நீண்ட கிரணங்களை உடைய நிலவு வலம் வரும் காட்சி தானோ இந்தத் திருவடி என்று சொல்லக் கூடியதும், இருளைப் போக்குவதும், மலை இடங்களில் எல்லாம் உலவி வந்து காட்சி தருவதும் ஆகிய உனது திருவடிகளைச், செந்தழிமால் உன்னைப் புகழ்தற்கும், அதைக் கேட்டு அடியார்கள் மகிழ்தற்கும் அருள் புரிவாயாக
அரஹர, அழகனே, ஆறுமுகனே என்று கூறி, உன்னைத் தியானித்து, அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே இமய மலையில் தோன்றிய பெருமை வாய்ந்த உமா தேவியின் மகனே குறமகளான வள்ளியின் இனிய கணவனே நினைப்பதற்கும் அரிதான திண்ணிய புயங்களை உடையவனே செஞ்சாந்துக் கலவை அணிந்த மார்பனே செழிப்பான வளம் கொண்ட மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே உன் திருவடிகளைப் பாட எனக்கு அருள் புரிவாயாக
விளக்கக் குறிப்புகள்
அ பகர வளங்களும் நிகர
உன் திருவடிகள் சூரிய, சந்திரர்களைப் போல் சகல வளங்களையும், அஞ்ஞான இருளையும் போக்கும் என்பது கருத்து
ஆ பதமது பாடி
நின் பதயு கப்ரசித்தி யென்பனவ குத்துரைக்க---திருப்புகழ், கிஞ்சுகமெ
அன்பினாலே
ஏனோரு மோது மாறு தீதற
நானாசு பாடி யாடி நாடொறு
மீடேறு மாறு ஞான போதகம் அன்புறதோ---திருப்புகழ், ஆராதகாத
இந்த வேண்டுகோளுக்கு முருக வேள் இரங்கி சீர் பாத வகுப்பு பாட அருணகிரி நாதருக்கு அருள் புரிந்தார்
தமது பாடல்களை மற்ற அடியார்களும் பாடி கரை ஏற வேண்டும் என்பது அருணகிரி நாதரின் கருணை நோக்கம்
(காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி)---தனிப்பாடல்
Bookmarks