Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 21 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 21 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : தாயே ! வ

    ��


    श्री भूस्तुति : 21 / 33







    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    தாயே ! வராஹனுக்கு , மஹிஷி , நீயே !







    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    आविर्मदै: , अमर , दन्तिभि: , उह्यमानाम् ;

    रत्नाकरेण , रुचिराम् , रशना , गुणेन ।

    मात: ! त्रिलोक , जननीम् , वनमालिनीम् , त्वाम् ;

    माया , वराह , महिषीम् - अवयन्ति ! सन्त: ॥



    ஆவிர்மதை: , அமர , தந்திபி: - உஹ்யமாநம் ;

    ரத்நாகரேண , ருசிராம் , ரஶநா , குணேந |

    மாத: ! த்ரிலோக , ஜநநீம் , வநமாலிநீம் , த்வாம் ;

    மாயா , வராஹ , மஹிஷீம் - அவயந்தி ! ஸந்த: ||




    मात: ............. தாயே !

    आविर्मदै: ........ மதநீர்ப் பெருக்கை உடைய ,

    अमर दन्तिभि: .. திக் கஜங்களால் ,

    उह्यमानाम् ....... தலையில் , தாங்கப் படுபவளும் ;

    रत्नाकरेण........ இரத்தினங்கள் நிறைந்த கடலை ,

    रशना गुणेन ..... மேகலையாகக் , கொண்டு ,

    रुचिराम् ........ அழகானவளும் ;

    त्रिलोक ......... மூவுலகுக்கும் ,

    जननीम् ......... காரணம் (தாய்) ஆனவளும் ;

    वनमालिनीम्.... வன மாலை அணிந்த வராஹனுக்கு மனைவி ஆனவளும் (காடு நிறைந்தவளும்) ஆன ;

    त्वाम् ............. உன்னை ;

    माया वराह ...... தன் ஸங்கல்பத்தால் , தோன்றிய , வராஹப் பிரானுக்கு ,

    महिषीम् ......... பட்ட மஹிஷியாக ,

    सन्त: ............ பெரியோர்கள் ;

    अवयन्ति ........ அறிகின்றனர் !


    ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:


    * பூமிப் பிராட்டியே !

    * மூவுலகுக்கும் , நீ , தாயாய் , விளங்குகிறாய் . உன் வடிவமான , பூமியும் , புண்ணிய , பாபங்களின் , பலனை , அனுபவிக்கும் , இடம் , ஆதலால் , மூன்று உலகுக்கும் , காரணமாக அறியப் படுகிறது.

    *தன் ஸங்கல்பத்தால் , வராஹமாக , அவதரித்த பெருமானுக்கு , உன்னைப் பட்ட மஹிஷியாகப் பெரியோர் , அறிகின்றனர். அதற்குரிய , பெருமைகள், எல்லாம், உன்னிடம், நிரம்பி உள்ளன.

    * உலகில் , பட்ட மஹிஷி யானை மீது , அமர்வாள். இரத்தினங்கள் பதித்த மேகலையை, அணிவாள் , மாலைகளை , அணிவாள்.

    * அவ்வாறே , உன் வடிவமான , பூமியை , மதநீரைப் பெருக்கும் , திக் கஜங்கள் , தம் மீது , ஏற்றிக் கொண்டு , இருக்கின்றன. உன், வடிவமான பூமியை , இரத்தினங்களின் உறைவிடமான , கடல் , மேகலை போல் , சூழ்ந்து உள்ளது. நீ வனமாலையை அணிந்த பகவானுக்கு , மனைவியாய் , இருக்கிறாய் . உன் வடிவமான , பூமியும் , வனங்கள் நிறையப் பெற்றுள்ளது.

    * இவ்வாறு , பேரரசிக்கு , உரிய தன்மைகளை உடைய நீ , வராஹப் பிரானுக்கு , மஹிஷியாக , இருப்பது , மிகப் பொருத்தம் .




    ��






    Last edited by sridharv1946; 28-06-18, 15:09.
Working...
X