Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 15 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 15 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&a

    ��


    श्री वरदराज पंचाशत् 15 / 51





    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! எல்லாச், சொற்களும் , உன்னையே , குறிப்பிடுகின்றன !



    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��


    सामान्य , बुद्धि , जनका: च ; सत् - आदि , शब्दा: ;

    तत्त्वान्तर , भ्रम , कृत: च ; शिव - आदि , वाच: ।

    नारायणे , त्वयि , करीश ! वहन्ति ! अनन्यम् ;

    अन्वर्थ , वृत्ति , परिकल्पितम् ; ऐक कण्ट्यम् ॥


    ��


    ஸாமாந்ய , புத்தி , ஜநகா: ச , ஸத் - ஆதி , ஶப்தா: ;

    தத்த்வாந்தர , ப்ரம , க்ருத: ச , ஶிவ - ஆதி , வாச: |

    நாராயணே , த்வயி , கரீஶ ! வஹந்தி ! அநந்யம் ;

    அந்வர்த்த , வ்ருத்தி , பரிகல்பிதம் ; ஐக கண்ட்யம் ||



    ��



    करीश ............ அத்தி கிரிப் பெருமானே !

    सामान्य .......... பொதுத் தன்மையின் ,

    बुद्धि .............. அறிவை ,

    जनका: ........... உண்டாக்கும் ;

    सत् आदि ........ "ஸத்" முதலிய ,

    शब्दा: च ......... சொற்களும் ;

    तत्त्वान्तर .......... (உன்னைத் தவிர ) வேறு பரதேவதை என்கிற ,

    भ्रम कृत: .......... தவறான எண்ணத்தை , உருவாக்கும் ,

    शिव आदि ........ "ஶிவ" முதலிய ,

    वाच: च ........... சொற்களும் ;

    नारायणे ........... நாராயணன் ஆகிய ,

    त्वयि ............... உன்னிடம் ,

    अन्वर्थ ............. பொருத்தம் உள்ள பொருளை ,

    वृत्ति ................ உணர்த்தும் ஆற்றலால் ;

    परिकल्पितम् ...... நன்கு ஏற்பட்ட ;

    अनन्यम् ............ வேறு யாரையும் , சாராத ;

    ऐक कण्ट्यम् ...... ஒரே குரலாகக் கூறும் தன்மையை ;

    वहन्ति .............. பெற்று , நிற்கின்றன !

    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��



    * அத்தி கிரிப் பெருமானே !

    * உபநிஷத்துகள் , ப்ரபஞ்சத்துக்குக் காரணமான , வஸ்துவை , 'ஸத்' , 'ப்ரஹ்ம' , 'ஆத்மா' முதலிய சொற்களால் , கூறுகின்றன. இவை , பொதுப் பெயர்கள் ஆனதால் , உன்னை , மட்டும் இன்றி , மற்ற வஸ்துக்களையும் ; காரணமாகக் , கூறுவன என்று , கருத இடம் உள்ளது .

    * இங்ஙனமே , சிவன் , இந்திரன் முதலிய சிறப்புப்பெயர்ச் சொற்களும் , உள்ளன. இவை , உன்னை அன்றி , வேறு ஒருவனும் , பரதேவதையாய் இருக்கக்கூடும் என்ற , எண்ணத்தை , உண்டாக்க , வல்லன.

    * வெளிப்படையாக , விளக்கவல்ல , உபநிஷத்துகளின் , வாக்யங்களைக் கொண்டு , இச் சொற்களை எல்லாம் , ஆராயும்போது , இவை அனைத்தும் , நாராயணன் ஆகிய உன்னையே , கூறுவன என்பது , நன்கு , விளங்கும் .

    * உதாரணமாக , "உள்ளது" என்ற பொருளைக் , கூறும் , "ஸத்" எனும் சொல், பிறரால் அன்றி , தானே , உண்டானவன் , ஆன , உன்னையே , தான் , கூற வல்லது . "ப்ரஹ்ம" எனும் சொல் , ஸ்வரூபத்தாலும் , குணங்களாலும் , ஸகல வஸ்துக்களிலிருந்தும் மேம்பட்ட , உன்னையே , கூறும்.

    * "ஆத்மா" எனும் சொல் , தன்னைத் தவிர , எல்லாவற்றையும் , சரீரமாக உடைய , உன்னையே காட்டும்.

    * இவ்வாறே , "சிவன்" என்ற , சிறப்புச் , சொல்லும் , மங்கலப் பொருள்களுக்கு எல்லாம் , மங்கலத் தன்மையை , அளிக்கவல்ல ,பரம மங்கள ஸ்வருபனான , உன்னையே , குறிக்கும்.

    * "இந்திரன்" என்ற , சிறப்புச் சொல்லும் , மிகப் பெரிய ஐச்வர்யத்தை , உடையவனான ,

    உன்னையே , சொல்லும்.

    * இம்முறையிலேயே , எல்லாச் சொற்களும் , பொருள் பொருத்தத்தால் , எல்லாம் , நாராயணனே என்று அறுதியிடும் , நாராயண அனுவாகத்தின்படி , நாராயணனான , உன்னையே , கூறி , ஒரே , கருத்து கொண்டனவாய் , முடிகின்றன.

    * இப்படி , எல்லாச் சொற்களும் , ஒரே குரலாய்க் , கூறுவனவாக , உபநிஷத்துகள் , முரண்பாடின்றி , உன்னையே , வெளியிடுகின்றன.


    ��







Working...
X