336. இத்தரணி
336பொது
தத்ததன தானத் தனதானா
இத்தரணி மீதிற் பிறவாதே
எத்தரொடு கூடிக் கலவாதே
முத்தமிழை யோதித் தளராதே
முத்தியடி யேனுக் கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் குருநாதா
சத்தசொரு பாபுத் தமுதோனே
நித்தயக்ரு தாநற் பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.பதம் பிரித்தல்

இத்தரணி மீதில் பிறவாதே
எத்தரொடு கூடி கலவாதே


இத்தரணி மீதில் பிறவாதே - இந்தப் பூமியில் நான் பிறவாமலும். எத்தரோடு - வஞ்சகர்களுடன். கூடிக் கலவாதே - கூடிக் கலந்து கொள்ளாமலும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
முத்தமிழை ஒதி தளராதே
முத்தி அடியேனுக்கு அருள்வாயே


முத்தமிழை ஓதித் தளராதே - இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களையும் படித்துப் படித்துச் சோர்வு அடையாமலும். முத்தி அடியேனுக்கு அருள்வாயே - முத்தியை அடியேனுக்கு அருள் புரிய வேண்டுகின்றேன்.


தத்துவ மெய் ஞான குரு நாதா
சத்த சொருப புத்த அமுதோனே


தத்துவ மெய்ஞ் ஞானம் - உண்மைப் பொருளாய மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்க வல்ல. குரு நாதா - குரு மூர்த்தியே. சத்த சொருபா - ஒலி உருவத்தனே. புத்த - புதிய. அமுதோனே - அமுதம் போன்றவனே.


நித்திய க்ருதா நல் பெரு வாழ்வே
நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே.


நித்யக்ருதா - நித்திய வாழ்வை (வீட்டுப் பேற்றைத்) தருபவனே. நல் பெரு வாழ்வே - நல்ல பெருஞ் செல்வமே. நிர்த்த - ஆடல் புரியும். ஜெக ஜோதிப் பெருமாளே - உலகத்தில் சோதியாய் விளங்கும் பெருமாளே.சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
முத்தி நெறியைக் குறிக்கும் துதிப் பாடல்.
இந்தப் பாடலின் அடிகளைக் கொண்டு பற்பல தனிப் பாடல்களை அமைக்கலாம். (1,2,3,4) (5,6,7,8) (1,2,5,4) (1,2,6,4) (1,2,7,4) (1,2,4,8) (2,4,6,8) (1,4,5,6) ( 2,4,5,6) (3,4,5,6).