Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 18 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 18 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 18 / 51

    ��
    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்

    ��

    வரதா ! உன்னுடைய தேஜஸ் , சூரியனை விடப் பல மடங்கு , உயர்ந்தது !


    ��










    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��





    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    मोह - अन्धकार , विनिवर्तन , जागरूके ;

    दोषा , दिवा - (अ)पि , निरवग्रहम् - एधमाने ; |

    त्वत् , तेजसि ; द्विरद - शैल - पते ! विमृष्टे ;

    श्लाघ्येत ! सं - तमस , पर्व ; सहस्र - भानो: ॥



    மோஹ - அந்தகார , விநிவர்த்தந , ஜாகரூகே ;

    தோஷா , திவா - (அ)பி , நிரவக்ரஹம் - ஏதமாநே ; |

    த்வத் , தேஜஸி ; த்விரத - ஶைல - பதே ! விம்ருஷ்டே ;

    ஶ்லாக்யேத ! ஸந் - தமஸ , பர்வ ; ஸஹஸ்ர - பாநோ: ||




    द्विरद शैल पते .. அத்தி கிரிப் பெருமானே !

    मोह .............. அஜ்ஞாநம் எனும் ,

    अन्धकार ........ இருளை ;

    विनिवर्तन ........ ஒழிப்பதில் ,

    जागरूके ......... கருத்து கொண்டு ;

    दोषा .............. இரவிலும் ,

    दिवा अपि ........ பகலிலும் கூட ;

    निरवग्रहम् ........ தடையின்றி ,

    एधमाने ........... விருத்தி ,அடைகின்ற ;

    त्वत् ............... உன்னுடைய ,

    तेजसि ............ தேஜஸ் ;

    विमृष्टे ............ ஆராய்ந்து பார்க்கும் போது ;

    सहस्र भानो:...... ஆயிரம் கிரணங்களை , உடைய , சூரியனுக்கு ;

    सं तमस .......... அடர்ந்த இருளின் ,

    पर्व ................ நிலை ;

    शलाघ्येत ......... கொண்டாடப்படும் !



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * அத்தி கிரிப் பெருமானே !

    * உலகில் , பிரகாசிக்கும் சூரியன் ; உனது , அருளால் ; ஒளியைப் பெற்று ; ஆயிரம் கிரணங்களை உடையவனாய் , விளங்குகிறான் . அவனால்,
    . புற இருளைத் தான் , ஒழிக்க முடியும்.
    . பகலில் மட்டும், அவனது ஒளி , உலகில் , வீசும்.
    . மேகம் முதலியவற்றால் , அவனது , ஒளி , தடை படுவதும் உண்டு .

    * உன் திருமேனியின் ஒளியோ ;
    . அஜ்ஞாநம் எனும் , அக இருளையும் , போக்குவதில் , கவனம் , உடையது .
    . பகல் என்றும் , இரவு என்றும் பாராது , எப்பொழுதும் உன் தேஜஸ் , எங்கும் , பரவுகிறது .
    . இது , எதுவும் , தடை செய்ய முடியாதவாறு , மேன்மேலும் , வளர்ந்து கொண்டே , இருக்கிறது.

    * உன் தேஜஸ்ஸையும் , சூரியனது , பிரகாசத்தையும் , சீர்தூக்கிப் பார்த்தால் ; சூரியனை , அடர்ந்த ஓர் , இருள் பிழம்பு என்றே கூறலாம். உனது , ஒளி பரப்பில் , சூரியன் , உருவமே , அடியோடு , புலப்படாமல் , மறைந்து விடுகிறது.

    * உலகில் , சூரியன் ஒளி , வீசும்போது ; இருள் , புலப்படாது , போய் விடும் அன்றோ ? அவ்வாறே , உன் ஒளிபரப்பில் ; சூரியனுக்கு , இருளின் கதி தான். அவனை , இருள் என்றே , கூறிவிடலாம்.

    * ஆனால் , உண்மையில் , சூரியனுக்கு , இந்த இருளின் நிலையே , கொண்டாடத் தக்கதாகும் . ஏனெனில் , உன் ஒளிக்கு எதிரே , தன்னை , 'முயல் கொம்பு' போல் இல்லாத ஒன்றாகக் கொள்ளாது ,இருள் என்ற உள்ள பொருளாகவாவது ,ஏற்றுக் கொள்ளத்தக்கது, தனக்குத் ,தகுதி வந்ததற்கே , சூரியன் , மகிழ்ச்சி ,கொள்ள வேண்டும்!


    [ இங்கு 'ஸஹஸ்ர பாநோ:' என்பதை , ஐந்தாம், வேற்றுமையாகக் கொண்டு , ஆயிரம் கிரணங்களுடன் , ஒளி வடிவமுள்ள , சூரியனிலிருந்து , பேரருளாளனுடைய , தேஜஸ் கொண்டு , ஒப்பிட்டுப் பார்த்துத் , தள்ளப்பட்டு , அவமதிப்பைப் பெறுவதைக்,காட்டிலும் ; சமமாய் , வைப்பதற்கே , தகுதியற்ற , இருளாய் இருந்து , அவமானம் அடையாது இருப்து , விரும்பதற்கு , உரியது என்றும் , பெரியோர்கள் , உரையிட்டுள்ளனர்]





    Last edited by sridharv1946; 28-07-18, 10:16.
Working...
X