Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam


    ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 1 அத்யாயம் 1
    ஸ்கந்தம் 1
    அத்யாயம் 1
    ஜன்மாத்யஸ்ய யத; அன்வயாத் இதரசஸ்ச அர்த்தேஷு அபிக்ஞ: ஸ்வராட்
    தேனே ப்ரம்ம ஹ்ருதா ய ஆதிகவயே முஹ்யந்தி யத் சூரய:
    தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமய: யத்ர
    த்ரிஸ்ர்கோ ம்ருஷா
    தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி


    அன்வயாத் – உடன்பாட்டாலும், இதரஸ்ச –எதிர்மறையாலும்., அஸ்ய – இந்த உலகத்தின், ஜன்மாதி – பிறப்பு முதலியன, யத: -எதிலிருந்து உண்டாவதாக ஊகிக்கப்படுகிறதோ ,


    அர்த்தேஷு அபிக்ஞ:-எல்லாவற்றிற்கும் உள்ளிருந்து அனைத்தையும் அறிவதாய், ஸ்வராட்- ச்வயம்ப்ரகாசமாகவும் உள்ள , ய: - எந்தப பரம்பொருள் , முஹ்யந்தி யத் சூரய: - மகான்களும் அறியமுடியாமல் மயங்கும், ப்ரம்ம-வேதத்தை, ஆதிகவயே – ஆதி ரிஷியாகிய பிரம்மாவிற்கு, ஹ்ருதா – சங்கல்பத்தின் மூலம், தேனே -அளித்ததோ


    , யத்ர- எதனிடம், தேஜோ வாரி ம்ருதாம்-அக்னி, நீர் மண் போன்ற பஞ்ச பூதங்களும் , யதா விநிமய:-ஒன்று மற்றொன்று போல் தோற்றமளிக்கும் , த்ரிஸ்ர்க: ம்ருஷா – முக்குண ஸ்ருஷ்டியானது ஒரு பொய்தோற்றமோ,


    ஸ்வேன தாம்னா- தன் ஒளியால் , ஸதா- எப்பொழுதும், நிரஸ்த குஹகம் – நிஷ்களங்கமாய் விளங்குவது எதுவோ, பரம் சத்யம் – அந்த உண்மையான பரம்பொருளை தீமஹி- தியானம் செய்வோம்.


    இதன் விளக்கம்.
    'ஜன்மாத்யஸ்ய யத:' என்பது பிரம்மசூத்ரத்தின் இரண்டாவது சூத்ரம் ஆகும். முதல் சூத்ரத்தில் 'அதாதோ ப்ரம்ம ஜிக்ஞாஸா ' என்று பிரம்மத்தைப்பற்றி அறிய முற்படுகையில் இந்த சூத்ரம் அதைப்பற்றி தெரிவிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் எதனிடமிருந்து ஜன்மாதி, அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை (பிறப்பு, இருப்பு , அழிவு) ஏற்படுகிறதோ அதுதான் பிரம்மம் என்று பொருள். இதற்கு மூலம் 'யதோ வா இமானி பூதானி ஜாயந்தே , யேன ஜாதானி ஜீவந்தி யஸ்மின் அபிசம்விசந்தி தத் விஜிக்ஞாஸஸ்வ தத் ப்ரம்ம,' என்ற உபநிஷத் வாக்கியம். எதிலிருந்து இந்த உயிர்கள் எல்லாம் தோன்றினவோ எதனால் இவை உயிர் வாழ்கின்றனவோ எதில் போய் முடிவில் ஐக்கியம் ஆகின்றனவோ அதை தெரிந்துகொள் அதுதான் ப்இம்மாம் என்று பொருள்.


    இதைத்தான் பாகவதத்தின் ஆரம்ப ஸ்லோகம் கூறுகிறது, பிரம்மமே பரம் சத்யம் உண்மையான பரம்பொருள் அதை தீமஹி, த்யானிப்போம் என்று.
    இந்த பிரம்மத்தை அன்வயம் மூலமும் வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என்பது முதல் வரியின் அர்த்தம். அன்வயம் என்பது உடன்பாடு. பிரம்மமும் ஜீவனும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் , சர்வம் கலு இதம் பிரம்ம , இவை எல்லாமே பிரம்மம் என்று கூறுபவை. வ்யதிரேகம் என்பது எதிர்மறை . பிரம்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது.


    சத்யம் , தாம, பரம் இவை 'சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம ,' என்ற வேதவாக்கியத்தைக் குறிக்கின்றன.
    இந்த மங்களச்லோகம் இந்த பாகவதபுராணத்தின் சாராம்சம் நாராயணனாகிய பரபரம்மமே என்பதி வலியுறுத்துகிறது.


    .இரண்டாவது ஸ்லோகம் அநுபந்த சதுஷ்டயம் என்ற ஒரு நூலின் முக்கியமான நான்கு லக்ஷணங்களை விவரிக்கிறது. அவை என்னவென்றால், க்ரந்தம் , நூலின் பெயர் , விஷயம் , எதைப்பற்றி சொல்கிறது, , அதிகாரி, இதைப்படித்து புரிந்து கொள்ளும் தகுதி உடையோர் யாவர், பலம்- இதைப்படிப்பதனால் என்ன பலன்.


    தர்மோ ப்ரோஜ்ஜிதகைதவோ அத்ர பரமோ நிர்மத்ஸராணாம் ஸதாம்
    வேத்யம் வாஸ்தவம் அத்ர வஸ்து சிவதம் தாபத்ரயோன்மூலனம்
    ஸ்ரீமத்பாகவதே மகாமுநிக்ருதே கிம் வா பரை: ஈஸ்வர:
    ஸத்யோ ஹ்ருதி அவருத்யதே அத்ர க்ருதிபி:சுச்ரூஷுபி: தத் க்ஷணாத்
    மகாமுநிக்ருதே – மஹாமுநிவரான வியாசரால் செய்யப்பட்ட
    அத்ர ஸ்ரீமத்பாகவதே – ஸ்ரீமத்பாகவதம் என்ற இந்த நூலில்
    நிர்மத்ஸராணாம் ஸதாம் –பொறாமை இல்லாத சாதுக்களுக்கு
    ப்ரோஜ்ஜிதகைதவ: -கபடம் நீங்கிய
    பரமோதர்ம: -உயர்ந்த தர்மம் உள்ளது.
    அத்ர-இங்கு
    வாஸ்தவம் – அழியாததாகவும்
    சிவதம் – சிறந்த மங்கலத்தைத் தருவதும்
    தாப்த்ரயோன்மூலனம் – ஆதி தைவிகம் ஆதி பௌதிகம் ஆதிதமு இகமாகிய மூன்று துன்பங்களை அடியோடு களைவதாகவும் உள்ள
    வஸ்து – விஷயம்
    வேத்யம் – அறியப்படுகிறது.
    அத்ர – இங்கு
    க்ரிதிபி: - புண்ணியம் செய்தவர்களும்
    சுச்ரூஷிபி: - இதை ஸ்ரவணம் செய்ய விரும்பினவர்களாகவும் உள்ளவர்களால்
    ஸத்ய: தத் க்ஷணாத் -அந்த க்ஷணத்திலேயே
    ஈஸ்வர: - பகவான்
    ஹ்ருதி- ஹ்ருதயத்தில்
    அவருத்யதே- நிறுத்தப்படுகிறார்
    கிம் வா பரை:- மற்றவைகளால் ஆவதென்ன


    இதில் ஸ்ரீமத்பாகவதம் என்று கிரந்தத்தின் பெயர் சொல்லப்படுகிறது. பொறாமையற்ற சாதுக்கள் என்பது அதிகாரி லக்ஷணம் . கபடம் நீங்கிய உயர்ந்த தர்மம் என்பது விஷயம். இதனால் ஏற்படும் பலன்கள், மங்கலத்தைதருவது, தாவ்பத்ர்யத்தை அழிப்பது, ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்துவது ஆகியவை ஆகும்.


    தாபத்ரயம் என்பது, ஆதி பௌதிகம், மற்றவர்களால் ஏற்படுவது, ஆதிதைவிகம், இயற்கையாலும் தெய்வச்செயலாலும் ஏற்படுவது, ஆத்யந்திகம் – நம் மனம் புத்தி இவைகளின் குறைபாடுகளால் உண்டாவது,


    இங்கு உயர்ந்த தர்மம் என்பது "ஏஷா மே சர்வதர்மாணாம் தர்மோ அதிக தமோ மத: " என்று பீஷ்மர் கூறியபடி நாராயணனை வணங்குவது துதிப்பது சரணமடைவது இவைதான் மேலான தர்மம் என்பது பொருள். மேலும் 'ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ,' என்று கண்ணனே கூறியபடி, பீஷ்மர் இதைத்தான்' 'யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேத் நர:ஏஷ தர்ம: சனாதன்: என்று கூறினார்.


    மூன்றாவது ஸ்லோகம் மிகவும் அழகானது


    நிகமதரோ: கலிதம் பலம் சுகமுகாத் அம்ருதத்ரவஸம்யுதம்
    பிபத பாகவதம் ரசமாலயம் முஹுரஹோ ரஸிகா புவி பாவுகா:
    புவி ரஸிகா: - புவியில் உள்ள ரசிகர்களே
    பாவுகா: - நுட்பம் அறிந்தவர்களே
    : நிகமதரோ; வேதமாகிய மரத்தினுடைய
    அம்ருதத்ரவசம்யுதம் – அம்ருதரசம் நிறைந்த
    சுகமுகாத் – சுகருடைய வாயினின்று
    கலிதம் – விழுந்த
    பாகவதம் – பாகவதம் என்ற
    ரஸமாலயம்- ரசம் நிறைந்த
    பலம் – பழத்தை
    முஹு: முஹு; - திரும்பத் திரும்ப
    பிபத- பருகுங்கள்.
    இது மிக அழகான ச்லோகம் . சுகப்ரம்மரிஷு கிளி முகம் கொண்டராதலால் சுகமுகாத் என்றால் கிளியின் வாயில் இருந்து விழுந்த பழம் என்று பாகவதத்தைக் குறிப்பிட்டுள்ளது. கிளி கொத்திய பழம் ரசம் நிறைந்தது அல்லவா. இது வேத சாராம்சங்களை உள்ளடக்கிய அம்ருத மயமான அதாவது முக்தியைக் கொடுக்கும் பழம்
    இதற்குப்பிறகு பாகவத பிரவசனம் செய்யப்பட்ட சம்பவம் வர்ணிக்கப்படுகிறது. அதைப் பிறகு காண்போம்


    ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 1- அத்தியாயம் 1(தொடர்ச்சி)அத்தியாயம் 2
    நைமிஷே அனிமிஷக்ஷேத்ரே ரிஷய: சௌனகாதய:
    ஸத்ரம் ஸ்வர்காய லோகாய ஸஹஸ்ர ஸமம் ஆஸத
    நைமிஷே -நைமிசாரண்யம் என்ற
    அனிமிஷக்ஷேத்ரே- பகவான் கண்கொட்டாமல் வீற்றிருக்கும் க்ஷேத்திரத்தில் சௌனகாதய: -சௌனகர் முதலிய முனிவர்கள்
    ஸ்வர்காய லோகாய – தேவர்களும் அடைய விரும்பும் உலகத்தை (வைகுண்டத்தை)
    ஸஹஸ்ர ஸமம்- ஆயிரம் வருடங்கள்
    ஸத்ரம் ஆஸத- யாகம் செய்தார்கள்.


    .நைமிசாரண்யத்தில் பகவான் வன ரூபத்தில் இருக்கிறார் என்பதது ஐதீஹம் . அவர் அனிமிஷ அல்லது கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


    நைமிசாரண்யம் என்பதன் பொருள் நேமி: சீர்யதே யத்ர, அதாவது கர்மா என்ற சக்கரத்தின் முனை இங்கு மழுங்கப்படுகிறது என்பதாகும்.: அதாவது பிறப்பு இறப்பு என்ற சம்சாரத்தின் சுழற்சி நின்றுவிடுகிறது. ஏனென்றால் பகவானின் கண்கொட்டாத பார்வை இந்த க்ஷேத்ரத்தில் எப்போதும் கிடைப்பதால்.
    ஸ்வர்கம் என்ற சொல் இங்கு ஸ்வர்பி: கீயதே இதி ஸ்வர்க்க: : என்று பொருள் கூறப்படுகிறது . அதாவது சுவர்க்கவாசிகளும் விரும்பும் உலகம் , பரமபதமாகிற வைகுண்டம் அல்லது மோக்ஷம்.


    .அச்சமயம் அங்கு சூதபௌராணிகர் வருகிறார்.. அவரை அந்த ரிஷிகள் சில கேள்விகள் கேட்கிறார்கள் அதன் விடையாக அவர் ஸ்ரீமத்பாகவத புராணத்தைக் கூறுகிறார்.


    1. எல்லா சாஸ்திரங்களுடைய சாரமானது எது?
    2. பகவான் எதற்காக தேவகி வசுதேவரிடம் தோன்றினார்
    3.அவருடைய அவதாரங்களைப்பற்றி கூறுங்கள்.
    4. தன்னை மறைத்துகொண்டு மனிதனைப்போல் நடித்த அவருடைய மனித இயல்பினை மீறிய செயல்களைப் பற்றி கூறுங்கள்.
    5.கிருஷ்ண பகவான் மறைந்த பிறகு தர்மம் யாரை சரண் அடைந்திருக்கிறது?
Working...
X