290. தலங்களில்
290பெருங்குடி
வயலூர் செல்லும் வழியில் சோமரசம் பேட்டைக்கு அருகில்
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம க்ரகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் முருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரண்டக ரதண்டமிழ் வயலூரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை பெருமாளேபதம் பிரித்தல்

தலங்களில் வரும் கன இ(ல்)லம் கொ(ண்)டு மடந்தையர்
தழைந்த உதரம் திகழ் தச மாதம்


சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர்
தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம்


துலங்கு ந(ல்)ல பெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடும் தொழிலுடன் தம(து) க்ரக பாரம்


சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர்
சுடும் பினை எ(ன்)னும் பவம் ஒழியேனோ

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அங்கு அருள்
இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி


இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் மருகோனே


பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி
ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா


பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்கு உறை பெருமாளே
பத உரை


தலங்களில் - பூமியில் உள்ள இடங்களில் வரும் - இருக்கின்ற கன - பெரிய இ(ல்)லம் கொ(ண்)டு - வீட்டில் இருந்துகொண்டு மடந்தையர் - மாதர்களின் தழைந்த - பூரித்துள்ள உதரம் திகழ் - வயிற்றில் செம்மையாக தச மாதம் - பத்து மாதங்கள்


சமைந்தனர் - வளர இருந்தனர் பிறந்தனர் - பின்னர் (குழந்தையாகப்) பிறந்தனர் கிடந்தனர் - படுக்கையில் கிடந்தனர் இருந்தனர் - உட்கார்ந்தனர் தவழ்ந்தனர் - அதன் பின் தவழ்ந்து சென்றனர் நடந்தனர் - நடக்கலுற்றனர் சில காலம் - பின்பு சில காலம்


துலங்கு- விளக்கமுற்ற நல பெண்களை முயங்கினர் - நற்குணமுள்ள பெண்களோடு பொருந்தி இருந்தனர் மயங்கினர் - அவர்கள் மீது மோக மயக்கம் கொண்டனர் தொடும் தொழிலுடன் - தாம் மேற் கொண்ட தொழிலைச் செய்து தம க்ரக பாரம் - தமது இல்லற வாழ்க்கையை


சுமந்தனர் - சுமந்தனர் அமைந்தனர் - அவ்வாழ்க்கையிலேயே உடன் பட்டு இருந்தனர் குறைந்து - (தமது தொழில், பொலிவு வலிமை இவை எல்லாம்) குன்றியவுடன் இறந்தனர் - (முடிவில்) இறந்தனர் சுடும் பினை - (இப்பிணத்தைச்) சுட்டு எரியவும் இனி எனும் - என்று பிறர் சொல்லக் கூடிய பவம் ஒழியேனோ - இப்பிறப்பை ஒழிக்க மாட்டேனோ?


இலங்கையில் இலங்கிய - இலங்கை நகரில் விளக்கமுற்றிருந்த இ(ல்)லங்களுள் - வீடுகளுள் இலங்கு அருள் இல் - விளக்கமுற்ற அன்பு இல்லாத எங்கணும் இலங்கு என - எல்லா இடத்தும் (ஏ, அக்கினியே) பற்றி எரிவாயாக என்று முறை ஓதி - நீதியை எடுத்துரைத்து


இடும் கனல் - நெருப்பை வைத்த குரங்கொடு - குரங்காகிய
அனுமனோடு நெடும் கடல் நடுங்கிட - பெரிய கடலும் நடுக்கம் கொள்ள எழுந்தருள் - எழுந்தருளிய முகுந்தன் மருகோனே - திருமாலின் மருகனே


பெலம் கொடு - பலத்துடன் விலங்கலும் நலங்க - கிரௌஞ்ச மலையும் அசைவு உற அயில் கொண்டு எறி - வேல் கொண்டு எறிந்த ப்ரசண்டகர - மிக்க வீரம் கொண்டவனே தண் தமிழ் - தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரா - வயலூரானே


பெரும் பொழில் - பெரிய சோலைகளும் கரும்பு அரம்பைகள் நிரம்பிய - கரும்பும் வாழையும் நிறைந்த பெருங்குடி மருங்கு உறை - பெருங்குடிக்கு அருகில் வீற்றிருக்கும் பெருமாளே - பெருமாளேசுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்

1. பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர்
மனித வாழ்க்கையின் நிலையாமையைத் தமிழ்க் கவிதைகளில் பல இடங்களில் காணலாம்
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் -சுந்தரர் தேவாரம்
புன்னினிமேல் நீர்போல் நிலையாமைஇன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற
சென்றான் எனப்படுதலால் -நாலடியார்


2 இலங்கையில் இலங்கிய இலங்களுள்
அனுமன் வைத்த தீயை அருள் அற்ற வீடுகளை மட்டும் பற்றுமாறு கட்டளை இட்டது சிலப்பதிகாரச் செய்யுளை நினைவூட்டும்.
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவியெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தோர் பக்கமே சேர்க சிலப்பதிகாரம்