Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 09 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 09 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 09 / 51











    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! பிரம்மாவும் , நீயே ! சிவனும் , நீயே !




    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��


    सर्ग , स्थिति , प्रलय , विभ्रम , नाटिकायाम् ;

    शैलूषवत् - विविध , वेष , परिग्रहम् ; त्वाम् ।

    संभावयन्ति , हृदयेन ; करीश ! धन्या: ;

    संसार , वारि - निधि , संतरण - एक , पोतम् ॥



    ��



    ஸர்க்க , ஸ்திதி , ப்ரளய , விப்ரம , நாடிகாயாம் ;

    ஶைலூஷவத் - விவித , வேஷ , பரிக்ரஹம் ; த்வாம் |

    ஸம்பாவயந்தி , ஹ்ருதயேந ; கரீஶ ! தன்யா: ;

    ஸம்ஸார , வாரி - நிதி , ஸந்தரண - ஏக , போதம் ||


    ��



    करीश ......... அத்தி கிரிப் பெருமானே !

    सर्ग ............ படைத்தல் ,

    स्थिति ......... காத்தல் ,

    प्रलय .......... அழித்தல் ஆகிய ,

    विभ्रम .......... விளையாட்டு ,

    नाटिकायाम् ... நாடகத்தில் ,

    शैलूषवत् ...... நடிகன் போல் ;

    विविध ......... பல்வகை ,

    वेष ............. வேடங்களை,

    परिग्रहम् ....... தரிப்பவனான ;

    त्वाम् ........... உன்னை ;

    संसार .......... ஸம்ஸாரம் ஆகிற ,

    वारि निधि ..... கடலைக்

    संतरण ........ கடப்பதற்கு ;

    एक ............ ஒப்பற்ற (ஒரே)

    पोतम् .......... படகாக ,

    धन्या: .......... பாக்ய சாலிகள் ,

    हृदयेन .......... தம் உள்ளத்தால் ,

    संभावयन्ति .... இடைவிடாது , தியானிக்கின்றனர் .



    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��


    * அத்தி கிரிப் பெருமானே !

    * உலகத்தை , பிரமன் படைப்பதாகவும் ; நீ , காப்பதாகவும் ; சிவன் , அழிப்பதாகவும் ; நூல்கள் , கூறும். உண்மையில் , பிரமனுக்கும் , சிவனுக்கும் , நீயே , அந்தர்யாமியாக இருந்து ; அச்செயல்களைச் , செய்கிறாய்.

    * இந்த முச் செயல்களும் , விளையாட்டாக , நீ , நடத்தும் , ஒரு நாடகமே , ஆகும் . அந்த நாடகத்தில் , நீயே , நடிகன் . பிரமன், சிவன் , என்ற பல் வகை வேடங்களை , நீயே , அணிந்து , நடிக்கிறாய்.

    * மேலும் , ஸம்ஸாரம் எனும் கடலைக் கடப்பதற்கு , நீ , ஒப்பற்ற படகு போல் நின்று ; ஸம்ஸார பந்தத்தை , ஒழித்து ; முக்தி , அளிக்கிறாய்.

    * இத்தகைய , சிறப்புற்ற உன்னைப் , புண்யசாலிகளான மஹான்கள் , தமது உள்ளத்தால் , இடைவிடாது , சிந்திக்கின்றனர்.




    ��


    Last edited by sridharv1946; 19-07-18, 14:38.
Working...
X