Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 11 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 11 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 11 / 51











    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! நீ பிரமனுக்கும், சிவனுக்கும் , மேம்பட்டவன் !



    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��




    मध्ये , विरिंचि , शिवयो: , विहित - अवतार: ,

    ख्यातो - (अ)सि ! तत् , समतया , तत् - इदम् , न , चित्रम् ।

    माया , वशेन , मकर - आदि , शरीरिणम् , त्वाम् ;

    तान् - एव , पश्यति ! करीश ! यत् - एष , लोक: ।।




    ��




    மத்யே , விரிஞ்சி , சிவயோ: , விஹித - அவதார: ,

    க்யாதோ - (அ)ஸி ! தத் , ஸமதயா , தத் , இதம் , ந , சித்ரம் |

    மாயா , வஶேந , மகர - ஆதி , ஶரீரிணம் , த்வாம் ;

    தாந் - ஏவ , பஶ்யதி ! கரீஶ , யத் - ஏஷ , லோக: ||


    ��






    करीश ....... அத்தி கிரிப் பெருமானே !

    विरिंचि ....... பிரமனுக்கும் ,

    शिवयो: ...... சிவனுக்கும் ,

    मध्ये .......... நடுவில் ,

    अवतार: ..... அவதாரம் ,

    विहित ........ செய்த நீ ;

    तत् ........... அவர்களை ,

    समतया ...... ஒத்தவனாகவே ,

    ख्यात: असि . வழங்கப் படுகிறாய் !

    तत् इदम् ..... அத்தகைய இது ,

    न चित्रम् ..... ஆச்சரியம் அன்று !

    यत् ........... எதனால் என்றால் ,

    माया वशेन .. ஸங்கல்பத்தால் ;

    मकर आदि .. மீன் முதலிய ,

    शरीरिणम् ... வடிவு , கொண்ட ;

    त्वाम् ......... உன்னை ,

    एष: लोक: .. இந்த உலகம்,

    तान् एव ..... அந்த மீன் முதலியன ஆகவே ,

    पश्यति ...... பார்க்கின்றதே !



    ��




    ஶ்ரீ உப.வே. ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��




    * அத்தி கிரிப் பெருமானே !

    * நீ , பிரமனுக்கு , அந்தர்யாமியாய் , இருந்து , படைத்தலையும் ; சிவனுக்கு அந்தர்யாமியாய் நின்று , அழித்தலையும் ; செய்கிறாய் . அந்த இரண்டு மூர்த்திகளுக்கும் , நடுவில் , விஷ்ணுவாய் , நின்று , உலகைக் காக்கிறாய்.

    * இவ்வுண்மையைப் பாமர மக்கள் அறியமாட்டார்கள். பிரமன் , விஷ்ணு , சிவன் என்ற வரிசையில் , பிரமனுக்கும் , சிவனுக்கும் நடுவில் , உன் பெயர் , இருப்பதை மாத்திரம் கொண்டு , அவர்களுக்குச் , சமமானவன் ஆகவே , உன்னைக் கருதி , மும்மூர்த்திகள் என வழங்குகின்றனர். இதில் வியப்பு , ஒன்றும் இல்லை .

    * நீ , உன் , அற்புத ஸங்கல்பத்தால் , மீன் , ஆமை , பன்றி முதலிய வடிவங்களைக் கொண்டு , அந்தந்ந அவதாரங்களைச் செய்கிறாய். இவ்வுண்மையை , அறியாத மக்கள் , உன்னை , மீன் , ஆமை , பன்றி என்று தானே , காண்கின்றனர்.

    * ஆதலின் , பிரமனோடும் , சிவனோடும் , உன்னை , ஒத்தவனாகக் காண்பதில் , ஆச்சரியம் என்ன ? என்னே மக்களின் அறியாமை !







    ��


    Last edited by sridharv1946; 22-07-18, 10:27.
Working...
X