Announcement

Collapse
No announcement yet.

Svetasvaropanishad - part4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Svetasvaropanishad - part4

    courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ச்வேத்ச்வதர உபநிஷத்- அத்யாயம் 1- ஸ்லோகம் 4.
    4. தம் ஏக நேமிம் த்ரிவ்ருதம் ஷோடசாந்தம்
    சதார்தாரம் விம்சதிபிரத்யராபி:
    அஷ்டகை: ஷட்பி: விச்வரூபைகபாசம்
    த்ரிமார்கபேதம் த்விநிமித்தைகமோஹம்
    ஏகநேமிம்- ஒரு விளிம்புள்ள சக்கரத்தைப் போல
    த்ரிவ்ருதம்- மூன்று தளங்களைக்கொண்டதாய் ஷோடசாந்தம் – பதினாறு மூலைகளுடன்
    சதர்தாரம்- (சத அர்த ஆரம்) நூற்றில் பாதி அதாவது ஐம்பது ஆரங்களை உடையதாய்
    விம்சதி ப்ரத்யராபி: - இருபது குறுக்கு ஆரங்களுடன்
    அஷ்டகை: ஷட்பி:- எட்டு பிரிவுகளைக்கொண்ட ஆறு ததத்துவங்களை பிணைக்கும்
    விச்வரூபைக பாசம் –விஸ்வரூபம் என்ற கயிறாக
    த்ரிமார்க்க பேதம் – மூன்று பாதைகளை உடைய
    த்விநிமித்தைக மோஹம் – த்வந்த்வங்களை தோற்றுவிக்கும் மாயையுடன் கூடியதாக
    தம்- யோகிகள் அந்த பிரம்மத்தை உணர்ந்தார்கள்.


    இங்கு பிரம்மத்தின் விஸ்வரூபம் அதாவது பிரபஞ்சரூபம் வர்ணிக்கப்படுகிறது. பிரபஞ்சத்தை ஒரு சுழலும் சக்கரமாக உருவகப்படுத்துவது வேதாந்த க்ரந்தங்களில் சாதாரணம். நேமி என்றால் சக்கரம். மூன்று தளங்கள் என்பது சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள். எல்லாப் பொருள்களும் மூன்று குணங்களின் சேர்க்கையால் உண்டானவை.
    ஷோடசாந்தம் , பதினாறு மூலை என்பது, பஞ்ச பூதங்கள் , பஞ்ச ஞானேந்த்ரியங்கள், பஞ்ச கர்மேந்த்ரியங்கள், மனம்.


    சதஅர்தஆரம்-ஐம்பது ஆரங்கள் –ஐம்பது விதமான மனம், உடல் நிலைகள். ஆரங்கள் (spokes) சுற்றுவதன் மூலம் சக்கரம் சுழல்கிறது. இவை என்ன என்று பார்க்கலாம்.
    1. விப்ர்யயம்-தவறாக அறிதல்(misconception) இது ஐந்து வகை.
    2. தமஸ்- இருள் போன்ற அறியாமை ( ignorance), மோகம் (delusion) – கயிறைப் பாம்பென்று நினைப்பது போல
    மகாமோகம் –(extreme delusion) அதனால் உண்டாகும் பயத்தைப் போல
    தமிஸ்ரம்—அறிவு மழுங்கும் செயலற்ற நிலை (gloom)
    அந்ததமிஸ்ரம் – தன்நிலை அறியாத மயக்கம் (fainting)


    2.துஷ்டி(thushti) -திருப்தி-(contentment )-இது ஒன்பதுவகைப்படும்.
    இயற்கையில், பொருள்களால்,காலத்தினால், நல்வாழ்வினால் என்று நான்கு வகை.
    இதற்கு மாறாக (i)பொருள் ஈட்டுவதில் பயனில்லை, (ii)அதைக் காப்பது கடினம், (iii) எல்லாப் பொருள்களும் நிலையற்றவை,(iv) பற்றை ஒழிக்க வேண்டும்,(v) இன்பம் என்பது துன்பத்துடன் கூட வருவது என்று உணர்வது அதனால் ஏற்படும் துஷ்டி.


    3. சித்தி-(successes) இது எட்டு வகை. அஷ்டமாசித்திகள் அல்ல. இது வேறு.
    (i)ஊகம்- ஊகித்து அறிவது, (ii)சப்தம்- கேட்டு அறிவது , (iiiஅத்யயனம்-கற்று அறிவது, (iv)துக்க விகதம் – இது மூன்றுவகை –மூன்றுவிதமான துக்கங்களின்மை (ஆதி பௌதிகம் – இயற்கையினால் துன்பம், ஆதிதைவிகம்-விதிவசமானது, ஆத்யாத்மிகம் – நம் எண்ணங்கள் மூலம் உண்டாவது. (iv) சுஹ்ருத் ப்ராப்தி – நல்ல நட்பு (v) தானம் –குருதக்ஷிணை மூலம் ஏற்படுவது.


    4. அசக்தி- (disability)-இது இருபத்தெட்டு வகைப் படும்., பத்து இந்த்ரியங்களில் ஏற்படும் குறைகள், மனத்தின் பலமின்மை, ஒன்பது வகை துஷ்டியின் எதிர்வகையான எண்ணங்கள், எட்டுவகை சித்தியின்மை.


    விம்சதி ப்ரதி அரா:- இருபது குறுக்கு ஆரங்கள் இந்த்ரியங்களும் இந்த்ரியவிஷயங்களும்
    ஷட்பி: அஷ்டகை: - எட்டு பிரிவுகளைக்கொண்ட ஆறு தத்துவங்கள்- பிரகிருதி, தாது, ஐஸ்வர்யம் பா(BHAA)வம் தைவம் ஆத்மகுணம்- இவை ஒவ்வொன்றும் எட்டு பிரிவுகளைக் கொண்டவை.


    பிரகிருதி- மூலப்ரக்ருதி , மஹத் தத்வம், அஹங்காரம் , பத்து இந்த்ரியங்கள் .
    ( ஸ்ருஷ்டிக்ரமம்- பிரகிருதி உருவமற்றது அதில் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று கலக்காமல் தனித்தனியாக உள்ளன. அப்போது சிருஷ்டி ஏற்படுவதில்லை.பிறகு இவை கலந்து மஹத் அல்லது புத்தி என்ற தத்துவம் உண்டாகிறது. புத்தியில் இருந்து அஹங்காரம் தோன்றி அது சாத்விகம், ராஜஸிகம் தாமஸிகம் என்று மூன்றுவகையாகப் பிரிகிறது. சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்த்ரியங்கள் மனம் இவை தோன்றுகின்றன. தாமஸிக அஹங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன.)
    தாது – தேகத்தின் எட்டு பாகங்கள் –மேல் தோல், உள் தோல், சதை, ரத்தம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை , விந்து.
    ஐஸ்வர்யம்- அணிமா மகிமா முதலிய அஷ்டமாசித்திகள்
    பாவம்-(bhaavam)-மனதின் தன்மைகள்- நற்குணம், அறிவு, வைராக்கியம்,மேன்மை, தீயகுணம், அறியாமை, பற்று, இழிநிலை.
    தேவா:-அமானுஷ்யப் பிரிவு -பிரம்மா, பிரஜாபதி, தேவர்கள், கந்தர்வர்கள்,யக்ஷர்கள்,அசுரர்கள், பித்ருக்கள், பூதங்கள்.
    இவை எல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைக்கும் கயிறு விஸ்வரூபம் அதாவது இந்த ப்ரபஞ்சம்
    த்ரிமார்கம்- மூன்று வகையான மார்க்கம், தர்மம், அதர்மம், ஞானம்.
    த்விநிமித்தம்- த்வந்த்வ நோக்கின் காரணமாக உள்ள
    ஏகமோஹம்- மாயை
    இதெல்லாமே பிரம்மம் என்று உணர்ந்தார்கள்.
Working...
X