Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 46 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 46 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்&#

    ��



    श्री वरदराज पंचाशत् 46 / 51







    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்




    ��


    வரதா ! உன் அழகை அனுபவிக்கும் கைங்கர்ய பரர்கள் , பாக்யசாலிகள் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��





    ��


    वरद ! तव , विलोकयन्ति ! धन्या: ;

    मरकत , भूधर , मातृकायमाणम् ।

    व्यपगत , परिकर्म , वारवाणम् ,

    मृगमद , पंक , विशेष , नीलम् ; अंगम् ॥



    ��


    வரத ! தவ , விலோகயந்தி ! தன்யா: ;

    மரகத , பூதர , மாத்ருகாயமாணம் |

    வ்யபகத , பரிக்ரம , வாரவாணம் ;

    ம்ருகமத , பங்க , விஶேஷ , நீலம் ; அங்கம் ||


    ��


    वरद ................ வரம் தரும் பெருமானே !

    मरकत ............. மரகத ,

    भूधर ............... மலைக்கு ,

    मातृकायमाणम् ... மூல வடிவம் போன்றதும் ;

    परिकर्म ............ கவசம் ,

    वारवाणम् ......... ஆபரணம் இவற்றைக்,

    व्यपगत ............ கழற்றிய நிலையிலும் ;

    मृगमद ............. கஸ்தூரிக் ,

    पंक ................ குழம்பினால் ,

    विशेष नीलम् ...... மிக , நீல நிறம் ஆனதும் ஆன ;

    तव ................. உன்னுடைய ,

    अंगम् .............. திருமேனியை ;

    धन्या: .............. பாக்ய சாலிகள் ,

    विलोकयन्ति ...... ஸேவிக்கின்றனர் !



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * வரம் தரும் பேரருளாளனே !

    * உன்னை ஸேவிக்க , ஏகாந்தமான சமயங்கள் உண்டு . அவ்வப்பொழுது , திருமேனியில் அணிந்துள்ள , திருவாபரணங்கள் , திரு ஆயுதங்கள் , கவசம் இவற்றையெல்லாம் ; கழற்றி , வைக்க , நேரும் . அப்பொழுதுதான் , உன் , இயற்கையான , திருமேனி அழகைக் , கண்டு , அனுபவிக்க இயலும் .

    * இந்தத் திருமேனியை , ஸேவிக்கும் போது , இதைப் பார்த்துத் தான் , மரகத மலை , படைக்கப்பட்டதோ , என்று தோன்றும் .

    * மேலும் , கஸ்தூரியைக் குழம்பாக்கி , உன் திருமேனியில் , நிரம்ப அணிவிப்பதால் , உனது இயற்கையான நீலநிறம் , அதனால் , இன்னும் மிகுந்து விளங்கும்.

    * இந்த ஏகாந்தத் திருமேனி ஸேவை , எல்லோரும் பெறமுடியுமோ ? உனக்கு அந்தரங்கக் கைங்கர்யம் செய்யும் , சில புண்ணியசாலிகளே , ஸேவித்து , மகிழ்வர் !






    ��




    Last edited by sridharv1946; 25-08-18, 09:35.
Working...
X