Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 02 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 02 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 02 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்



    ��


    ஸ்ரீ ஹய வதனரைத் , துதிக்கக் கடவோம் !








    ��


    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��






    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    स्वत: , सिद्धम् ; शुद्ध , स्फटिक , मणि , भूभृत् , प्रतिभटम् ;

    सुधा , सध्रीचिभि: - द्युतिभि: - अवदात , त्रिभुवनम् ।

    अनन्तै: - त्रय्यन्तै: - अनुविहित , हेषा , हलहलम् ;

    हत - अशेष - अवद्यम् ; हय , वदनम् ; ईडीमहि ! मह: ॥


    ��



    ஸ்வத: ஸித்தம் ; ஶுத்த , ஸ்ப்படிக , மணி , பூப்ருத் , ப்ரதிபடம் ;

    ஸுதா , ஸத்ரீசிபி: - த்யுதிபி: - அவதாத , த்ரிபுவநம் |

    அநந்தை: - த்ரய்யந்தை: - அநுவிஹித , ஹேஷா , ஹலஹலம் ;

    ஹத - அஶேஷ - அவத்யம் ; ஹய , வதனம் ; ஈடீமஹி ! மஹ: ||



    ��



    स्वत: ........ தானே ,

    सिद्धम् ....... தோன்றியவரும் ;

    शुद्ध .......... மாசற்ற ,

    स्फटिक ..... படிக ,

    मणि ......... மணியால் ஆகிய ,

    भूभृत् ......... மலையை ,

    प्रतिभटम् .... ஒத்தவரும் ;

    सुधा ......... அமுதம் ,

    सध्रीचिभि: .. போன்ற ,

    द्युतिभि: ..... ஒளிகளால் ,

    त्रिभुवनम् .... மூவுலகையும் ,

    अवदात ...... வெண்மை ஆக்குவரும் ;

    अनन्तै: ....... அளவற்ற ,

    त्रय्यन्तै: ...... வேதாந்தங்களால் ,

    अनुविहित .... தொடர்ந்து ஒலிக்கும் ,

    हलहलम् ..... 'ஹலஹல' என்ற

    हेषा ........... கனை குரலை , உடையவரும் ;

    अशेष ......... எல்லா ,

    अवद्यम् ....... தீங்கையும் ,

    हत ............ ஒழிக்க வல்லவரும் ;

    हय वदनम् .... குதிரை போன்ற , திருமுகம் உடையவரும் ஆன ;

    मह: ........... ஒளி வடிவத்தை ,

    ईडीमहि ....... துதிக்கக் கடவோம் !

    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    ��


    * எம்பெருமான் , அடியார்களின் உய்விக்க , ஹயக்ரீவனாய்த் , தானே அவதரித்தான் .

    * இவனுடைய திருமேனி , தூய ஸ்படிக மணிகளால் ஆகிய , ஒரு மலை போல் விளங்குகிறது .

    * இவன் , அமுதம் போன்ற , தன் வெண்மையான ஒளிகளை , வீசச் செய்து , மூவுலகமும் , வெண்மை நிறம் ஆக்குகிறான் .

    * இவன் , குதிரை உருவுக்கு ஏற்றவாறு , கனைக்கும்போது , எழும் , 'ஹலஹல' எனும் , ஒலியில் , எல்லையற்ற வேதாந்தங்களில் கருத்துகள் அடங்கியுள்ளனவாகத் தோன்றுகின்றன.

    * இவ்வொலியைக் கேட்பவர்களுக்கு , வேதாந்த அர்த்தங்கள் , நன்கு விளங்குமாறு செய்கிறான் இப்பெருமான் .

    * இவன் , அடியார்க்கு வரும் , எல்லாத் தீமைகளையும் , ஒழிக்கிறான் .

    * இவ்வாறு , தேஜோ மயமாக நிற்கும் , ஸ்ரீஹயக்ரீவரை, நாம் துதிக்க கடவோம் !




    ��



Working...
X