Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    300.அரி அயன் அறியா
    300வடுகூர்
    மனமகிழ் குமரா எனவுள திருதாள்
    மலரடி தொழுமா றருள்வாயே
    தனதன தனனா தனதன தனனா
    தனதன தனனா தனதான
    அரியய னறியா தவரெரி புரமூ
    ணதுபுக நகையே வியநாதர்
    அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
    றழலையு மழுநேர் பிடிநாதர்
    வரைமக ளொருகூ றுடையவர் மதனா
    கமும்விழ விழியே வியநாதர்
    மனமகிழ் குமரா எனவுள திருதாள்
    மலரடி தொழுமா றருள்வாயே
    அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
    அவனியை வலமாய் வருவோனே
    அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
    அயில்தனை விசையாய் விடுவோனே
    வரிசையொ டொருமா தினைதரு வனமே
    மருவியொர் குறமா தணைவேடா
    மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
    வருதவ முநிவோர் பெருமாளே

    பதம் பிரித்தல்

    அரி அயன் அறியாதவர் எரி புர
    மூணு அது புக நகை ஏவிய நாதர்


    அரி - திருமாலாலும் அயன் - பிரமனாலும் அறியாதவர் - காண முடியாதவர் எரி புரம் மூண் அது புக - நெருப்பு மூன்று புரங்களிலும் புகும்படி நகை ஏவிய - சிரப்பை ஏவிய நாதர் - தலைவர்


    அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி
    சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்


    அவிர் சடை மிசை - விளங்கும் சடையின் மீது ஓர் வனிதையர் - ஒரு மாது கங்கையைக் கொண்டவர் பதி - தலைவர் சீறும் அழலையும் - காய்ந்த வந்த நெருப்பையும் மழு - மழுவாயுதத்தையும் நேர் பிடி நாதர் - நேராகக் கையில் ஏந்தியுள்ள தலைவர்


    வரை மகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும்
    விழ விழி ஏவிய நாதர்


    வரை மகள் - மலைமகள் (பார்வதியை) ஒரு கூறு உடையவர் - ஒரு பாகத்தில் உடையவர் மதன் ஆகமும் - மன்மதனுடைய உடலும் விழ - எரி பட்டு விழ விழி ஏவிய - கண்ணினின்றும் தீயைச் செலுத்திய நாதர் - தலைவர்


    மனம் மகிழ் குமரா என உனது இரு தாள்
    மலரடி தொழுமாறு அருள்வாயே


    மனம் மகிழ் குமரா என - மனம் மகிழும் குமரனே என்று உனது இரு தாள் மலரடி - உன்னுடைய இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை தொழுமாறு அருள்வாயே - வணங்கும்படி அருள் புரிவாயாக


    அருவரை இரு கூறிட ஒரு மயில் மேல்
    அவனியை வலமாய் வருவோனே


    அரு வரை - அருமையான மலை (கிரௌவஞ்சம்) இரு கூறிட - இரண்டு பாகமாகப் பிளக்க ஒரு - ஒப்பற்ற மயில் மேல் - மயில் மேல் ஏறி அவனியை - பூமியை வலமாய் வருவோனே - வலமாக வந்தவனே


    அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல்
    அயில் தனை விசையாய் விடுவோனே


    அமரர்கள் - தேவர்கள் இகல் நீடு அசுரர்கள் - நீண்ட கால பகைமை கொண்ட அசுரர்களின் சிரம் மேல் - தலைகளின் மீது அயில் தனை - வேலாயுதத்தை விசையாய் விடுவோனே - வேகத்தோடு செலுத்தியவனே


    வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே
    மருவி ஒர் குற மாது அணை வேடா


    வரிசையொடு - நல்ல முறையில் ஒரு - ஒப்பற்ற மா தினை தரு வனமே - சிறந்த தினை வளரும் காட்டுக்கு மருவி - சென்று ஓர் - ஒப்பற்ற குற மாது - குறப் பெண்ணாகிய வள்ளியை அணை வேடா - அணைக்கும் வேடனே


    மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர்
    வரு தவ முநிவோர் பெருமாளே


    மலைகளில் மகிழ்வாய் - மலையிடங்களில் விருப்பம் கொண்டவனே மருவி - மனம் பொருந்தி நல் - நல்ல வடுகூர் வரு - வடுகூர் இன்னும் தலத்தில் வருகின்ற தவ முநிவர் பெருமாளே - தவ முனிவர்களின் பெருமாளே



    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்
    1 சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்
    புரத்தைவிழக் கொளுத்தி மழுத்
    தரித்து புலிக் கரித்துகிலைப் பரமாகத் ---- திருப்புகழ், குலைத்துமயிர்


    2 வரைமகள் ஒரு கூறு
    வெற்ப ளித்fத தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
    வித்த கத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா --- திருப்புகழ், பொற்பதத்தி


    3 மதனாகமும்விழ விழியேவிய நாதர்
    மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
    மாபோ தகத்தையருள் குருநாதா ---- திருப்புகழ், கூர்வேல்பழித்த


    4 அவனியை வலமாய் வருவோனே
    திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா
    — திருப்புகழ், தொடத்துளக்கிகள்

    To be continued
Working...
X