Announcement

Collapse
No announcement yet.

Poondi Saamiyaar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Poondi Saamiyaar

    சித்தர்கள்: J.K. SIVAN
    பூண்டி சாமியார் 7
    பரணீதரன் பூண்டி சாமியாரை விடுவதாக இல்லை. மேலே குட்டி குட்டியாக கேள்விகள் கேட்டு விஷயம் சேகரித்தார்.
    ''சுவாமி, நீங்கள் ஏன் மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து கடலாடி கிராமம் வந்தீர்கள்?''
    ''நான் தான் சொன்னேனே, காலாற அப்படியே சிங்காரவாடி போகணும்னு தான் நடந்து வந்தேன்.''
    ''ஓ சுவாமி சிங்காரவாடி எங்கே இருக்கிறது?''
    ''கடலாடி கிட்டே தான். நான் எங்கே போனாலும் எதையும் குறிப்பா தேடித் போறதில்லே.எங்கே போனாலும் ஏமாற்றத்தோடு வருத்ததோடு அது கிடைக்கலேன்னு திரும்பறதும் இல்லை. அன்னிக்கு ஏனோ தெரியலே ஏ போகலாம் னு தோணிச்சு, நமக்கு ஊரென்ன பேரென்ன? போலீஸ் ஸ்டேஷன் வந்தது. எனக்கும் களைப்பா இருந்ததா, அப்படியே காலை நீட்டி படுத்தேன். ஒரு சாயபு வந்தார் ''சாமி எதுக்கு இங்கே வந்தீங்க?'' என்றார்.
    ''எந்த சாயபு?''
    ''உனக்கு காதர் பாட்சா தெரியாதா? நல்ல மனுஷன். நல்லா பேசுவார். ரொம்ப கெட்டிக்காரர். புத்திசாலி. நான் பேசாம இருந்தேன். அவர் கேட்டதுக்கு பதிலே சொல்லலே''
    ''சாமி இதை கேளுங்கோ. இங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்குது. யாரும் அதை கவனிக்கல. அபிஷேகம் பூஜை ஒண்ணுமே கிடையாது. நீங்க யாராவது ஒருத்தரை அந்த பிள்ளையார் கோவிலை சரியா பராமரிக்க சொல்ல கூடாதா?'' அப்டின்னாரே பார்க்கணும் அந்த முஸ்லீம்''
    ''பேச்சு கொடுத்து பார்க்கிறாரா. பார்க்கட்டும். நான் பதிலே சொல்லலே. அவர் கிட்டே பேச்சு கொடுத்து மாளாது. பேசாம தூங்கிட்டேன்.
    மறுநாள் கார்த்தாலே, எழுந்து நடந்தேன். வயல் பக்கம் மம்புட்டி அறுவாள், கடப்பாரை எல்லாம் எடுத்துக்கிட்டு அஞ்சு ஆறு குடியானவங்க போய்க்கிட்டு இருந்தாங்க. கம்பு விதைச்சிருந்தது எங்கே பார்த்தாலும். கவர்மெண்ட் பஸ் தெருவிலே வந்தா மரத்தடிலே நிக்கும். புளிய மரத்தடியே பத்து பன்னிரண்டு பேர் மூட்டை முடிச்சோட நிக்கிறாங்க. அப்போ நிறைய பேர் திருப்பதி போற சமயம். அவங்களும் திருப்பதி தான் போறாங்க போல. அங்கே காதர் பாட்சா வந்துட்டாரு. ஒரு மாம்பழம் வச்சிருக்காரு கையிலே. பாக்கெட்லேருந்து பேனா கத்தி எடுத்தார். கூரா இருந்தது கத்தி மள மள ன்னு தோலை சீவி இந்தாங்க சாமி சாப்பிடுங்க ன்னு என்கிட்டே நீட்டினார். அவர் கிட்டே பேசி ஜெயிக்க முடியாது. பேசாம பழத்தை வாங்கினேன். சாப்பிட்டேன்"


    பூண்டி சாமியார் கடகட வென்று நிறுத்தாமல் பேசிக்கொண்டே போகிறாரே. அவர் சொன்னதை எல்லாம் நான் நேரில் இருந்து பார்த்தது போல் அவருக்கு பிரமையா. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே அவர் பேச்சில் கலந்து சில இடங்களில் புரிபடாது. அவர் நேரம் காலம் கடந்தவர். அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.


    அவர் எண்ணப்போக்கை தடை செய்யாமல் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.


    ''எனக்கு ஊருமில்லை பேருமில்லை என்கிறீர்களே சாமி. அப்படி யாராவது பிறக்க முடியுமா சுவாமி ''


    கோணலாக பார்த்த சாமியார் ''ஏன் முடியாதா?'' என்று பரணீதரனையே கேள்வி கேட்டார் சாமியார்


    பூண்டியில் திண்ணையில் சாமியாருக்கு வழக்கமான பூஜை முடிந்தது. திண்ணையில் படுத்தார். அவர் தலைமாட்டில் நின்று கொண்டிருந்தார் பரணீதரன். சாமியாரை கவனித்துக்கொள்ள ஊரார் ஒரு குழு நியமித்திருந்தார்கள். குழுத்தலைவர் பரணீதரனை உபசரித்தார். சாமியாரை கேள்விகள் கேளுங்கள் எங்களுக்காக என்கிறார்.


    ''சுவாமி, பர்வத மலை பற்றி சொல்லுங்
    களேன்.''


    "தெருக்கள் நிறைய இருந்தது. அங்கங்கே ஏதோ ஒன்றிரண்டு சாப்பாடு ஹோட்டல். கடைகள். நான் படியேறி மேலே போனேன். கதவை தட்டினேன். உள்ளே ஒரு டஜன் ஆசாமிங்க இருந்தாங்க. சரி இப்போ நேரம் சரியில்லேன்னு திரும்பி கீழே வந்துட்டேன்.''


    சாமியார் சொன்னது ஏதாவது புரிகிறதா? இல்லை ஏதோ முக்கியமான விஷயம் அதில் இருக்கிறது
Working...
X