291. தீராப்பிணி
291பேரூர்
தானாத் தனதான தானாத் தனதான
தீராப் பிணிதீர சீவாத் துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் பெருமாளேபதம் பிரித்தல்தீரா பிணி தீர சீவாத்தும ஞான
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே


பத உரை


தீரா - முடிவே இல்லாத பிணி தீர - (பிறவியாகிய) நோய் முடிவு பெற சீவாத்தும-சீவனாகிய ஆத்துமாவைப் பற்றிய (இந்த சிற்றுயிருக்கு) ஞான - ஞான நிலையைத் தருவதும்


ஊர் ஆட்சியதான-உலக முழுவதையும் ஆட்சி செய்யக் கூடியதுமான ஓர் - ஒப்பற்ற வாக்கு - உபதேச மொழி ஒன்றை அருள்வாயே - (எனக்கு) உபதேசித்து அருளுக


பாரோர்க்கு - உலகில் உள்ளவர்களுக்கு இறை - தலைவனாகிய
இறை - சிவபெருமானது சேயே குமாரனே பாலா -இளையோய் கிரி ராசே - மலைகளுக்குத் தலைவனே


பேரால் - புகழால் பெரியோனே - பெரியவனே பேரூர்ப் பெருமாளே - பேரூரில் வீற்றிருக்கும் பெருமாளேசுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்
பிணிகள் மூன்று. உடற்ப்பிணி, உள்ளப்பிணி, உயிர்ப் பிணி. உடற்ப்பிணி பசி. உள்ளப்பிணி காமம், ஆசை. உயிர்ப் பிணி பிறவி. பசி என்ற தீராப்பிணியை தீர குகனே குருபரனே என நெஞ்சிற் புகழ அருள் கொண்டி நாவினிலின்பக் குமுளி சிவ அமுதூறுக உந்திப் பசியாறி ( குகனே சிதம்பரம் திருப்புகழ்) என்பார். யாவாராலும் மாற்ற முடியாத பசிப்பிணியை மாற்றும் மருந்து இறைவன் திருநாமங்கள்


காமம் என்கின்ற உள்ளப்பிணிதீர திருவடி தியானமே மருந்து.
இது ஒரு துதிப் பாடல்