Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 1 அத்தியாயம் 6


    அத்தியாயம் 6
    நாரதர் பூர்வஜன்மத்தில் ஒரு பணிப்பெண்ணின் மைந்தராக இருந்தார். அவர் தாய் யோகிகளுக்கு சேவை செய்து வந்தாள். நாரதர் சிறு வயதிலேயே அடக்கம் உடையவராகவும் கைங்கர்யத்தில் ஈடுபாடுடனும் இருந்ததால் அந்த யோகிகள் அவரிடம் திருப்தியடைந்து ஞானத்தையும் பக்தியையும் அவருக்கு போதித்தனர்., அதனால் அவருக்கு உலகப்பற்று நீங்கியது. ஆனால் அவர் தாய் அவரிடம் உயிரையே வைத்திருந்ததால் அவளை விட்டுச்செல்ல முடியவில்லை.


    பிறகு அவர் தாய் விதிவசமாக பாம்பு கடித்து இறந்தவுடன் அவர் கால் போன வழியே போய் மனித சஞ்சாரமில்லாத ஒரு இடத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். பரமாத்மாவை முழுமனதுடன் தியானித்து பக்தியால் பரவசமான சித்தத்துடன் பகவானைக் காணும் பேராவலுடன் இருந்தவரின் இதயத்தில் மெள்ள மெள்ள பகவான் தோன்றினார். பேரானந்தத்தில் மூழ்கி கண்ணீர் பெருக அவர் பகவானை தரிசிக்கையில் ஸ்ரீஹரியானவ்ர் மறைந்து விட்டார்.


    மறுபடி இந்த உலக நினைவு வந்தவுடன் மறைந்து விட்ட பகவானைக் காண மறுபடி த்யானத்தில் ஆழ்ந்தார். ஆனால் தர்சனம் கிடைக்காமல் வருந்தியபோது பகவானின் கம்பீரமான அன்போடு கூடிய வார்த்தைகளைக் கேட்டார். பகவான் கூறினதாவது,


    "வாசனாமலங்கள் நீங்காதவர்க்கும் யோகத்தில் பக்குவம் அடையாதவர்க்கும் நன் காண்பதற்கரியவன் . உனக்கு என்னிடம் பற்றை உண்டாக்குவதற்காக இந்த தரிசனம் காண்பிக்கப்பட்டது . இந்த தேகம் போன பிறகு நீ எனது பரிஜனங்களுள் ஒருவனாகப் போகிறாய். "


    மதிர்மயி நிபத்தேயம் ந விபத்யேத கர்ஹிசித்
    ப்ரஜாஸர்க நிரோதே அபி ஸ்ம்ருதிஸ்ச மதனுக்ரஹாத் (பாகவதம்.1.6.25)


    "என்னிடம் நிலைத்த இந்த மதியானது ஒருபோதும் இனி அழிவுறாது. ப்ராஜைகளின் சிருஷ்டியிலும் ப்ரளயத்திலும் கூட இந்த நினைவு என் அனுக்ரஹத்தால் அழியாது."


    பிறகு தன் வாழ்நாளை பகவானின் நாமத்தை பாடிவதிலும் அவனைப்பற்றிய சிந்தையிலும் கழித்து தன் வாழ்நாள் முடியும் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
    கல்பத்தின் முடிவில் பிரம்மா நாராயணனிடத்தில் ஒடுங்கினபோது நாரதரும் பிரமனின் மூச்சுக்காற்றோடு உட்புகுந்தார். ஆயிரம் சதுர்யுகங்களுக்குப் பிறகு மீண்டும் பரமன் இவ்வுலகை சிருஷ்டிக்க எழுந்த போது பிரமனிடம் இருந்து மரீசி முதலிய ரிஷிகளுடன் நாரதரும் தோன்றினார்.


    நாராயணனின் அனுக்ரஹத்தால் த்ரிலோக சஞ்சாரியாகி பகவானின் மகிமையை பரப்ப பகவானாலேயே கொடுக்கப்பட்ட வீணையை மீட்டிக்கொண்டு சஞ்சாரம் செய்து வருவதாக நாரதர் வ்யாஸருக்குத் தெரிவித்தார்.


    மேலும் அவர் கூறியதாவது, ஹரிலீலை என்பது சம்சார சாகரத்தில் மூழ்கி தத்தளிப்பவர்க்கு ஒரு கப்பல் போன்றதாகும். முகுந்த சேவையால் அன்றி காமத்தாலும் பேராசையாலும் கெடுக்கப்பட்ட மனது யோகவழிகளால் சாந்தியடையாது.
    இங்ஙநம் கூறிவிட்டு நாரதர் வியாசரிடம் விடைபெற்று வீணையை மீட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்
Working...
X