297மதுரை
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்தடி மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே

பதம் பிரித்து பொருள்

பரவு - எல்லாராலும் போற்றப்படும் நெடுங் கதிர் உலகில் - நீண்ட கிரணங்களை உடைய சூரியன் விரும்பிய - விரும்பும்படி பவனி வரும் - உலா வரும் காட்சி தானோ (இந்தத் திருவடி) அதனாலே - என்று சிறப்பித்தும்
பகர - சொல்லக்கூடிய வளங்களும் நிகர விளங்கிய - எல்லா வளப்பங்களுக்கெல்லாம் ஒப்பாக விளங்குவதும் இருளை விடிந்தது - இருளைப் போக்கி உதயமாவதுமான நிலவாலே - நிலவொளி தானோ (இந்தத் திருவடி) என்று சிறப்பித்தும்
வரையினில் எங்கணும் - மலை இடங்களில் எவ்விடத்தும் உலவி நிறைந்தது - உலாவி நிறைந்து வரிசை தரும் - ஒழுங்கான காட்சியைத் தருகின்ற பதம் அது பாடி - உன் திருவடிகளை (நான்) பாடி
வளம் மொழி - சொல்வளம் பொருந்திய செந்தமிழ் உரை செய - செந்தமிழ்ப் பாவால் நான் உன்னைப் புகழவும் அன்பர் மகிழ - அடியார்கள் மகிழவும் வரங்களும் அருள்வாயே - வரங்களைத் தந்து அருள்வாயாக
அரஹர - அரஹர சுந்தர - அழகனே அறுமுக - ஆறுமுகனே என்று - என்றெல்லாம் கூறி உன்னி - உன்னைத் தியானித்து அடியர் - அடியவர்கள் பணிந்திட - உன்னை வணங்க மகிழ்வோனே - மகிழ்ச்சி கொள்பவனே
அசல நெடுங்கொடி - இமய மலையில் தோன்றிய பெருமை வாய்ந்த கொடி அமை - கொடி போடி போன்ற உமை தன் - உமா தேவியாருடைய சுத - மகனே குற மகள் - குறப் பெண்ணகிய வள்ளிக்கு இங்கித - இனிமை வாய்ந்த மணவாளா - கணவனே
கருத அறு - நினைப்பதற்கும் அரிதான திண் புய - திண்ணிய புயங்களை உடையவனே சரவண - சரவணபவனே குங்கும களப அணிந்திடு - செஞ்சாந்துக் கலவை அணிந்துள்ள மணி மார்பா - அழகிய மார்பனே
கனகம் மிகும் - பொன் மாடங்கள் நிறைந்துள்ள மதுரை வளம் பதி அதனில் - மதுரையாகிய செழிப்புள்ள தலத்தில் வளர்ந்து அருள் பெருமாளே - வீற்றிருந்து அருளும் பெருமாளேசுருக்க உரைவிளக்கக் குறிப்புகள்
அ பகர வளங்களும் நிகர
உன் திருவடிகள் சூரிய, சந்திரர்களைப் போல் சகல வளங்களையும், அஞ்ஞான இருளையும் போக்கும் என்பது கருத்து

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஆ பதமது பாடி
நின் பதயு கப்ரசித்தி யென்பனவ குத்துரைக்க---திருப்புகழ், கிஞ்சுகமெ
அன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதகம் அன்புறதோ---திருப்புகழ், ஆராதகாத
இந்த வேண்டுகோளுக்கு முருக வேள் இரங்கி சீர் பாத வகுப்பு பாட அருணகிரி நாதருக்கு அருள் புரிந்தார்
தமது பாடல்களை மற்ற அடியார்களும் பாடி கரை ஏற வேண்டும் என்பது அருணகிரி நாதரின் கருணை நோக்கம்
(காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி)---தனிப்பாடல்