Announcement

Collapse
No announcement yet.

Svetasvaropanishad part3 in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Svetasvaropanishad part3 in tamil

    Svetasvaropanishad part3 in tamil
    courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    ச்வேதாச்வதர உபநிஷத் - அத்தியாயம் 1. ஸ்லோகம் 3


    3. தே த்யானயோகானுகதா அபச்யன்
    தேவாத்மசக்திம் ஸ்வகுணை:நிகூடாம்
    ய: காரணானி நிகிலானி தானி
    காலாத்மயுக்தானி அதிதிஷ்டதி ஏக:


    தே- அந்த ப்ரம்மவாதிகள்
    த்யானயோகானுகதா:- ஒருமுகமான தினத்தின் மூலம்
    தேவாத்மசக்திம் –பிரம்மத்தின் ஸ்வரூப சக்தியே காரணம்
    அபச்யன்- என்றறிந்தார்கள்.
    ஸ்வகுணை:நிகூடாம்- ஆனால் அது அதன் குணங்களால் மறைக்கப்பட்டுள்ளது. ( இதன் விளக்கம் பின்னால் வரும்)
    ய: - எந்த பிரம்மம்
    ஏக: -ஒன்றே
    காலாத்மயுக்தானி – காலம் முதலிய
    காரணானி- காரணங்கள் எவையோ ( எவையெல்லாம் ஜகத்காரணமாக நினைக்கின்றோமோ)
    நிகிலானி தானி- அவை எல்லாவற்றையும்
    அதிதிஷ்டதி-கடந்து நிற்கிறது.


    தேவாத்ம சக்தி என்பது என்ன? 'தத் ஐக்ஷத பஹுச்யாம் பிரஜாயேய,' என்ற சாந்தோக்ய வாக்கியத்தின் படி, பரம்பொருள் ஸ்ருஷ்டியை சங்கல்பித்தது. அந்த சங்கல்பம் உலகமாக உருவெடுத்தது. அதனால் பிரம்மமே காரணம் என்று அறிகிறோம். காலம் முதலிய காரணங்களை ஏற்கெனவே ஆராய்ந்து அவைகளுக்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று பார்த்தோம்.இதுதான் 'ய: காரணானி நிகிலானி தானி
    காலாத்மயுக்தானி அதிதிஷ்டதி ஏக:' என்பதன் பொருள்.


    ஸ்வகுணை: நிகூடாம் என்பதன் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
    இந்த உலகம் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களால் ஆனது. சாங்க்ய சாஸ்த்ரத்தில் கூறப்பட்ட ஸ்ருஷ்டிக்ரமத்தை எல்லா வேதாந்த சாஸ்திரங்களும் ஒப்புக்கொள்கின்றன .


    அது என்னவென்றால் மூலப்ரக்ருதியானது சிருஷ்டியின் ஆரம்ப நிலை. அது சத்வ, ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் கொண்டது. அதாவது raw material consisting of three components . ஆரம்ப நிலையில் இந்த மூன்று குணங்களும் சமமாகவே உள்ளன. அப்போது சிருஷ்டி ஏற்படுவதில்லை . மண் மண்ணாகவே இருந்தால் பானை வராது. மண்ணைப் பிசைவது போல இந்த மூன்று குணங்களும் ஒன்றோடு ஒன்று கலக்க ஆரம்பிக்கின்றன.அப்போதுதான் சிருஷ்டி தொடங்குகிறது.


    நாம் காண்பது இந்த மூன்று குணங்களால் ஆன உலகம். ஆனால் இதற்கு பின்னால் உள்ள காரணபூதமாகிய பரம்பொருள் நமக்கு தென்படுவதில்லை..
    இந்த மூன்று குணங்கள் என்பது எங்கிருந்து வந்தது? கீதையில் பகவான் சொல்கிறார் –
    'த்ரீபி: குணமயை: பாவை: சர்வம் இதம் ததம்,'(ப.கீ. 7.14)
    இந்த உலகம் மூன்று குணங்களால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.
    மேலும் சொல்கிறார் ,
    தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
    மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே (ப.கீ.-7.15)
    "இந்த மூன்று குணங்களாகிய என்னுடைய மாயை கடக்க இயலாதது . என்னை யார் சரணம் அடைகிறார்களோ அவர்கள் இதைக் கடக்கிறார்கள் ."
    இதுதான் தேவாத்மசக்தி: ஸ்வகுணை: நிகூடாம் என்பதன் பொருள்.


    இதை திருமூலர் எளிதாகச் சொல்லிவிட்டார்,
    பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
    பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் என்று.
    பார் முதல் பூதம் எனபது பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகு. பஞ்ச பூதங்கள் மூன்று குணங்களின் வெளிப்பாடு.
Working...
X