Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    302. என்னால்பிறக்கவும்
    வயலூர்
    தன்னா தனத்தன தன்னா தனத்தன
    தன்னா தனத்தன தந்ததான
    என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
    என்னால் துதிக்கவும் கண்களாலே
    என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
    என்னா லிருக்கவும் பெண்டிர்வீடு
    என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
    என்னால் சலிக்கவும் தொந்தநோயை
    என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
    என்னால் தரிக்கவும் இங்குநானார்
    கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
    கர்ணா மிர்தப்பதம் தந்தகோவே
    கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
    கண்ணா டியிற்றடம் கண்டவேலா
    மன்னா னதக்கனை முன்னாள் முடித்தலை
    வன்வா ளியிற்கொளும் தங்கரூபன்
    மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
    மன்னா முவர்க்கொரு தம்பிரானே



    பதம் பிரித்து உரை

    என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
    என்னால் துதிக்கவும் கண்களாலே


    என்னால் பிறக்கவும் - என் திறத்தால் நான் பிறப்பதற்கும்,என்னால் இறக்கவும்- என் திறத்தால் நான் இறப்பதற்கும்என்னால் துதிக்கவும் - என்னால் உன்னைத் துதிக்கவும்கண்களாலே - எனது கண்களைக் கொண்டு


    என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்
    என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு


    என்னால் அழைக்கவும் - ஒருவரைப் பார்த்து நான் அழைப்பதற்கும் என்னால் நடக்கவும் - என்னால் நடப்பதற்கும் என்னால் இருக்கவும் - என்னால் சும்மா ஓரிடத்தில் இருக்கவும் பெண்டிர் வீடு - விலை மாதர்கள் இருக்கும் வீடுகள் (இவற்றை)




    என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
    என்னால் சலிக்கவும் தொந்த நோயை


    என்னால் சுகிக்கவும் - என்னால் அனுபவித்துச் சுகிப்பதற்கும்என்னால் முசிக்கவும் - (கிலேசித்து) மெலிந்து போதற்கும்என்னால் சலிக்கவும் - என்னால் அலுப்பு உறுவதற்கும் தொந்த நேயை - புணர்ச்சியால் வருகின்ற நோய்களை


    என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்
    என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்


    என்னால் எரிக்கவும் - என்னாலே எரித்துத் தள்ளுவதற்கும்என்னால் நினைக்கவும் - என்னால் நினைப்பதற்கும் என்னால் தரிக்கவும் - (இன்ப துன்பங்களைத்) தாங்குவதற்கும் இங்கு நான் ஆர் - எனக்கு என்ன சுதந்திரம் இருக்கின்றது? (எல்லாம் தேவரின் செயலே)


    கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல்
    கர்ண அமிர்த பதம் தந்த கோவே




    கல் நார் உரித்த - கல்லினின்று நார் உரிப்பது போல என் மன்னா - என்னுடைய அரசே எனக்கு நல் கர்ண அமிர்த -செவிக்கு அமிர்தம் போன்ற பதம் - உபதேச மொழியைதந்த கோவே - உபதேசித்தத் தலைவனே


    கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
    கண்ணாடியில் தடம் கண்ட வேலா


    கல்லார் - உன்னைக் கற்றறியாதவர்களின் மனத்துடன் -நெஞ்சங்களில் நில்லா மனத்தவ - தங்காத மனத்தை உடையவரே கண்ணாடியில் - கண்ணாடிபோல மிகத் தெளிவு உள்ள தடம் - நீர் நிலையை கண்ட வேலா - வேல் கொண்டு கண்டவனே


    மன்னான தக்கனை முன்னாள் முடி தலை
    வல் வாளியில் கொளும் தங்க ரூபன்


    மன் ஆன தக்கனை - அரசனாக விளங்கிய தக்கனைமுன்னாள் - முன்பு முடித் தலை - முடியையும் தலையையும்வல் வாளியில் - கொடுமை வாய்ந்த அம்பினால் கொ(ள்)ளும் - கொய்த தங்க ரூபன் - தங்க சொரூபனான சிவபெருமானுக்கு


    மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி
    மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே


    மன்னா - அரசே குறத்தியின் மன்னா - குறத்தியாகிய வள்ளியின் தலைவனே வயற்பதி மன்னா - வயலூர் அரசனேமூவர்க்கு ஒரு தம்பிரானே - அரி, அரன், பிரமன் ஆகிய மூவர்க்கும் அரசே



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்
    என்னால் பிறக்கவும்
    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரேகாண்பாரார்
    கண்ணுதலாய் காட்டாக் காலே ----திருநாவுக்கரசர் தேவாரம்
    நானா ரொடுங்க நானார் வணங்க
    நானார் மகிழ்ந்து உனையோத
    நானர் ரிரங்க நானா ருணங்க
    நானார் நடந்து விழநானார ---திருப்புகழ், ஊனேறெலும்பு

    கன்னா ருரித்த என்
    கன்னா ருரித்தென்ன
    என்னையுந்தன் கருணையினாற்
    பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
    ---திருவாசகம்-திருத்தள்ளேணம்


    கர்ண அமிர்த பதம் தந்த கோவே –
    தேனென்று பாகென் றுவமிக் கொணாமொழித் தெய்வள்ளிக்
    கோனன் றெனக்குப் தேசித்தது ஒன்றுண்டு --- கந்தர் அல்ங்காரம்


    கல்லார் மனத்துடன்
    கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன் ---சம்பந்தர் தேவாரம்
    தடம் கண்ட வேலா
    திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில் முருகன் வேல் கொண்டு தீர்த்தம் கண்டது
    தங்க ரூபன் - சிவன்
    பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ஈசனுக்கே
    ---பொன்வண்ணத்தந்தாதி
Working...
X