Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    325. அதல சேட னாராட
    325பொது

    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான தனதான

    அதல சேட னாராட அகில மேரு மீதாட
    அபின காளி தானாட அவளோடன்
    றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
    அருகு பூத வேதாள மவையாட
    மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
    மருவு வானு ளோராட மதியாட
    வனச மாமி யாராட நெடிய மாம னாராட
    மயிலு மாடி நீயாடி வரவேணும்
    கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
    கருதலார்கள் மாசேனை பொடியாகக்
    கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
    கனக வேத கோடுதி அலைமோதும்
    உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
    உவண மூர்தி மாமாயன் மருகோனே
    உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
    னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே.


    பதம் பிரித்தல்


    அதல(ம்) சேடனார் ஆட அகில மேரு மீது ஆட
    அபின காளி தான் ஆட அவளோடு அன்று


    அதலம் - கீழ் உலகத்து உள்ள. சேடனார் - ஆதி சேடன். ஆட - ஆடவும். அகில(ம்) மீது - பூமி மீதுள்ள. மேரு ஆட - மேரு மலை ஆடவும் அபின்னம் - ஒற்றுமையுடன் (சிவனது நடனத்துக்கு வேற்றுமை இல்லாத வகையில்) காளி தான் ஆட- காளி தேவி ஆடவும் அவளோடு அன்று- அவளுடனே அன்று


    அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
    அருகு பூத வேதாளம் அவை ஆட


    அதிர - அவள் நடுங்கும்படி வீசி - காலைத் தூக்கி. வாதாடும் - தருக்கம் செய்து போட்டியிட்டு விடையில் ஏறுவார் ஆட - இடப வாகனரான சிவபெருமான் ஆடவும் அருகு - அவருக்குச் சமீபத்தில் பூத வேதாளம் அவை ஆட -அவரைச் சூழ்ந்து நின்று பூதங்களும் பேய்களும் ஆடவும்


    மதுர வாணி தான் ஆட மலரில் வேதனார் ஆட
    மருவு வான் உளோர் ஆட மதி ஆட


    மதுர வாணி தான் ஆட - இனிமையான சரஸ்வதி ஆடவும் மலரில் - தாமரை மலரில் வேதனார் ஆட – பிரமன் ஆடவும் மருவு - பொருந்தியுள்ள
    வான் உளோர் ஆட - விண்ணவர்கள் ஆடவும்.
    மதி ஆட - சந்திரன் ஆடவும்.


    வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட
    மயலும் ஆடி நீ ஆடி வரவேணும்


    வனச - செந்தாமரை மலரில் மாமியாராட - உனது மாமியாகிய இலக்குமி ஆடவும் நெடிய - விஸ்வ ரூபம் எடுத்த மாமனார் ஆட - மாமனாராகிய திருமால் ஆடவும் மயிலும் ஆடி - மயில் ஆடவும் நீயாடி - நீயும் நடனம் புரிந்து வரவேணும் - வரவேணும்.


    கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு
    கருதலார்கள் மா சேனை பொடியாக


    கதை விடாத தோள் வீமன் - கதாயுதத்தை எப்போதும் தோளில் வைத்துள்ள வீமசேனன் எதிர் கொள் - எதிர்த்துச் செலுத்தின வாளியால் நீடு - அம்பு செலுத்தவதில் பெரிய கருதலார்கள் - பகைவர்களின் மா சேனை - பெருஞ் சேனைகள். பொடியாக - பொடிபட (உதவிய).


    கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது
    கனக வேத கோடு ஊதி அலை மோதும்


    கதறு காலி - கதறிச் சென்ற பசுக் கூட்டங்கள். போய் மீள - போனவை மீண்டுவர (புல்லாங் குழலை ஊதினவரும்). விஜயன் ஏறு தேர் மீது - அருச்சனன் ஏறிச் சென்ற தேர் மீது (பாகனாயிருந்து). கனக - பொன் மயமானதும். வேத - வேத ஒலியைத் தருவதும் கோடு ஊதி - சங்கத்தை ஊதினவரும் அலை மோதும் - அலைகள் வீசுகின்ற


    உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம்
    உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே


    உததி மீதலே - கடலிலே சாயும் – பள்ளி கொண்ட வரும் உலகம் மூடு சீர் பாதம் - உலகத்தையே அளந்து மூடிய திருவடிகளை உடையவரும் உவணம் ஊர்தி - கருட வாகனராகியவரும் ஆகிய திருமால் மாமாயன் மருகோனே - சிறந்த மாயோனாகிய திருமாலின் மருகனே.


    உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன்
    உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே.
    உதய தாம - அன்று அலர்ந்த மலர் மாலையை. மார்பான - அணிந்த மார்பினரான ப்ரபுட தேவ மாராசன் - பிரபுட தேவ மகாராஜனுடைய உளமும் ஆட - உள்ளம் நெகிழ்ந்துருகும் வண்ணம் வாழ் - அவனது உள்ளத்தில் வாழ்கின்ற தேவர் பெருமாளே - தேவர்கள் பெருமாளே.


    சுருக்க உரை




    விளக்கக் குறிப்புகள்


    1. சம்பந்தாண்டான் என்பவரோடு அருணகிரியார் வாது செய்த போது முருக வேளைப் பிரபுட தேவராஜனுடைய சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது.


    சயிலமெ றிந்தகை வேற்கொடு
    மயிலினில் வந்தெனை யாட்கொளல்
    சகமறி யும்படி காட்டிய குருநாதா --- திருப்புகழ், அரிவையர்நெஞ்சு


    முருக பெருமான் கம்பத்திலிருந்து வெளிப்பட்டுப் பிரபுடதேவராஜன் முதலிய அனைவரும் கண்டு களிக்கக் காட்சியளித்த திருவருட் செயல் உலகமறிய நிகழ்ந்தது என சொல்கிறார்


    2. அதிர வீசி வாதாடும்....
    முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ. நீ முழங்கு அழல்
    அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ.. ` .----சம்பந்தர் தேவாரம்

    3. அருக பூதவேதாளம் அவையாட....
    ஊன் அடைந்த வெண்தலையினோடு பலி திரிந்து
    கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே..


    -- சம்பந்தர் தேவாரம்
    Last edited by soundararajan50; 11-08-18, 10:20.
Working...
X