Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 24 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 24 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 24 / 51









    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் த்ரிவிக்ரமத் , திருவடித் தீர்த்தத்தால் , உலகம் , மங்களம் ஆனது !



    ��










    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





















































    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    क्रामन् , जगत् ; कपट , वामनताम् - उपेत : ;

    त्रेधा ; करीश ! स , भवान् , निदधे ! पदानि |

    अद्य - अपि ; जन्तव , इमे ; विमलेन , यस्य ,

    पाद - उदकेन , विधृतेन ; शिवा , भवन्ति ! ॥



    க்ராமந் , ஜகத் ; கபட , வாமநதாம் - உபேத: ;

    த்ரேதா ; கரீஶ ! ஸ , பவாந் , நிததே ! பதாநி |

    அத்ய - அபி ; ஜந்தவ , இமே ; விமலேந , யஸ்ய ,

    பாத - உதகேந , வித்ருதேந ; சிவா , பவந்தி ! ||



    करीश ........ அத்தி கிரிப் பெருமானே !

    विधृतेन ...... (தம்) தலையில் ஏந்திய

    विमलेन ...... பரிசுத்தமான ,

    यस्य ......... எந்த உன்னுடைய ,

    पाद .......... திருவடித்,

    उदकेन ....... தீர்த்தத்தால் ,

    इमे ........... இந்தப்,

    जन्तव: ....... பிராணிகள் ;

    अद्य अपि .... இப்பொழுதும்,

    शिवा ......... (சிவர்களாக) மங்களமானவர்களாக ,

    भवन्ति ....... ஆகின்றனரோ ;

    स ............. அத்தகைய , பெருமை உள்ள ;

    भवान् ......... நீ ,

    कपट ......... கபடமான ,

    वामनताम् .... வாமனத் திருமேனியை ,

    उपेत : ........ அடைந்தவனாய் ;

    जगत् ......... உலகத்தை ,

    क्रामन् ........ அளப்பதற்காக ;

    पदानि ........ திருவடிகளை ,

    त्रेधा .......... மூவகையாக ,

    निदधे ........ வைத்தாய் !



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * அத்தி கிரிப் பெருமானே !

    * நீ , முன்பு , கபட வாமந வடிவம் கொண்டு ; பலியின் வேள்விக்குச் சென்று , அவனிடம் , மூன்று அடி , மண் கேட்டாய். அவனும் , தந்தேன் என்றான். பின்பு , மிகப் பெரிய , திரிவிக்ரம வடிவு கொண்டு , பூமியில் , ஓர் அடியும் , ஆகாயத்தில் , ஓர் அடியுமாக , அளந்து , மூன்றாவது , அடியைப் , பலியின் முடியில் வைத்து அருளினாய்.

    * அப்பொழுது , பிரம லோகம் அளவும் , சென்ற , உன் திருவடிக்குப் , பிரமன் , திருமஞ்சனம் செய்தான் . அந்தத் தீர்த்தமே , கங்கா நதியாகப் பெருகியது. அந்தத் தீர்த்தத்தை , ருத்ரன், தன் முடியால் ஏந்திச் , சிவன் என்ற பெருமை பெற்றான்.

    * இப்பொழுதும், முன் , உன் , திருவடியிலிருந்து தோன்றிய , தெளிவான , கங்கா தீர்த்தத்தில் இவ்வுலகில் உள்ள , பிராணிகள் , நீராடித் , தாங்களும், சிவர்கள் ஆகின்றனர். அதாவது மங்களத்தைப் பெறுகின்றனர்.

    * எத்தனையோ அண்டங்கள் ! எத்தனையோ சிவர்கள். ப்ராணிகளுக்குக் கணக்கு இல்லை. இப்படிப் பல சிவர்கள் , உள்பட ,ஸகல ப்ராணிகளும் , கங்கையில் நீராடிச் சிவர்கள் ஆகின்றனர் (சிவர் - மங்களம் ஆனவர்)




    ��

    Last edited by sridharv1946; 03-08-18, 14:46.
Working...
X