Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 36 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 36 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&

    ��


    श्री वरदराज पंचाशत् 36 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! பெருந்தேவிப் பிராட்டி , வழி செய்வார் !



    ��








    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��





    ��


    पर्याकुलम् , महति , दु:ख , पयोनिधौ ; माम् ,

    पश्यन् ; करीश ! यदि , जोषम् - अवस्थित: - त्वम् ।

    स्फार - ईक्षणे - (अ)पि , मिषति , त्वयि , निर्निमेषम् ;

    पारे , करिष्यति ! दया , तव , दुर्निवारा ॥

    ��


    பர்யாகுலம் , மஹதி , து:க்க , பயோநிதௌ ; மாம் ,

    பஶ்யந் ; கரீஶ ! யதி , ஜோஷம் - அவஸ்த்தித: - த்வம் |

    ஸ்ப்பார - ஈக்ஷணே - (அ)பி , மிஷதி , த்வயி , நிர்நிமேஷம் ;

    பாரே , கரிஷ்யதி ! தயா , தவ , துர்நிவாரா ||


    ��


    करीश ............ அத்தி கிரிப் பெருமானே !

    त्वम् ............... நீ ,

    महति ............. பெரிய ,

    दु:ख .............. துன்பக்

    पयोनिधौ ......... கடலுள் ,

    पर्याकुलम् ........ திணறுகிற ,

    माम् ............... என்னைப் ,

    पश्यन् ............ பார்த்துக் கொண்டு ;

    जोषम् ............ மௌனமாக ,

    अवस्थित: यदि .. இருப்பாயானால் ;

    त्वयि .............. நீ ,

    स्फार ............. விரிந்த ,

    ईक्षणे ............. கண்களுடன் ;

    निर्निमेषम् ........ இமை கொட்டாது ;

    मिषति अपि ...... விழித்துக் கொண்டிருக்கும் போதும் ;

    तव ................ உனது ,

    दया ............... கருணை வடிவான பிராட்டி ,

    दुर्निवारा .......... தடுக்க முடியாதவளாய் ,

    पारे ............... ஸம்ஸாரக் கடலின் அக்கரையான , உன்னிடம் ,

    करिष्यति ......... சேர்ப்பிக்கப் , போகின்றாள் !

    ��


    * அத்திகிரி பெருமானே !

    * அடியேன் , இந்த ஸம்ஸார மண்டலத்தில் அகப்பட்டுத் , துன்பக் கடலில் , ஆழ்ந்து , தடுமாறி , இருக்கின்றேன் . எனது இந்த அவல நிலையை பார்த்தும் , நீ , ஒன்றும் செய்யாது , வாளா இருப்பாயோ ?

    * நீ , அவ்வாறு இருப்பினும் , உன்னுடைய , கருணையே வடிவான , பிராட்டி , என்னை கைவிட மாட்டார் . நீ , உன் , விசாலமான கண்களை , விழித்துக் கொண்டு , இமை கொட்டாது ; பார்த்துக் கொண்டு இருக்கும்போதே , என் துன்பம் பொறுக்காத பிராட்டி , ஸம்ஸாரம் எனும் கடலுக்கு , அக்கரையான , உன்னிடம் , என்னைக் கொண்டுபோய் சேர்த்திடுவாள் .

    * அவள் , இவ்வாறு செய்வதையும் , நீ , தடுக்கமுடியாது . நீ , என்னைப் புறக்கணித்தாலும் , கருணையே வடிவம் கொண்ட , பெருந்தேவி பிராட்டி , நான் , உன்னிடம் சேர்வதற்குப் , பரிந்து பேசி , வழி செய்துவிடுவார் !




    ��

    Last edited by sridharv1946; 15-08-18, 07:52.
Working...
X