Announcement

Collapse
No announcement yet.

Sahasra kalasabhishekam -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sahasra kalasabhishekam -Periyavaa

    அனுபவம் 5
    பெரியவா சிவாஸ்தானத்திலிருந்து கிளம்பி கர்னாடகா, மஹாராஷ்ரா , ஆந்திரா எல்லாம் பாதயாத்திரை பண்ணிவிட்டு, கர்னூலில் கிளம்பி
    காஞ்சிபுரம் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவம்.
    அந்த காலகட்டத்தில், பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் திரும்புவாளா என்று பலருக்கு சந்தேகம் இருந்தது. தேனம்பாக்கம்
    சிவாஸ்தானத்தில் பெரியவாளுடய close friend பிள்ளையார்
    ஒருவர் இருந்தார். (இப்பவும் இருக்கிறார்). . பெரியவா காஞ்சிபுரம்
    திரும்பிவிட்டால் 2016 குழக்கட்டை பண்ணுகிறேன் என்று அவரிடம்
    அம்மா (பொள்ளாச்சி ஜயம்) வேண்டிக்கொண்டாள். பெரியவா திரும்பி வந்தவுடன் சிவாஸ்தானத்தில் ஒரு கொழுக்கட்டை
    factoryயே நடந்தது.
    காஞ்சிபுரத்தில் அம்மாவுக்கு பரிச்சயமான ஒரு ஶ்ரீவைஷ்ணவர்.
    சில வைஷ்ணவர்கள் சிவன் அம்பாள் கோவில்களுக்கு செல்வதுண்டு.
    நம் வைஷ்ணவர் இந்த small groupஐ சேர்ந்தவர். ஒரு நாள்
    காமாக்*ஷியம்மன் கோவிலில் இவரை அம்மா சந்தித்தார். அம்மாவிடம்
    தன்னுடைய பெரிய குறை ஒன்றை சொல்லி வருத்தப்பட்டார்.
    அவருடைய ஐந்து வயதுப் பெண் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. தவமிருந்து பிறந்த குழந்தை ஊமையாகிவிட்டதே.
    அம்மா அவரிடம் " பெரியவாளிடம் ஏன் சொல்லலை".
    " இதெல்லாம் பெரியவாளிடம் சொல்லலாமா மாமி"
    "ஸர்வேச்வரனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்றது "
    வைஷ்ணவர் convince ஆகிவிட்டார்.
    மறு நாள் காலை மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெரியவாளிடம் வந்தார். தரிசனத்திற்கு இவர் முறை வந்தவுடன், நமஸ்காரம் பண்ணிவிட்டு, தயங்கித் தயங்கி
    நின்றார். பெரியவா இவரைப் பார்த்து " என்ன விஷயம் ""
    என்று கேட்டார். "என் பொண்ணுக்கு அஞ்சு வயஸாறது. வாய் பேசல.
    குழந்தை பேசிக் கேக்கணும்னு என் ஆம்படயா ரொம்ப ஆசைப் படறா""
    உடனே பெரியவா " ஏன் உனக்கு அந்த ஆசை இல்லயா". என்றதும்
    நம்ம வைஷ்ணவர் கொஞ்சம் அசடு வழிந்தார். சிறிது நேரம் நிசப்தம்.
    கொஞ்ச நேர மௌனத்திற்குப் பின் பெரியவா "காமாக்*ஷி பாத்துப்பா
    போய்ட்டு வா "" என்று அபய ஹஸ்தம் காட்டி அனுப்பி வைத்தார்.


    குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றவர்கள், வீட்டிற்குள்
    நுழைந்தவுடன், அந்த பெண்குழந்தை " அம்மா பசிக்கிறது மம்மம்
    பொடறயா" என்று குரல் கொடுத்தது. வைஷ்ணவர் அலறிவிட்டார்.
    அவஸரம் அவஸரமாக குழந்தைக்கு நாலு வாய் சாதத்தை
    அடைத்துவிட்டு, குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டு இரண்டு
    பேரும் பெரியவாளிடம் ஓடினார்கள்.
    பெரியவாளைப் பார்த்ததும் , விழுந்து நமஸ்கரித்து ஹோ என்று
    அழுதார். " பெரியவா அனுக்ரஹம் ! பெரியவா அனுக்ரஹம்! பெரியவா அனுக்ரஹம்! " வேரொன்றும் பேச வரவில்லை. இவரைப் பார்த்து பெரியவா
    ""நன் ஒண்ணும் பண்ணல்ல. காமாக்*ஷியின் அனுக்ரஹம். ""
    ஶ்ரீ வைஷ்ணவர்
    உடனே "நான் ஏதாவது பண்ணணுமே. ! நான் ஏதாவது பண்ணணுமே "
    ""ஒண்ணு பண்றயா ! அம்பாளுக்கு ஒரு.......சஹஸ்ர கலச அபிஷேகம்
    பண்ணி வைக்கறயா. ".
    ""ஆஹா. பேஷா பண்ணிடறேன்."" என்ன ப்ரமாதம். ஒரு கலசம் நூறு
    ரூபாய் என்றால் கூட (in eightys) ஆயிரம் கலசம் ஒரு லக்*ஷம் ஆகும்.
    குழந்தைக்காக இது கூட முடியாதா ! என்று மனதில் எண்ண ஓட்டம்.
    அவரைப்பார்த்து பெரியவா "" அம்பாளுக்கு கலசம் சொப்பு பித்தள
    எல்லாம் பண்ணக்கூடாது. ஸ்வர்ண கலச அபிஷேகம்தான் பண்ணணும்""
    அம்மாடியோ !!! நம்ப மாமா மூஞ்சில ஈயாடல . ஒரே ஷாக். நடக்கற
    காரியமா என்ன. இது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன !!! இதுவும்
    தெரியும். இதற்கு solution எங்கேயிருந்து வரும் என்றும் தெரியும்.!!
    அங்கே நின்றுகொண்டிருந்த அம்மா, ஶ்ரீவைஷ்ணவரை ஜாடைகாட்டி
    அழைத்தாள். "" நீங்கள் பெரியவாளிடம் கலசம் சின்னதாக காசிச்சொம்பு மாதிரி இருக்கலாமா என்று கேளுங்கோ "
    "" அது கூட எப்படி மாமி "".
    ""இதை முதல்ல கேளுங்கோ "".
    பெரியவாளிடம் கேட்டார். பெரியவா. " அப்படியே பண்ணு " என்றார். After this Amma took over.
    பெரியவா முன்னால போய் நின்றாள். என்ன என்று பெரியவா
    கை ஜாடையாகக் கேட்டார்.
    ஸஹஸ்ர ஸ்வர்ண கலச அபிஷேகங்கறது ரொம்ப பெரிய புண்யகார்யம். பலன் எல்லாருக்கும் கிடைக்கிறமாதிரி எல்லாருமா
    சேர்ந்து பண்ணலாமா"
    உடனே பெரியவா ""எந்த புண்ய கார்யமும் எல்லாரும் கலந்து
    பண்றது ரொம்ப விசேஷம். அப்படியே பண்ணுங்கோ"
    அம்மா விடுவதாக இல்லை.
    "ஒரு 1/2 லிட்டர் ஜலம் பிடிக்கற மாதிரி சொப்பு சொம்பு பண்ணி,
    உள் பக்கம் , தங்க ரதத்தில பண்ற மாதிரி , தங்க ரேக்கு பதிச்சு
    கலசம் வைக்கலாமா""
    "" பேஷா பண்ணலாம். தீர்த்தம் தங்கத்தில இருக்கிற மாதிரி
    பாத்துக்கோங்கோ ""
    அப்பாடா பொழச்சோம் . இல்லாட்டா 1008 கலசம் தங்கத்தில
    பண்றது நடக்கற காரியமா என்ன .
    உடனே திட்டம் தீட்டப்பட்டு , ஒரு குடும்பத்துக்கு. 100 ரூபாய்
    என்று வசூலிக்கப்பட்டு, தங்கக் கலசங்கள் ரெடி.
    பிறகென்ன, விஜயதசமிக்கு மறு நாள் கலசஸ்தாபனம் செய்யப்பட்டு, த்வாதசியன்று காலை. அம்பாளுக்கு ஜாம் ஜாம் என்று பெரியவா
    முன்னிலையில் அபிஷேகம் நடந்து முடிந்தது.
    ஒவ்வொரு வருஷமும் விஜயதசமிக்கு அடுத்த த்வாதசியன்று இந்த
    ஸஹஸ்ர கலச அபிஷேகம் இன்று வரை நடக்கிறது.
    வருங்காலத்திலும் நடக்கும்.
    நாம் இவ்வளவு நேரமாக பார்த்துக்கொண்டிருந்த ஶ்ரீவைஷ்ணவர்
    வேறு யாரும் இல்லை. காஞ்சி ஶ்ரீமடத்தில், மாலை வேளைகளில்
    கச்சேரி போன்ற நிகழ்ச்சிகளின்போது , மைக்கை கையில்
    வைத்துக்கொண்டு, 'அன்னை காமாக்*ஷியின் அருளால்' என்று
    கம்பீரமாக குரல் கொடுத்துக்கொண்டிருந்த , ஸ்மீபத்தில்
    வைகுண்ட ப்ராப்தி அடைந்த நமது TV சாரியார் அவர்கள்தான்.
    ஹர ஹர சங்கர
Working...
X