Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 01 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 01 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 01 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

    ��

    எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமான , ஶ்ரீ ஹயக்ரீவரை , வழிபடுகிறோம் !


    ��










    ��




    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் முன்னுரை :



    ��


    * ஸ்ரீ தேசிகன் , எம்பெருமானைப் பற்றிப் , பாடிய பல ஸ்தோத்திரங்களுள் , அவர் திருவாக்கிலிருந்து , முதலில் அவதரித்தது , இந்த ஸ்தோத்திரம் .

    * இது 33 ஸ்லோகங்கள் கொண்டது .

    * எம்பெருமான் , உலகை வாழ்விக்கச் , செய்த பல்வேறு அவதாரங்களில் , ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரமும் , ஒன்று . ஹயக்ரீவன் , குதிரை போன்ற , கழுத்தை உடையவன் . இந்த அவதாரத்தில் , திருமுக மண்டலம் மட்டும் , குதிரை போன்று உள்ளது .

    * இந்த அவதாரம் , தோன்றிய நாள் , ஆவணி மாதத் திருவோணம் .

    * இந்த எம்பெருமானே , கல்விக்கு , முதல் கடவுள் , ஆவான் .

    * இவன் ஓம்கார வடிவானவன் , என்று நூல் கூறும்.
    * ஸ்ரீ தேசிகன் , கருட பகவானால் , ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் , உபதேசிக்கப் பெற்று , திருவஹீந்த்ர புரத்தில் , மலைமேல் , இம்மந்திரத்தை , ஜெபித்து தியானித்தார் .

    * அதனால் மகிழ்ந்த , எம்பெருமான் , ஸ்ரீ ஹயக்ரீவனாய் , ஸ்ரீ தேசிகன் எதிரில் காட்சி தந்து , அருள்புரிந்தார் .

    * அச்சமயத்தில் , அவனைப் பற்றிப் , பாடியது இந்த ஸ்தோத்திரம் .

    * எம்பெருமானது திருமேனி , படிகம்போல் தூய வெண்மையானது .

    * திருக்கைகள் நான்கு. அவனது , வலத் திருக்கைகள் இரண்டிலும் , திருவாழியும் , ஞான முத்திரையும் இடத் திருக்கைகள் இரண்டிலும் , திருச்சங்கமும் , புத்தகமும், திகழ்கின்றன .

    * இவன் வெண் தாமரையின் மீது எழுந்தருளியுள்ளான் .

    * ஸ்ரீ தேசிகன் ஶ்ரீ ஹயக்ரீவனுடைய , விக்கிரகத்தை , நித்ய ஆராதனத்தில் , ஆராதித்து வந்தார் .

    * அதனாலேயே , எங்கும் ஸ்ரீ தேசிக விக்ரகத்துடன், ஸ்ரீ ஹயக்ரீவர் விக்ரஹமும் , ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

    * இந்த ஸ்தோத்திரத்தை , பக்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு , உண்மை அறிவும் , உயர்ந்த வாக்கு வன்மையும், உண்டாகும் என்று கூறி பலன் கூறி தலைக்கட்டு என்றார் ஸ்ரீ தேசிகன்.

    [ இங்கு வைபவ பிரகாசிகை , குரு பரம்பரை முதலியவற்றைத் தழுவி , இந்த ஸ்தோத்திரம் , முதலில் அவதரித்ததாக வரையப்பட்டுள்ளது . ஆராய்ச்சியில் இறங்கிய , பெரியோர் சிலர் , இதற்கு முன்பே , சில ஸூக்திகள் , ஸ்வாமி திருவாக்கிலிருந்து , அவதரித்து விட்டதாய்க் ,கூறுவர்.]













    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    झान - आनन्द , मयम् ; देवम् ; निर्मल , स्फटिक - आकृतिम् ; |

    आधारम् , सर्व , विद्यानाम् ; हयग्रीवम् ; उपास्महे ॥


    ��


    ஜ்ஞாந - ஆநந்த , மயம் ; தேவம் ; நிர்மல , ஸ்ப்படிக - ஆக்ருதிம் ; |

    ஆதாரம் , ஸர்வ , வித்யாநாம் ; ஹயக்ரீவம் ; உபாஸ்மஹே ||


    ��


    झान ......... ஞானம் ,

    आनन्द ...... ஆனந்தம் ,

    मयम् ........ இவற்றின் , வடிவமானவரும் ;

    निर्मल ....... மாசற்ற ,

    स्फटिक ..... படிக மணி போன்ற ,

    आकृतिम् ... திருமேனி உடையவரும் ;

    सर्व .......... எல்லா ,

    विद्यानाम् ... கலைகளுக்கும் ,

    आधारम् .... உறைவிடம் ஆனவரும் ;

    हयग्रीवम् ... குதிரை போன்ற , திருக் கழுத்தை உடையவரும் ஆன ;

    देवम् ........ எம்பெருமானை ,

    उपास्महे .... வழிபடுகிறோம் !

    ��


    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:



    ��


    * எம்பெருமான் , அடியார்கள் உஜ்ஜீவிப்பதற்காகச் , செய்த பல்வேறு அவதாரங்களில் , திருமுக மண்டலம் மட்டும் , குதிரையினது போன்ற , அவதாரமும் ஒன்று .

    * இந்த அவதாரத்தில் , 'ஹயக்கிரீவன் ' என வழங்கப்பெறும் எம்பெருமான் , ஞானம் ,ஆனந்தம் , இவற்றின் வடிவமாக நிற்பதோடு , இந்த குணங்கள் , எல்லையில்லாதனவாய்த் , தன்னிடம் இருக்கவும் பெற்றவன் .

    * இவனது திருமேனி , சிறிதும் மாசற்ற ஸ்படிக மணி போல் தூய வெண்மை நிறத்தோடு விளங்குவது .

    * உலகிலுள்ள எல்லா கலைகளுக்கும் , உறைவிடமாகவும் , அவற்றை , அனைவருக்கும் , அருளும் தெய்வமாகவும் , நிற்பவன் , இந்த எம்பெருமான் .

    * இத்தகைய , பரிமுகப் பெருமானை , நாம் இடைவிடாது , தியானிக்கின்றோம் !






    ��







    Last edited by sridharv1946; 31-08-18, 11:12.
Working...
X