289.உரையுஞ் சென்றது
289புனவாயில்
திருப்பெருந்துறை ( ஆவுடையார் கோயில்) அருகில். (பழம்பதி, விருத்தகாசி என்வும் அழைகப்படும்)
தனனந் தந்தன தானன தந்தன
தனனந் தந்தன தானன தந்தன
தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான
உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது
விழியும் பஞ்சுபொ லானது கண்டயல்
உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால்


ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளiர்ந்தது
முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது
உ டலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி


வரவொன் றும்பலி யாதினி என்றபின்
உ றவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ
மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் .... இயல்தோகை

மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய
வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித
வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் .... வருவாயே


அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள
கவியின் சங்கமி ராகவ புங்கவன்
அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன்


அருளுங் கண்டத ராபதி வன்புறு
விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய
அகமும் பைந்தொடி சீதைம றைந்திட .... .. வழிதோறும்


மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள்
டகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான


மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண்
முழுதுங் கண்டந ராயணன் அன்புறு
மருகன் தென்புன வாயில மர்ந்தருள் .... .. பெருமாளேபதம் பிரித்து உரை

உரையும் சென்றது நாவும் உலர்ந்தது
விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டயல்
உழலும் சிந்துறு பால்கடை நின்றது கடை வாயால்


உரையும் சென்றது - வாக்கு பேச முடியாமல் போயிற்று நாவும் உலர்ந்தது - நாவும் வறண்டு போயிற்று விழியும் பஞ்சு பொல் ஆனது - கண்கள் பஞ்சடைந்து போயிற்று பார்வை மங்கியது , கண்டயல் உழலும் - இந்த நிலையைப் பார்த்து சிந்துறு பால்கடை நின்றது - மன வேதனைப்பட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வாயில் இட்ட பால் ( நாக்கு வறண்டததினால்) வயிற்றுக்குள் போகாமல்
கடை வாயால் - வாயின் ஓரமாக வெளியே வரும் நிலை ஏற்பட்டது


ஒழுகும் சஞ்சல மேனி குளiர்ந்தது
முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது
உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி


ஒழுகும் சஞ்சல - இத்தனை நாளாக சுறு சுறுப்பாக இருந்த இந்த உடம்பு, மேனி குளிர்ந்தது - தேக சூடு நீங்கி குளிர்ந்து விட்டது, முறி முன் கண்டு - முறிந்து போய் ஆட்டம் இல்லாமல்
கை கால்கள் நிமிர்ந்தது - கைகளும் கால்களும் நின்று விடுகிறது, உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது - உடம்பும் வயிறும் பருமனாகி பிறகு வடிந்து போய் விடுகிறது, பரிகாரி வர - இந்த நிலையில் பார்க்க வந்த வைத்தியர்


வர ஒன்றும் பலியாது இனி என்ற பின்
உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ
மறல் வந்து இங்கு எனது ஆவி கொளும் தினம் இயல் தோகை


இனி ஒன்றும் பலியாது என்ற பின் - இனி எந்த வைத்தியமும் பயன்தராது எனச் சொல்லிப் போனவுடன், உறவும் பெண்டிரும் - உறவினர்களும், பெண்களும் மோதி விழுந்து அழ - தலையில் அடித்துக் கொண்டு அழுது இவ்வுடல் மேல் விழ மறல் வந்து இங்கு - அந்நேரம் எமராஜன் அங்கு எனது ஆவி கொளும் தினம் - வந்து எனது உயிரை பறித்துக் கொண்டு போகும் நிலையில்,


மயிலும் செங்கைகள் ஆறு இரு திண் புய
வரை துன்றும் கடிமாலையும் இங்கித
வன மின் குஞ்சரிமாருடன் என்றன்முன் வருவாயே


இயல் தோகை மயிலும் - சிறந்த தோகைகளை உடைய நினது மயில் வாகனமும் செங்கைகள் ஆறு இரு திண் புய வரை - வலிமை வாய்ந்த 12 புயங்களில் துன்றும் கடி மாலையும் - விளங்கும் வாசனை மிக்க கடப்ப மாலைகளுடன் இங்கித வன மின் குஞ்சரிமாருடன் - உனக்கு இன்பத்தைத் வனத்தில் வாழும் மின்னல் கொடி போன்ற வள்ளி, தேவயானை சமேதராக என்றன்முன் வருவாயே - என் முன் எழுந்தருளி எனக்கு அருள் புரிய வேண்டும்,


வேறுன்
அருளும் கண்டதராபதி வன்புறு
விஜயம் கொண்டு எழு போது புலம்பிய
அகமும் பைந்தொடி சீதை மறைந்திட


வேறு உன் அருளும் கண்ட - உனது இன்னொறு அம்சமான பரமசிவன் அருள் பெற்ற
தராபதி - பூலோகத்திற்கு அரசனான இராவணன்,
வன்புறு விஜயம் கொண்டு எழு போது - வன் முறையினால் சீதையைக் கவர்ந்து செல்ல,
புலம்பிய அகமும் பைந்தொடி சீதை மறைந்திட - அழுது கொண்டே போன சீதை ஆகாயத்திலே
மறைந்து போக,
வழிதோறும்
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள்
கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்தெறி வாயிது பந்தென


வழிதோறும் மருவும் - தான் போகும் வழியெல்லாம் அடையாளம் காட்டுவதற்காக
குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி - தான் அணிந்திருந்த குண்டலம், வளையல்கள், சிலம்பு, கங்கணம், தண்டை, நூபுரம் மஞ்சரி,
பந்தெறி வாயிது பந்தென - இவைகளைச் சேர்த்து பந்து போல சுருட்டிஎறிய
முதலான
மலையும் சங்கிலி போல மருங்கு விண்
முழுதும் கண்ட


முதலான மலையும் சங்கிலி போல மருங்கு - இவைகளை எல்லாம் பார்த்துக் போன கொண்டு தொடர்ச்சியாக இருக்கும் மலைகளை எல்லாம் கடந்து,
விண் முழுதும் கண்ட ஆகாயத்தில் - அவள் போன சுவடு தெரிகிறதா என்று பார்த்துச் சென்ற


அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள
கவியின் சங்கம் இராகவ புங்கவன்
அறிவும் கண்டு அருள் வாய் என அன்பொடு தர
அரி மைந்தன் புகழ் மாருதி - சூரிய புத்திரனான சுக்ரீவன் புகழும் ஹனுமான்,
என்று உள கவியின் சங்கம் - இவர்களைப் போல் மற்ற எல்லா வானரங்களiன் கூட்டத்தை,
இராகவ புங்கவன் - பார்த்து பரிசுத்த மூர்த்தியான இராமன்,
அறிவும் கண்டு அருள் வாய் என - நீங்கள் எல்லோரும் சென்று உங்கள் புத்தியைப் பயன் படுத்தி சீதா பிராட்டியின் இருப்பிடத்தைக் கண்டு வாருங்கள் என்று சொல்லி பிறகு


நராயணன் அன்புறு
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அன்பொடு தர அன்புடன் ஹனுமனிடம் (அந்த கணையாழியைத்) தர,
நராயணன் அன்புறு மருகன் - நாராயணனின் அன்புக்குப் பாத்திரமான மருகனே,
தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே - புனவாயில் என்ற பதியில் விளங்கும் பெருமாளே
வாக்கு பேச முடியாமல, நாவும் வறண்டு போய் கண்கள் பஞ்சடைந்து போய் பார்வை மங்கி, இந்த நிலையைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் வாயில் இட்ட பால் வயிற்றுக்குள் போகாமல் வாயின் ஓரமாக வெளியே வரும் நிலை ஏற்பட்டதுஇத்தனை நாளாக சுறுசுறுப்பாக இருந்த இந்த உடம்பின், தேக சூடு நீங்கி, அதுவும் குளிர்ந்து
விட்டது, கைகளும் கால்களும் ஆட்டம் இல்லாமல் நின்று விட்டது.
உடம்பும் வயிறும் பருமனாகி பிறகு வடிந்து போய் விடுகிறது. இந்த நிலையில் பார்க்க வந்த வைத்தியர்இனி எந்த வைத்தியமும் பயன் தராது எனச் சொல்லிப் போனவுடன், உறவினர்களும், பெண்களும் தலையில்
அடித்துக் கொண்டு அழுது இவ்வுடல் மேல் விழ அந்நேரம் எமராஜன் அங்கு எனது வந்து எனது உயிரை பறித்துக் கொண்டு போகும் நிலையில்,

சிறந்த தோகைகளை உடைய நினது மயில் வாகனமும் வலிமை வாய்ந்த 12 புயங்களiல் விளங்கும் வாசனை மிக்க கடப்ப மாலைகளுடன் உனக்கு இன்பத்தைத் தருகின்ற வனத்தில் வாழும் மின்னல் கொடி போன்ற வள்ளி, தேவயானை சமேதராக என் முன் எழுந்தருளி எனக்கு அருள் புரிய வேண்டும்


சூரிய புத்திரனான சுக்ரீவன், புகழும் ஹனுமான், இவர்களைப் போல் மற்ற எல்லா வானரங்களiன் கூட்டத்தை, பார்த்து பரிசுத்த மூர்த்தியான இராமன், நீங்கள் எல்லோரும் சென்று உங்கள் புத்தியைப் பயன் படுத்தி சீதா பிராட்டியின் இருப்பிடத்தைக் கண்டு வாருங்கள் என்று சொல்லி பிறகு அன்புடன் ஹனுமனிடம் ( அந்த கணையாழியைத்)தர, உனது வேறு அம்சமான
பரமசிவன் அருள் பெற்ற, பூலோகத்திற்கு அரசனான
இராவணன், வன் முறையினால் சீதையைக் கவர்ந்து செல்ல, அழுது கொண்டே போன சீதை ஆகாயத்திலே மறைந்து போக, தான் போகும் வழியெல்லாம் அடையாளம் காட்டுவதற்காக தான் அணிந்திருந்த நகைகளைச் சேர்த்து பந்து போல சுருட்டி எறிய, இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு போன தொடர்ச்சியாக இருக்கும்
மலைகளை எல்லாம் கடந்து, அவள் போன சுவடு தெரிகிறதா என்று அன்று பார்த்துச் சென்ற நாராயணனின் அன்புக்குப் பாத்திரமான மருகனே, புனவாயில் என்ற பதியில் விளங்கும் பெருமாளே
எமன் எதிரில் வரும் ச்மயம் முருகா, நீ நேரில் வர வேண்டும் என விண்ணப்பித்த திருப்புகழ் பாடல்கள்


கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும்
கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவு உறு
கருத்து நைந்து அலம் உறும் பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
--உனைத்தினம் 6
ஒரு மகிடம் மிசை ஏறி
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில்
அஞ்சல் என வலிய மயில் மேல் நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது
அன்பன் என மொழிய வருவாயே
-------------- தந்த பசிதனய 31


யம படர்கள்
நின்று சருவ மலமே ஒழுக உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும்
------------ தொந்தி சரிய 34


பகடு அது முதுகினில் யம ராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு
தஞ்சம் ஆகிய வழிவழி அருள் பெறும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்
------------- பஞ்சபாதகன் 39


.. அவ்வேளை கண்டு
கடுகி வர வேணும் எந்தன் முனமே தான்
-------வருவபவர்ளோலை 157


அசந்த போது என் துயர் கெட மாமயில் வரவேணும்
------------------- இசைந்த 335


இங்கித வன மின் குஞ்சரிமாருடன் என்றன்முன் வருவாயே
-------------------- உரையும் 289


எமன் என் உயிரைக் கவர வரும் முன், முருகா என் எதிரில் நீ வரவேண்டும் என வேண்டு கோள் விடுத்த திருப்புகழ் பாடல்கள்


தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும்
தோகை மேல் கொண்டு முன் வரவேணும் ----------- காலனார் 25


நெடியன எழு புணரியும் முது
திகிரி திகிரியும் வருக என வரு தகு
பவுரி வரும் ஒரு மரகத துரகதம் மிசை ஏறி
பழய அடியவர் உடன் இமையவர் கணம்
இரு புடையும் மிகு தமிழ் கொ(ண்)டு மறை கொ(ண்)டு
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வர வேணும்
------- கொடிய மறலி 179


மோது மறலி ஒரு கோடி வேல் படை
கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட ....
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே
-------- மோது மறலி -416

மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து --------------- தமர 464
முருகா என் எதிரில் நீ வரவேண்டும் என பிரார்த்தித்த திருப்புகழ் பாடல்கள்
கலந்து பண்பு பெற அஞ்சலஞ்ச லெனவாராய்
-------------- கண்டுமொழி 23
செம் பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே
------ முந்து தமிழ் மாலை 46
அடிமை கொளவும் வர வேணும் ----------------------- திமிர 80
பரு மயிலுடன் குலாவி வரவேணும் ------------------- இருவினை 95
சந்த சபை தனில் எனது உளம் உருகவும் வருவாயே \
--- எந்தயத் தகையினும் 96
சென்றே இடங்கள் கந்தா எனும் போ
செம் சேவல் கொண்டு வரவேணும்
-------------------- அன்பாக 177


மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
----------------- அண்டர்பதி 230
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு
குவளை வாகும் நேர் காண வருவாயே
--------------கடிய வேக 258
மயிலும்மாடி நீயாடி வரவேணும்-
-------------------அதலசேத 325
பல கோடி வெண் மதி போலவே வருவாயே
---------------- மதனேவிய 408
நீ மயில் ஏறி உற்று வரவேணும் --------------கீத விநிநோத 461
அதிசயமென அருள்பாட வரவேணும் ------------ சுடரனைய 485
வாராய் எனக்கெதிர் முன் வரவேணும் -----------நாடா பிறப்பு 488
இரு நிலம் மீதில் எளியனும் வாழ ----------------- அகருமுமாகி 494
எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்தெதிர் நிற்பனே
கந்தர் அலங்காரம்
மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும்------------- புணர்முலை
மயில் தத்த விட்டு வரவேணும்------------------------------- கோடுசெறி
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்
---- ------- தலைவலி 78
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவணங்க வரவேணும் ஓடி வரவேணும்
-மனக்கவலை 86


உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும்------
------கடிமாமல்ர் 99


................ மறை கொ(ண்)டு
ஞான நடமேபபுரிந்து வருவாயே ------------------காரணமதாக 497
வளர் பச்சை மயிலுற்ற்று வரவேணும்-----------------வெற்றிசெய 145
இற்றைத் தினத்தில் வரவேணும் -----------முத்துத்தெறிக்க 141