Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 40 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 40 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 40 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! ஆனையைப் போல் , அடியேனையும் காத்து , அருள் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    स , त्वम् , स , एव , रभसो , भवत् , औपवाह्य: ,

    चक्रम् , तत् - एव , शित , धारम् - अहम् , च , पाल्य: ।

    साधारणे , त्वयि , करीश ! समस्त , जन्तो: ,

    मातंग , मानुष , भिदा , न , विशेष , हेतु: ॥




    ஸ , த்வம் , ஸ , ஏவ , ரபஸோ , பவத் , ஔபவாஹ்ய: ,

    சக்ரம் , தத் - ஏவ , சித , தாரம் - அஹம் , ச , பால்ய: |

    ஸாதாரணே , த்வயி , கரீஶ ! , ஸமஸ்த , ஜந்தோ: ,

    மாதங்க , மானுஷ , பிதா , ந , விஶேஷ , ஹேது: ||





    करीश ...... அத்தி கிரிப் பெருமானே !

    त्वम् .......... நீ ,

    स : .......... முன்பு இருந்த எம்பிரானே தான் !

    रभस : ....... வேகம் உடையவனான ,

    भवत् ......... உனக்கு ,

    औपवाह्य: ... வாஹனமான , கருடனும் ;

    स एव ....... அதே வேகம் உடையவன் தான் !

    शित ......... கூரிய ,

    धारम् ........ முனையை உடைய ,

    चक्रम् ....... திரு ஆழி ஆழ்வானும் ;

    तत् एव ..... அப்படியே !

    अहम् च ...... நானும் ;

    पाल्य: ....... (கஜேந்த்ரனைப் போல் ) காக்கப் பட வேண்டியவனே !

    त्वयि ......... (அப்படி இருக்க) நீ ,

    समस्त ....... எல்லாப் ,

    जन्तो: ....... பிராணிக்கும் ,
    साधारणे .... பொதுவாய் இருக்கும் போது ,

    मातंग ........ யானை ,

    मानुष ........ மனிதன்

    भिदा ......... என்ற வேற்றுமை ,

    विशेष ........ பிரிவுக்குக் ,

    हेतु: .......... காரணமாக ,

    न ............. இருக்காது !


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * அத்திகிரி பெருமானே !

    * முன்பு , முதலையின் வாய்ப்பட்டுத் , தவித்த யானை , உன்னை , அழைத்தது .
    . அதைக் காக்க , மிக வேகமுடைய , பெரிய திருவடியின் மீது , ஏறி , ஓடி வந்தாய் .
    . கூரிய முனையையுடைய , உன் சக்ராயுதத்தால் , முதலையைத் , துணித்து , யானையைக் காத்து அருளினாய் .

    * அவ்வாறே , அடியேனையும் , நீ காக்க கடமையை , உடையாய்.
    . அப்பொழுது , ஆனையைக் காத்த , நீயே , இன்று பேரருளாளன் ஆக , எழுந்தருளியுள்ளாய் .
    . முன்பு நீ , ஏறி வந்த கருடனும் , அந்த வேகத்தை , இப்பொழுதும் கொண்டுள்ளார் .
    . முன்பு முதலையைத் துணித்த , திருவாழி ஆழ்வான் , இன்றும் , கூரிய முனையோடு , உன் திருக்கையில் திகழ்கின்றார் .
    . அடியேனும் , முதலையின் வாய்ப்பட்ட , யானை போல் , ஸம்ஸார பந்தத்தில் அகப்பட்டுத் , தவிப்பதால் , காக்கப்பட வேண்டியவனாகவே, உள்ளேன் .

    * இப்படி எல்லாம் ஒத்து இருக்க , 'அது யானை , நான் மனிதன் ' என்ற ஒரு வேற்றுமை மட்டும் உள்ளது . இதைக்கொண்டு , நீ , என்னைத் , தள்ளிவிட முடியாது . ஏன் ?
    . நீ , யானைக்கும் , அடியேனுக்கும் மட்டுமின்றி , எல்லா ஜீவராசிகளுக்கும் , பொதுத் தெய்வமாகத் திகழ்கின்றாய் , அல்லவா ? ஆதலின் நீ காப்பதற்கு , யானையாய் இருப்பதும் , கைவிடுவதற்கு , மனிதனாய் இருப்பதும் , காரணமாக மாட்டா.

    * ஆதலின் , யானையை காத்தது போல் , அடியேனையும் , காத்தே தீரவேண்டும் !



    ��






    Last edited by sridharv1946; 19-08-18, 14:07.
Working...
X