Announcement

Collapse
No announcement yet.

Brahmins for society

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahmins for society

    எங்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் "உங்கள் ஐயர்" என்று வந்தது. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது பெயர் முகவரி மற்றும் பிறந்த தேதி, குலதெய்வம், கோயில் இஷ்ட தெய்வம் என எல்வாவற்றையும் வாங்கிக் கொண்டது. பணம் கொஞ்சம் அதிகம் தான். இதில் வெப்சைட் "NON Profit Organization" என்று பீற்றி கொண்டது. கொஞ்சம் எரிச்சாலாகிப் போய் வலை தளத்தை மூடப் போனேன். என் மனைவியின் நச்சரிப்பால் வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். 24 மணி நேரத்தில், ஒரு ஆச்சரியம் எனக்கு நீண்ட EMAIL வந்தது.
    1. என் குலதெய்வம் கோயிலுக்கு என்பேரில் கொடுத்த நன்கொடை ரசீது (எந்த நல்ல காரியங்களையும் குலதெய்வம் வேண்டுதல் இல்லாமல் செய்ய கூடாது என்று காரணம் இருந்தது)
    2. எனது சொந்த மாவட்டத்தில் உள்ள எனக்கே தெரியாத பழமை வாய்ந்த கோயிலுக்கு (வருமானமில்லாத கோயிலுக்கு) ஒரு சிறிய நன்கொடை மற்றும் அந்த கோயிலின் படங்கள், புராண கதை மற்றும் கட்டிய பாண்டிய மன்னனின் கதை, அந்த கோயிலில் வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என தல புராண புத்தகம். அந்த கோயிலின் இன்றைய பழுதுடைந்த நிலையில் போட்டோக்கள் அனுப்பப்பட்டிருந்தன. அந்த கோயிலின் பராமரிப்பு பணிக்காக ஒரு சிறிய தொகை வருடம் தோறும் அனுப்பி புரவலராக இணையும் படி கேட்டுக் கொண்டது. (அவர்களின் வலை கலத்தில் என் போட்டோ புரவலராக வருமாம்.)
    3. பூஜைக்கான பொருள்களின் List; ஐயர் போட்டோ; அவரின் நம்பர் என தெளிவாக அளிக்கப்படிருந்தன.
    பூஜையன்று அதிகாலை காலிங் பெல் அடிக்கவே கதவை திறந்தேன். "நீங்கள் தானே ஐயர் வேண்டும் என கேட்டிருந்தீர்கள்" தெளிவான ஆங்கிலத்தில் கேட்டார். அவருக்கு நடுத்தர வயதிருக்கும். படிய வாரிய தலை வெளிர் நில நிறத்தில் முழுக்கை சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் பேண்ட் ஒரு Executive Look நான் "ஆம்" என்றேன். உங்களுக்கு பணியாற்ற வந்திருப்பவன் நான் தான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கும் என் மனைவிக்கும் என்னவோ போல் ஆகியிட்டது. நாங்கள் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு Corporate Iyer ரை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி அவரை வரவேற்றேன். அவரின் கையில் Suitcase Bag இருந்தது. அதில் வலைதளத்தின் பெயர் எழுதியிருந்தது. Bathroomமிற்கு சென்று கால், கைகளை அலம்பிக் கொண்டு வந்தார். உடை மாற்ற இடம் கேட்டார் கொடுத்ததேன்.
    ஊடைமாற்றி வெளியே வந்தவரை பார்த்தும் நிஐ ஆச்சிரியம். உடல் முழுவதும் 12 திருநாமங்கள், பஞ்சகசம், பன்னீர் வாசனை, காதில் கடிக்கன், பின் வாரிய தலை என முழு ஐயர் கோலத்தில்இருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆனந்தமான இருந்தது. கணீரென்ற குரலில் சுத்தமான தமிழில் பூஜைக்கான பலன்களை விவரித்தார். கவனம் இறைவனிடத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சமஸ்கிரத சுலோகங்களுக்கு தமிழில் அர்த்தம் சொல்லி அசத்தினார். என் குழந்தைகளுக்கு இரண்டு சிறிய புத்தகங்கள் பரிசளித்தார். (ராமாயணம் படக்கதை, வேத காலத்தில் முறையில் கல்வி பயிலும் பயிற்ச்சி) அனைத்திலும் வலைதளத்தின் பெயர் இருந்தது. நான் மகிழ்ந்து. மேலும் தட்சணை அளித்தேன். என் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஒரு கவரில் போட்டு என்னிடமே திருப்பி கொடுத்து எங்கள் குலதெய்வக் கோயிலில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டார். என் (EXTRA) பணத்தை மறுத்த விதம் எனக்கு பிடித்த இருந்தது நான் அவருடன் சிறது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் வலைதளத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.
    இன்றைய சமுகம் வேட்டி கட்டுபதையே தவிர்கிறது. இந்த நிலையில் குடுமியும் பஞ்சாகமும் கட்டியவர்கள் பொது வெளியில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார்கள். ஒரு முல்லாவோ அல்லது பாதிரியாரோ அவர்களின் பாரம்பரிய உடையில் வரும்போது மதிக்கும் இந்த சமுகம் புரோகிதரை அவரின் பாரம்பரிய உடைக்காக அவமான படுத்துகிறது.
    சினிமா ட்ராமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் எங்கள் தொழில் கேவலப்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் எண்களின் பிள்ளைகள் பள்ளிகளில் கிண்டல் செய்யப்படுகிறார்கள். ஆத்திக்க அன்பர்களும் அதை கண்டும் காணத்து போல் இருக்கிறார்கள்.
    வைதீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காரணங்களால் திருமணம் ஆவது மிக மிக கடினம். உண்மையை சொல்ல போனால் திருமணமே ஆவதில்லை. புதிதாக வைதீக தொழிலை ஏற்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்து போய் விட்டது. வேதம் படிப்போர் அருகிவிட்டனர்.
    இந்த நிலை தொடர்ந்தால் வெகு சிலரே வைதீகத்தில் இருப்பார்கள். மேலும் DEMAND – SUPPLY CONCEPT படி வைதீகத்துக்கான செலவும் மிகவும் கூடி விடும். வேறு வழியில்லாமல் பலர் வைதீக வழக்கங்களை புறக்கணிக்க வேண்டி வரும். இந்த நிலை அடுத்த 10 ஆண்டுகளில் நமது பாரம்பரியத்தை முழு அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.
    நான் 12 வருடம் வேதம் படித்தவன். நான் இந்த முயற்சியில் இறங்க ஆரம்பத்தில் மிகவும் தயங்கினேன். ஒரு டாக்டரோ / போலீஸ்காரரோ தங்கள் தொழில் தவிர்த்த நேரத்தில் Uniform உடையுடன் இருப்பதில்லை. ஆனால் புரோகிதர் மட்டும் ஏன் ஒரே உடையுடன் / சமூக அவமதிப்பை பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும். அது மட்டும் இல்லாமல் நாங்கள் சொல்லும் மாந்திரங்களில்/ ஆச்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை. பூஜை இல்லா காலங்களில் எங்கள் உடை மட்டும் காலத்திற்கேற்ப மாற்றி கொள்வதில் தவறு என்ன?
    இது கோயில் பிரசாத்தை வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் தட்டில் தருவது போலத்தான். பிரசாதம் தன் இயல்பை / தன்மையை / தூய்மையை இழப்பதில்லை. எங்கள் உடை மாற்றம் புஜையை / யாகத்தை பாதிப்பதில்லை.
    நான்கு Software Professionals சேர்ந்து இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளனர். இது NON PROFIT ORGANIZATION ஆகும்.
    புரோகிதர்களின் தகுதிக்கு ஏற்ப PART TIME வேலையும் செய்கிறோம். நான் ஒரு சிறு நிறுவனத்தில் CASHIER. நான் என் தந்தை தொழிலான புரோகிதமும் செய்கிறேன். வலைதளத்தின் செயல்கள் போக, மீதி பணம் என் Account-க்கு வந்துவிடும்.
    வைதீக மற்றும் சாஸ்திரங்களை பற்றி பொது மக்களுக்கு புரியும் படி தமிழில் விளக்கமளிக்க எங்களுக்கு வலை தளம் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. நான் பொது வெளியில் அவமானப்படுத்தப்படாமல் மற்றவருடன் சரிசமமாக நடத்தப் படுகிறேன்.
    சிலர் இந்த மாறுதலை எதிர்கிறார்கள். இந்த எதிர்ப்பு இயல்பானது. இந்த மாறுதலை எதிர்ப்பவர்கள் வைதீகத்தில் இருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
    ஆனால் பெருமறைவு வரவேற்பு இருக்கிறது என்று கூறி முடித்தார். நான் மகிழ்ச்சியிடனும் மரியாதையுடனும் அவரை வழியனுப்பினேன்.
    இந்துமதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. உலகில் எந்த கலாச்சாரமும் இவ்வளவு பழமையானதாகவும் உயிர்துடிப்பனதாகவும் இல்லை. பழமையை புதிய கோணத்தில் அணுகுவதே இந்து மதத்தின் சிறப்பு என்று நினைத்து கொண்டேன்
    பின் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளுக்கு என் இஷ்;ட தெய்வ பிரசாதம் வீட்டுக்கு வருகிறது.
    இது கனவு தான் . நிஜமாக கூடிய கனவு.
Working...
X