Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 25 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 25 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 25 / 51







    ��
    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! ராமனாய் , நீ கட்டிய அணையால் , மக்கள் , இன்றும் , கடலைக் , கடக்கின்றனர் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    येन - अचल , प्रकृतिना ; रिपु , संक्षय - अर्थी ;

    वाराम् , निधिम् ; वरद ! पूर्वम् - अलंघय: ; त्वम् ।

    तम् , वीक्ष्य , सेतुम् ; अधुना - (अ)पि , शरीरवन्त: ,

    सर्वे ; षट् - ऊर्मि , बहुलम् , जलधिम् ; तरन्ति ॥


    ��




    யேந - அசல , ப்ரக்ருதிநா ; ரிபு , ஸம்க்ஷய - அர்த்தீ ;

    வாராம் , நிதிம் ; வரத ! பூர்வம் - அலங்கய: ; த்வம் |

    தம் , வீக்ஷ்ய , ஸேதும் ; அதுநா , (அ)பி , ஶரீரவந்த: ,

    ஸர்வே ; ஷட் - ஊர்மி , பஹுளம் , ஜலதிம் ; தரந்தி ||



    ��




    वरद ........... வரதனே !

    त्वम् ............ நீ ,

    रिपु ............. பகைவர்களின் ,

    संक्षय .......... அழிவை ,

    अर्थी ........... விரும்பி ,

    अचल .......... மலைகளை ( அசையாத ) ,

    प्रकृतिना ....... சாதனமாகக் கொண்ட (இயல்பை உடைய) ,

    येन ............. எந்த அணையால் ;

    पूर्वम् ........... முன்பு ,

    वाराम् निधिम्.. கடலை ,

    अलंघय: ...... கடந்தாயோ ;

    तम् ............ அந்த ,

    सेतुम् .......... அணையைக் ,

    वीक्ष्य .......... கண்டு ;

    अधुना अपि ... இப்பொழுதும் ,

    शरीरवन्त: .... சரீரம் படைத்த ,

    सर्वे ............ எல்லாப் பிராணிகளும் ;

    षट् ............ ஆறு வகையான ,

    ऊर्मि .......... அலைகள் ,

    बहुलम् ....... நிறைந்த ,

    जलधिम् ..... (ஸம்ஸார) ஸமுத்ரத்தை ,

    तरन्ति ........ கடக்கின்றன.


    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��




    * வரம் தரும் , அருளாளப் பெருமானே !


    * நீ , முன்பு , இராமனாக , அவதரித்த போது ; உலகுக்குப் பல துன்பங்கள் விளைவித்த , இராவணனையும் , அவனது சுற்றத்தாரையும் , வேரறுக்க விரும்பினாய். மலைகளை எல்லாம் , போட்டுத் , திரு அணை கட்டிக் , கடலைக் கடைந்தாய். இலங்கைக்குச் சென்று , பகைவர்களை ஒழித்து , உலகுக்கு , நலம் புரிந்தாய்.

    * முன்பு , நீ , அமைத்த , திரு அணையை , இன்றும் , எல்லாப் பிராணிகளும் , போய் , ஸேவிக்கின்றனர். அதனால் ஆசை , கோபம் , பேராசை , அறியாமை , செருக்கு , பொறாமை என்ற ஆறு தீய குணங்கள் , இன்னும் , பசி , தாகம் , துன்பம் , அறியாமை , முதுமை , மரணம் , ஆகிய ஆறு துன்பங்கள் ஆகிய அலைகளை உடைய , ஸம்ஸாரம் எனும் , கடலைக் கடக்கின்றனர்.

    * இவ்வாறு , கடலைக் கடக்க , நீ கட்டிய அணையைக் , காண்பதாலேயே , பேரலைகள் நிறைந்த , வேறொரு பெருங்கடலைப் , பிராணிகள் , கடக்கின்றனர். அதாவது , திரு அணையை ஸேவித்து , நற்கதி பெறுகின்றனர் .


    ��




    Last edited by sridharv1946; 04-08-18, 10:05.
Working...
X