Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 28 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 28 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��



    श्री वरदराज पंचाशत् 28 / 51







    ��
    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! உன் அர்ச்சைத் திருமேனி மூலம் , உன்னைக் காணலாம் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��








    ��


    नित्यम् , करीश ! तिमिर - आविल , धृष्टयो: - (अ)पि ,

    सिद्ध - अंजनेन , भवता - एव , विभूषित - अक्षा: ।

    पश्यन्ति - उपरि - उपरि , संचरताम् - अधृश्यम् ,

    माया , निगूढम् - अनपाय , महानिधिम् , त्वाम् ॥


    ��



    நித்யம் , கரீஶ ! திமிர - ஆவில , த்ருஷ்டயோ: - (அ)பி ,

    ஸித்த - அஞ்சநேந , பவதா - ஏவ , விபூஷித - அக்*ஷா: |

    பஶ்யந்தி - உபரி - உபரி , ஸஞ்சரதாம் - அத்ருஶ்யம் ,

    மாயா , நிகூடம் - அநபாய , மஹாநிதிம் , த்வாம் ||



    ��




    करीश ........ அத்தி கிரிப் பெருமானே !

    तिमिर ........ கண்ணின் தோஷத்தால் (பாபத்தால்) ,

    आविल ....... கலங்கிய ,

    धृष्टय: ........ பார்வை உடையவர் ,

    अपि .......... ஆயினும் ;

    भवता एव .... உன் திருமேனியே , ஆகிய ,

    सिद्ध .......... சித்தர்களின் ,

    अंजनेन ....... மையால் ,

    विभूषित ...... அழகுறப் பெற்ற ,

    अक्षा: ......... கண்களை உடையவர்கள் ;

    उपरि उपरि ... மேன் மேலும் ,

    संचरताम् ..... நடப்பவர்களுக்கு ;

    अधृश्यम् ..... காண முடியாததாகவும் ;

    माया .......... ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ,

    निगूढम् ........ மறைக்கப்பட்டதாகவும் ;

    अनपाय ....... அழியாத ,

    महानिधिम् .... பெரும் புதையலாகவும் , உள்ள

    त्वाम् ........... உன்னை (உன். திவ்யாத்ம ஸ்வரூபத்தை )

    नित्यम् ......... எப்பொழுதும் ;

    पश्यन्ति ....... காண்கின்றனர் !

    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:



    ��



    * அத்தி கிரிப் பெருமானே !


    * உனது அர்ச்சைத் திருமேனியை , யோகம் செய்பவர்களும் , ஸேவித்துத் , தம் யோகம் தலைக்கட்டப் பெறுகின்றனர். யோகம் செய்பவர்களும் , தமக்கு அந்தர்யாமியாய் இருக்கும் , உன். ஸ்வரூபத்தைத் , தங்கள் கர்ம வசத்தால் , காண முடியவில்லை.

    * கண்ணில் , குற்றம் உடையோர்க்கு , கண் பார்வை , மங்குவது , இயல்பு தானே ! தம் வீட்டில் , பூமியின் கீழே உள்ள , புதையலைக் கூட , மக்கள் காண முடிவதில்லை. அவர்கள் , தினந்தோறும் , அதன் மேல் , நடந்து கொண்டு தான், இருக்கின்றனர் . பூமி அன்றோ , இதை , மறைத்துக்கொண்டு இருக்கிறது.

    * அதற்காக , அவர்கள் , சித்தர்களிடம் உள்ள மையைப் பெற்றுத்,தம் கண்களில் , தடவிக் கொள்கின்றனர் . அதனால் , புதையலைக் கண்டு , எடுத்துப் , பயன் படுத்துகின்றனர்.


    * இவ்வாறே , உலகம் எங்கும் , வியாபித்து விளங்கும் , உன் ஸ்வரூபத்தைச் , சிந்தித்துச் , சிந்தித்துப் , பழகியும் , அதைக் காண முடியவில்லை. அதற்காக , அவர்கள் , உன் அர்ச்சைத் திருமேனியைக் , கண்ணாரக் கண்டு , பழகுகின்றனர்.

    * மை வண்ணனான , உன் திருமேனி , அவர்கள் கண்ணுக்குச் , சித்தர்களின் மையாக ஆகின்றது. இப்படிப் , பேரருளாளனாகிய , உனது திருமேனியை , ஸேவித்துப் பழகியதால் , மையிட்ட கண்ணுக்குப் , புலப்படும் புதையல் போல் , உன் ஸ்வரூபம் , அவர்களுக்கு , நன்கு , புலப்படுகின்றது.

    * இதுவரை , அவர்களின் , கர்ம வசித்தால் , உன் ஸ்வரூபம் , மறைந்திருந்தது. உன் ஸ்வரூபம் , உலகத்தின் புதையல் போலன்றி , எந்நாளும் , அழியாத பெரும் புதையல் ! இதை , எப்பொழுதும், கண்டு , உரிய காலத்தில் , தம் யோகம் தலைக் கட்டப் பெறுகின்றனர்.

    * இப்படி , யோகிகளுக்கும் , இன்றியமையாத , உன் அரச்சைத் திருமேனியின் , பெருமை , கூறற்பாலதோ ?




    ��



    Last edited by sridharv1946; 07-08-18, 09:57.
Working...
X