294.ஆனைமுகவற்கு
294மதுரை
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த குருநாதா
தானவர்கு லத்தை வாள்கொடுது ணித்த
சால்சதுர்மி குத்த திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடுநி றக்க அருள்வாயே
வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
மாமயில்ந டத்து முருகோனே
தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
சேரமரு வுற்ற திரள்தோளா
தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
வேல்கொடுத ணித்த பெருமாளே


பதம் பிரித்தல்

ஆனை முகவற்கு நேர் இளைய பத்த
ஆறு முக வித்தக அமரேசா
ஆனை முகவற்கு - யானை முகம் கொண்ட விநாகருக்கு நேர் இளைய - நேராகப் பின் தோன்றிய இளையவரான பத்த - அன்பனே வித்தக - ஞானியே அமரேசா - தேவர்களுக்கு அரசாம் தலைவனே


ஆதி அயனுக்கும் வேத முதல்வற்கும்
ஆரணம் உரைத்த குரு நாதா
ஆதி அரனுக்கும் - முதல்வராகிய சிவபெருமானுக்கும் வேத முதல்வர் - வேதத் தலைவனான பிரமனுக்கும் ஆரணம் - வேதப் பொருளை உரைத்த- உபதேசித்தருளிய குரு நாதா - குரு நாதரே


தானவர் குலத்தை வாள் கொடு துணித்த
சால் சதுர் மிகுத்த திறல் வீரா
தானவர் குலத்தை - அசுரர்கள் குலத்தை வாள் கொடு துணித்த - வாள் கொண்டு வெட்டி அழித்த சதுர்சால் மிகுத்த - சாமர்த்தியம் நிறைந்த திறல் வீரா - வல்லமை வாய்ந்த வீரனே
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில்
வாழ்வொடு சிறக்க அருள்வாயே
தாள் இணைகள் உற்று - உனது இரண்டு திருவடிகளையும் தியானித்து மேவிய பதத்தில் - பொருந்துதலைக் கொண்ட பதவியில் வாழ்வொடு சிறக்க - நல்ல வாழ்வுடன் நான் விளங்கும்படி அருள்வாயே - அருள் புரிவாயாக
வான் எழு புவிக்கு(ம்) மால் அயனுக்கும்
யாவர் ஒருவர்க்கும் அறியாத


வான் எழு புவிக்கும் - விண்ணுலகம் முதலான எழு வகைப் பட்ட உலகத்தினர்க்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத - வேறு எவர்க்கும் அறிய முடியாத
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க
மா மயில் நடத்தும் முருகோனே


மா மதுரை சொக்கர் - சிறந்த மதுரை நகரில் வாழும் சொக்கேசரும் மாது உமை களிக்க - மாதாகிய பார்வதியும் மகிழ்வுறும்படி மா மயில் நடத்தும் முருகேனே - அழகிய மயிலைச் செலுத்தி நடத்தும் முருகனே
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி
சேர மருவு உற்ற திரள் தோளா


தேன் எழு புனத்தில் - தேன் உண்டாகும் வள்ளி மலைக் காட்டில் மான் விழிக் குறத்தி - மான் போன்ற கண்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியை சேர மருவு உற்ற - உன்னைச் சேரும்படி அவளிடம் அணுகிய திரள் தோளா - திரண்ட தோளை உடையவனே
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல் கொடு தணித்த பெருமாளே
தேவர்கள் கருத்தில் - தேவர்களுடைய மனதில் மேவிய பயத்தை - (சூரனால் ஏற்பட்ட) பயத்தை வேல் கொடு தனித்த பெருமாளே - வேலாயுதத்தால் நீக்கிய பெருமாளேசுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்
1 வான் எழு புவிக்கு
மேலுலகம் ஏழு கீழுலகம் ஏழு
2 ஆதியரனுக்கும் வேத முதல்வற்கும்
ஓதுவித்த நாதர் கற்க வோதுவித்த முனிநாண
ஓரெத்தி லாறெழுத்தை யோது வித்த பெருமாளே --- திருப்புகழ்,. வேதவெற்பி
ஆதி கற்பகவிநாய கற்குபிற
கானபொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய றிந்தகோவே
திருப்புகழ்,வாதபித்தமொடு


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends