Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 22 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 22 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 22 / 51







    ��
    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! ஆலிலையில் , உன் சிறு , வயிற்றுக்குள் இருந்த , பிரமாண்டம் , எப்படி , பெரிய வராஹனையும் , சூழ்ந்தது ?


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��


    बाल - आकृते: , वट , पलाश , मितस्य , यस्य ;

    ब्रह्माण्ड , मण्डलम् - अभूत् - उदर - एक , देशे |

    तस्य - एव , तत् , वरद ! हन्त ! कथम् , प्रभूतम् ?

    वाराहम् - आस्थितवत: , वपु: - अद्भुतम् , ते ॥


    ��


    பால - ஆக்ருதே : , வட , பலாஶ , மிதஸ்ய , யஸ்ய ;

    ப்ரஹ்மாண்ட , மண்டலம் - அபூத் , உதர - ஏக , தேஶே |

    தஸ்ய - ஏவ , தத் , வரத ! ஹந்த ! கதம் , ப்ரபூதம் ?

    வாராஹம் - ஆஸ்திதவத: , வபு: - அத்புதம் , தே ||


    ��


    वरद ........... வரங்களை , அளிக்கும் பெருமாளே !

    बाल ........... சிறு குழந்தை ,

    आकृते: ........ வடிவு கொண்டு ;

    वट ............. ஆலமரத்தின் ,

    पलाश ......... இலையில் ;

    मितस्य ......... அடங்கிய ,

    यस्य ............ எந்த , உன்னுடைய ;

    उदर ............. திரு வயிற்றின் ,

    एक ............. ஒரு சிறு ,

    देशे ............. பகுதியில் ;

    ब्रह्माण्ड ........ ப்ரஹ்மாண்டங்களின் ,

    मण्डलम् ....... கூட்டம் ,

    अभूत् ........... இருந்ததோ ;

    तस्य एव ते..... அந்த , உனக்கே ,

    अद्भुतम् ........ ஆச்சர்யமான ,

    वाराहम् ........ வராஹ ,

    वपु: ............ வடிவத்தை ;

    आस्थितवत:... எடுத்துக் கொண்ட போது ,

    तत् ............. அந்தப் பிரமாண்டக் கூட்டம் ;

    कथम् .......... எப்படி ,

    प्रभूतम् ......... போதிய அளவுக்குப் , பெரியதாக , ஆயிற்று ?

    हन्त ............ ஆச்சர்யம் !


    ��


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��


    * பேரருளாளப் பெருமானே !

    * நீ ஆலிலையில் , பள்ளி கொண்டபோது ; அதற்கு , ஏற்றவாறு ; சிறு குழந்தை வடிவு கொண்டாய் . அப்பொழுது , உன் , சிறு வடிவின், வயிற்றின் , ஒரு பகுதியில் , பிரமாண்டங்கள் அனைத்தும் , அடங்கிக் கிடந்தன. இதுவே , ஒரு பெரிய , அற்புதம்.

    * நீ , பெரிய வராஹமாய் , அவதாரம் செய்தபோது ; அந்தத் திருமேனி , பிரமாண்டத்தில் , அடங்கி இருந்தது ; மற்றோர் அற்புதம்.

    * பிரமாண்டங்கள் , உன் திருமேனியைக் காட்டிலும் , பெரியன ஆயின் ; ஆலிலையில் , சிறு வடிவுடன் , பள்ளி கொண்ட , உன் திரு வயிற்றின் , சிறு பகுதியிலேயே , அந்த பிரமாண்டங்கள் , அடங்கிக் , கிடந்தது , எப்படி ?

    * சிறியன ஆயின் ; அவற்றைக் காட்டிலும் , எத்தனையோ , பெரிதான , உன் வராஹத் திருமேனி , அவற்றில், அடங்கியது , எப்படி ?

    * இந்த அற்புதத் திரு விளையாடல்கள் எல்லாம், உனக்கு மட்டுமே உரிய விசித்ர சக்தியால் ஏற்படுவன , அல்லவோ ?






    ��



    Last edited by sridharv1946; 01-08-18, 09:56.
Working...
X