிந்த குடிசைக்குள் நுழைந்தார்.


    அது, மந்திரவாதியின் குடிசை என்பது அவருக்குத் தெரியாது. குடிசைக்குள் பலகை ஒன்று தென்பட, 'முருகா! என மொழிந்தபடி அதில் அமர்ந்தார்.


    இதைப் பார்த்து மந்திரவாதி பதைபதைத்தான். "டேய், யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்ட பலகையில் உட்கார்ந்திருக்கிறாயே..ஏ' பாவி!" என்று அரற்றினான்.


    உடனே ஆதவர், பலகையில் இருந்து பரபரப்பாக எழுந்தார். ஐயா!, வெயிலின் கொடுமை தாங்காமல் உள்ளே நுழைந்து விட்டேன். மன்னியுங்கள்! என்றார்.


    மந்திரவாதி முன்னைவிட அதிகமாக கத்தினான். மன்னிப்பதா?, நானா? முட்டாள்! முட்டாள்!!, மந்திரப் பலகை மேல் உட்கார்ந்த உனக்கு, இன்றே மரணம் வரப்போகிறது. போ வெளியே! என்று ஆதவரின் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விட்டான்.


    வீதியில் வந்து விழுந்த ஆதவர், வாழ வைக்கும் மந்திரங்களை இப்படி அழிவுச் செயலுக்குப் பயன்படுத்துகிறானே! என்றபடி எழுந்து போனார்.


    கோயில் குளம் ஒன்று தெரிய, அதில் இறங்கி தாகம் தீர தண்ணீர் அருந்தினார், கோயில் வாசலில் வந்து அமர்ந்தார்.


    மாலை வேளையில் கோயிலுக்கு வந்தவர்கள், ஆதவருக்கு நடந்ததை அறிந்து திடுக்கிட்டனர்.


    அவன் மகா கொடூரன் ஆயிற்றே. நீங்கள் அங்கு போகலாமா? அவன் சொல்வதெல்லாம் பலித்துவிடுமே!" என்றனர்.


    இறப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இறந்துவிட்டால் உங்களில் எவராவது ஒருவர் எனது உடலை எரித்து விடுங்கள். யாருக்கும் தெரியக் கூடாது! என்றார்.


    ஆதவனின் வார்த்தைகளை கேட்டு ஊராரின் முகங்கள் வாடிப் போயின.


    ஆதவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். வருந்தாதீர்கள்! இறைவனின் ஆணையை நம்மால் மீற முடியுமா? *'என் கடன் பணி செய்து கிடப்பதே'* என்று சைவத் திருமுறைகள் கூறுகின்றதே.


    நாம், அதன்படியா நடந்து கொள்ளுகிறோம்? கொஞ்ச நேரம் அவனை நினைத்தோம். அதுவும் ஏதாவது பலனை எண்ணிச் செய்தோம். மற்ற நேரம் எல்லாம் கூலிக்குத்தானே போடித்தோம். வாழ்வியல் சுகங்களை விரும்பிய அளவுக்கு முருகனை விரும்பினோமா?, இல்லையே! நீங்கள் ஆறுமுகனை நினையுங்கள், உங்கள் அல்லல்கள் விலகும்! என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.


    அந்தி சாயும் நேரம். ஊர்க் கோடியில் உள்ள மயானத்தை அடைந்தார் ஆதவர். அங்கிருந்த செடிகளின் இளந்தளிர்களைப் பறித்துத் தரையில் பரப்பி, அதன் மீது அமர்ந்தார்.


    தொடர்ந்து, *ஓம் சரவணபவாய நம* என்று உருவேற்றினார்.


    இருள் சூழ ஆரம்பித்தது. இரவு மணி பன்னிரண்டு. திடீரென்று ஒளி வட்டம் ஒன்று சுழன்று வந்தது. அதன் நடுவில் இருந்து வெளிப்பட்ட அழகு வேல் ஒன்று துள்ளிக் குதித்துக் கூத்தாடியது.


    அருகில் தோகை மயில் ஒன்றும் நடனம் புரிந்தது. 'முருகா!… முருகா!! வேலவா என்னைக் காக்க வேலையும் மயிலையும் அனுப்பினாயா?என கண்ணீர் மல்க வேலையும், மயிலையும் வணங்கினார் ஆதவர்.


    அதே நேரம் பனைமர உயரத்திற்கு கருமையான உருவம். காடு அதிரக் கூவியபடி ஆதவரை நெருங்கியது. அதன் கையில் ஒரு தண்டு இருந்தது.


    அதன் விகாரத் தோற்றத்தைக் கண்டு, கண்களை மூடிக் கொண்ட ஆதவர், *'முருகா… முருகா!'* எனக் கூவினார்.


    மறுகணம் கருமை உருவத்தின் மேல் வேல்* பாய்ந்தது. இரு துண்டுகளாகப் பிளந்து கீழே விழுந்தது அந்த கரிய உருவம்.


    கீழே விழுந்த அந்தத் துண்டங்களை ஓடி வந்து விழுங்கியது மயில். தொடர்ந்து மேலும் பல கரிய உருவங்கள் ஆரவாரத்துடன் ஆதவரை கொல்ல பாய்ந்து வந்தன.


    ஆனால், அவற்றையும் அழித்தது வீர வேல்! சற்று நேரத்தில் சேவல் ஒன்று 'கொக்கரக்கோ' என்று கூவியது. வேலும் மயிலும் உடனே அங்கிருந்து மறைந்தன. ஆதவன் உதித்தான்.


    ஆதவருக்கு உடலெல்லாம் வியர்த்தது. 'முருகா!' என்று ஆகாயத்தை நோக்கி வணங்கினார். மயானத்தை விட்டு வெளியேறினார்.


    சுரண்டையூரில் இருக்கும் அனுமந்தப் பொய்கையில் நீராடினார். காலை வழிபாட்டை முடித்து ஊருக்குள் நுழைந்தார்.


    எதிர்ப்பட்ட வீட்டுத் திண்ணை ஒன்றில் ஏறி உட்கார்ந்தார். வீதியில் சென்றவர்கள் பேசியது காதில் விழுந்தது.


    அறிவில்லாத மந்திரவாதி. ஆதவரை எதிர்க்கலாமா? அவர், சும்மாவா சுடுகாட்டுக்குப் போனார்! அங்கு போய் ஏதோ செய்திருக்கிறார். அதுதான் மந்திரவாதியை அழித்து விட்டது என்று!


    இதைக் கேட்டு ஆதவர் மனம் நடுங்கினார். அடடா… மற்றவர்களை அழிக்கும் பாவத்தை நான் மனதால் கூட நினைத்தது இல்லையே!, அடியேனைக் காக்க ஆறுமுகன் செய்த லீலை இது! என்று அவர்களிடம் சொன்னார்.


    கண்ணீர் கணீர் என ஒலித்தது கோயில் மணி. மெய் சிலிர்த்தது ஆதவருக்கு.


    முருகனை தொழுதபடி கோயிலுக்குள் புகுந்தார். வள்ளி மணாளா!, மந்திரவாதியின் ஆன்மாவுக்கு அமைதியைக் கொடு! என வேண்டினார்.


    பிறகு எவரும் அறியாமல் சுரண்டையில் இருந்து வெளியேறினார் ஆதவர்.


    இனி எங்கும் ஒரு நாள்கூட தங்கக் கூடாது. காலையில் ஓரிடம்; மதியம் ஓரிடம், இரவு ஓரிடம் எனத் தீர்மானித்துக் கொண்டார்.


    இதன்படி காலையில் தென்காசி, நண்பகலில் சங்கரநாராயணர் கோயில், மாலையில் கரிவலம்வந்தநல்லூர் என்று பயணப்பட்டார்.


    அன்று இரவு கோயிலில் புகுந்து குமாரவேளை வழிபட்டார். இரவு மணி பத்தானது. பக்கத்து சத்திரத்தில் போய்ப் படுத்தார்.


    பசி காதை அடைத்தது. அப்போது, யார் ஐயா அது? சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் இருக்கிறது. வேண்டுமா? என்றபடி கையில் தட்டுடன் வந்தாள் ஒரு பெண்மணி.


    பார்த்தார் ஆதவர். அம்மா, தாங்கள் யார்? பார்ப்பதற்கு என் அன்னை வள்ளி நாயகி போல இருக்கிறதே?" எனக் கேட்டார்.


    கோயிலில் உங்களைப் பார்த்தேன். பொங்கலைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. கொண்டு வந்தேன் என்றபடி கையில் இருந்தவற்றை ஆதவரிடம் கொடுத்து விட்டு போய்விட்டாள்.


    வயிறாரச் சாப்பிட்ட ஆதவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.


    வேலும் மயிலும் துணைசெய்ய வேதனை போம், ஆலும் பசிவந்தால் அன்னை பாலுளாள்
    என்றும் குறையில்லை ஏத்துமினோ தொண்டீர்!
    பொன்னும் இருள் பிறவிபோம்!


    என்று படபடத்துப் பாடினார் ஆதவர். இப்படியே அவர் போன இடங்களில் எல்லாம், யார் யார் மூலமாகவோ அன்னம் உதவினான் முருகன். ஆதவரும் சென்ற இடமெல்லாம் அவனின் புகழைப் பாடினார்.


    இறைவன் திருவருள் நம்மிடம் என்றும் இருக் கிறது. வாழ்நாளை வீணாக்காதீர்கள். பரமனை நம்புங்கள்! வேலுண்டு வினை இல்லை! மயிலுண்டு பயமில்லை!" என்று விரிவுரைகள் சொல்லி, தனது அனுபவத்தையும் விவரித்து மக்களை நல்வழிப் படுத்தினார் ஆதவர்.


    பக்தி செலுத்திய ஆதவரை, ஒரு விசாக புண்ணிய திருநாளன்று தன்னுடன் சேர்த்துக் கொண்டான் வடிவேலன்.
    முருகா சரணம்!
Working...
X